Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

”சம்பளம் ரூ.10/- உயர்ந்தால் விலைவாசியோ ரூ.20/- எகிறுது. இப்படி இருந்தா எப்ப‍டிங்க?

”சம்பளம் ரூ.10/- சதவிகிதம்தான் உயர்ந்தால் விலைவாசியோ ரூ.20/- சதவிகிதமா எகிறுது. இப் படி இருந்தா எப்ப‍டிங்க? பட்ஜெட் எப்ப‍டி போட்டாலும் துண்டு விழு து? வருமான த்திற்கு என்ன‍தான் வழி? எதில் முதலீடு செஞ்சா தாக் குப் பிடிக்க முடியும் என்று தெரிய வில்லை யே என்று நம்மில் பலர் புலம்பி தீர்ப்ப‍துண்டு.

சிறிது திட்டமிட்டால் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துவிடலாம். முதலில், உங்களைச் சுற்றி செல வைக் குறைக்கும் வழிகள் என்னென்ன இருக்கின்றன எனக் கவனி யுங்கள்.

பர்ஸ் கனக்கும்!

ஒரு சிறிய உதாரணம்… ஒருவர் சென்னையிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலுள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் வேலை பார்க் கிறார் எனில் தினமும் 90 கி.மீ. பயணம் செய்கிறார். அவருக்கு சென்னை மயிலாப்பூரில் சொ ந்த வீடு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டால் 20,000 ரூபாய் கிடைக்கும். இதே அளவு வசதி உள்ள வீடு மஹிந்தி ரா வேர்ல்ட் சிட்டிக்கருகில் 10,000 ரூபா ய்க்கு கிடைக்கும்போது, அவர் அலுவல கம் அருகே வீட்டை மாற்றிக் கொள்வது தான் புத்திசாலித்தனம். இதனால் பர்ஸ¨ ம் கனக்கும். முதுகுத் தண்டும் தப்பிக்கும்! இதன் மூலம் போக்குவர த்தையும் சேர்த்து மாதம் 12,000 மிச்சப்படுத்தலாம். இப்போது புறநக ர்களில் நல்ல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் இருப்பதால் அங்கே வீட்டைமாற்றிக்கொ ள்வதில் பாதிப்பு எதுவும் வராது.

இதுவே அலுவலகம் நகரத்துக்குள் இரு ந்து, சொந்த வீடு புறநகரில் இருந்தால், உடல் நலன் கருதி அலுவலகம் அருகே வீட்டை மாற்றிக்கொள்வது நல்லது. உதாரணமாக, ஆவடியில் சொந்த வீடு உள்ளவர் சுமார் 30 கி.மீ. தள்ளியுள்ள அண்ணா சாலையிலுள்ள அலுவலகத்து க்கு வந்துசெல்லும்செலவையும் உடற் சோர்வையும் ஆரோக்கியக் குறைவையு ம் கணக்கிட்டால் சொந்த வீட்டை ஆறா யி ரத்துக்கு வாடகைக்கு விட்டுவிட்டு நு ங்கம்பாக்கத்திலோ, ராயப்பேட்டையி லோ, திருவல்லிக்கேணியி லோ 10,000ரூபாய்க்கு ஒருவீட்டை வாடகைக்கு எடுத்தால்கூட (பய ணச் செலவு மாதம் 2,500 ரூபாய் மற்றும் ஆரோக்கியம்) நஷ்டமில் லை. பொதுவாக, வீடு, அலுவலகம், பள்ளிக்கூடம், ஷாப்பிங் கடை கள் என அன்றாடம்செல் லும் இடங்கள் எல்லாம் அருகரு கே அமைந்திருந்தால்தான் நி றையச் செலவைக் குறைக்க முடியும்.

வாங்கிக் குவிக்காதீர்கள்!

மேலும், விருப்பப்பட்டபொரு ட்களை எல்லாம் வாங்கிக் குவிக்காதீர்கள். தேவைக்கு ம ட்டும் வாங்குங்கள். வாரத்து க்கு ஒருமுறை ஓட்டலுக்குப் போய் சாப்பிடுகிறவர்கள், சினிமாவு க்கு போகிறவர்கள் அதனை 15 நாளைக்கு ஒருமு றை அல்லது மாதத்துக்கு ஒரு முறை என்று குறைத்துக் கொள்ளலாம். வருமானம் பெரிய அளவி ல் உயராதபட்சத்தில் செலவைக் குறைப்பதைத்தவிர வேறுவழியில் லை என்பதை நீங்களும் உங்கள் வீட்டினரும் புரிந்துகொண்டால் இ ந்த ஆலோசனையை முகம் சுளிக்காமலேயே செயல்படுத்துவீர்கள். 100 ரூபாய் செலவைக்குறைப்பது 1,000 ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம்.

பத்து நிமிடமாவது ஒதுக்குங்கள்!

விலை அதிகமாக இருக்கும் உண வுப் பொருட்கள், காய்கறிகள், பழ ங்களை குறைவாகப் பயன்படுத்து ங்கள். அதே நேரத்தில், மலிவாக க் கிடைக்கும் பொருட்களை அதி கம் பயன்படுத்தி, மற்றபொருட்களி ன் செலவைக்குறையுங்கள். கல் வி, ஆரோக்கியம், உணவு இந்த மூன்றுக்கான செலவைத் தவிர எதி லெல்லாம் செலவைக் குறைக்க முடியுமோ, குறையுங்கள்.

உலக அளவில் அதிகமாக சேமிப்பவர் களில் இந்தியர்கள் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள். நாட்டின் ஜி.டி.பி.-ல் சுமார் 37% மக்களின் சேமிப்பாக இரு க்கிறது. ஆனால், இதனை புத்திசாலி தனமாக அதிக வருமானம்தரும் திட்ட ங்களில் முதலீடுசெய்து லாபமீட்டுகி றார்களா என்றால் இல்லை. தினசரி 8-10 மணி நேரம் கஷ்டப்பட்டு சம்பா தித்த பணத்தை முதலீடு செய்ய நாம் பத்து நிமிட நேரம்கூட ஒதுக்குவதில் லை. இந்தப் போக்கை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

காலை வாரும் கவர்ச்சித் திட்டங்கள்

சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் பணத்தை அவசரத் தேவையில்லா தபோது அவற்றை குறுகியகால டெபாசிட்டுக்கு மாற்றி சில சதவிகி தம் கூடுதல் வருமானத்தைப் பெ ற முயற்சி செய்யலாம். பல நேர ங்களில் பாதுகாப்பான முதலீடு என்று நினைத்து மிக்ஸி, கிரை ண்டர் பரிசுகளுக்கு ஆசைப்பட்டு, கவர்ச்சிகரமான திட்டங்களில் முதலீடு செய்து உள்ளதையும் இழக்கிறார்கள் நம் மக்கள். அதே நேரத்தில், ஒளிவு மறைவற்ற, ரிஸ்க் உள்ள அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய் யத் தயங்குகிறார்கள்.

வரிச் சுமையை குறையுங்கள்…

முதலீட்டின் நோக்கம் அதிக வருமானம்தான் என்றாலும், வருமான வரிச் சுமையை குறைப்பதற்கான வழிகளை முதலில் கடைப்பிடிக்க வேண்டும். உச்சபட்ச வருமான வரி வரம்பில் இருக்கும்போது 100 ரூபாய்க்கு சுமார் 30 ரூபாய் வரி கட்டவேண்டிவரும். இத்தொகை யை வரிச்சலுகைக்கான திட்டங்க ளில் முதலீடு செய்தால் வரியை மிச்சப்படுத்துவதோடு, வருமானத் துக்கும் வழியைத்தேடியது போ லாகும்.

சம்பளத்திலே பிடிக்கும் பிராவிடன்ட் ஃபண்ட் முதலீட்டை அப்படியே தொடரலாம். அது ஓய்வுக் காலத்துக்கான முதலீடு என்பதால் அதில் ரிஸ்க் எடுக்கவேண்டாம். முடி ந்தால்கொஞ்சம் அதிகமாகவே சேமிக்கலாம். அடுத்து வரிச்ச லுகை என்கிறபோது தனக்கு மற்றும் குடும்ப உறுப்பினர்களு க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ், தனி நபர் விபத்து பாலிசி, மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத் துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பங்கு சந்தை சேமிப்பு திட் டமான இ.எல்.எல்.எஸ். மியூச் சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்.

சொந்த வீடு…

சொந்த வீடு வாங்க மூன்று விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண் டும். ஒன்று, கடனில் வாங்குங்கள் (கையில் பணமிருந்தாலும்); இரண் டு, வீட்டை வாடகைக்கு விடுங்கள், கடன் முடியும் வரை நீங்கள் அதில் வசிக்காதீர்கள். மூன்று, தம்பதிகள் இருவரும் பணிபுரிவதாக இருந்தால் வீடு மற்றும் கடனை இருவர் பெய ரிலும் கூட்டாக வாங்குங்கள். இப்ப டிச் செய்தால் இருவருக்குமே இரு வரிச் சேமிப்பு வருமான வரிச் சட்டத் தின் 80சி-ன் கீழ் நபர் ஒருவருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வரையில் திரும்பக் கட்டிய அசல் தொகை மற்றும் முழு வட்டியை (வருமான வரி சட்டம் 24-ன் கீழ்) வரிவிலக்காகப் பெற்று அதிகமாக வரியை மிச்சப்படுத்த முடியும்.

பங்குச்சந்தை

வரிச்சலுகைக்கு போதுமான அளவு முதலீடு செய்துவிட்டீர்கள் என் றால், பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் வேண்டும் என்கிறவர்க ள் பங்குச் சந்தை பக்கம் வரலாம். இந் தியாவைப் பொறுத்த வரையில் நீண் ட காலத்தில் ஆண்டு சராசரி பண வீக்க விகிதம் சுமா ர் 5 முதல் 6 சதவி கிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட் டிருக்கிறது. உணவுப் பொருட்களுக் கான பணவீக்க விகிதம் 20 சதவிகித த்திலிருந்து 16 சதவிகிதமாகக் குறை ந்துள்ளது. அந்த வகையில் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படை யில் பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடு பணவீக்க விகிதத்தைத்  தாண்டி வருமானம் அளிப்பதாக இருக்கும். குறுகிய காலத்தில் கரெக்ஷன் வரும்போது நல்ல பங்குகள் மற்றும் ஃபண்ட்களில் முதலீடு செய்யு ங்கள். பங்குச் சந்தை, ஃபண்ட் முத லீடு ரிஸ்க் கானதுதான். ஆனால், அவை அதிக வருமானத்தைக் கொடுக் கிறது என்பதை அறிந்து, வயது க்கு ஏற்ப அதில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்த நோக் கில் நீங்கள் பணவீக்கத்தை பந் தாடி ஜெயிக்கலாம்.

அதிக வருமானம்…!

வருமான வரிசேமிப்புத் திட்டங்களில் முதலீடுசெய்தது போக, மீதியு ள்ள தொகையை ரிஸ்க்உள்ள அதே நேரத்தில் அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

1 பங்குச் சந்தை முதலீடு

இதில் ரிஸ்க் இருக்கும் அளவுக்கு வருமானமும் இருக்கிறது. நல்ல நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடு த்து முதலீடுசெய்து வந்தால் நிச்சய ம் சிறப்பான வருமானத்தைப் பெற லாம். இந்தியாவைப் பொறுத்த வ ரை கடந்த 10 ஆண்டுகளில் பங்குச் சந்தை ஆண்டுக்கு சராசரியா க 15% வருமானம் கொடுத்திருக்கிறது. இந் த காலகட்டத்தில் பண வீக்க விகித ம் சுமார் 10 சதவிகிதம்தான். எனவே 5 சதவிகிதத்துக்கு ம் அதிகமா ன வருமானத்தையே பங்குச் சந்தை தந்திருக்கிறது. சென் செக்ஸ், நிஃப்டி, நிஃப்டி ஜூனியர் குறியீடுகளில் இடம்பிடித்துள்ள பங்குகளில் முதலீடு செய்வது மூலம் ஓரளவு பாதுகாப்பாகவும் அதேசமயம் அதிக வருமானத்தையும் பெற முடியும். கடந்த மார்ச் 25-ம்தே தியுடன் முடிந்த ஓராண்டு கால த்தில் சென்செக்ஸ் புள்ளிகள் 82%, நிஃப்டி புள்ளிகள் 77% அதி கரித்திருப்பதே இதற்கு சிறந்த ஆதா ரம்.

2. மியூச்சுவல் ஃபண்ட்

வரி சேமிக்க வேண்டிய நிலை யில் இருப்பவர்கள், மூன்றாண்டுகள் ‘லாக் இன் பிரீயட்’ கொண்ட இ. எல்.எஸ்.எஸ். திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிக வருமானம் பெற மூன்றாண்டுகள் கழித்து வேறு தீவிரமான ஈக்விட்டி டைவர்சி ஃபைட் ஃபண்ட்களில் முதலீடு செய்ய லாம். அல்லது மீண்டும் வரிச் சலுகை பெற இ.எல்.எஸ்.எஸ். திட்ட ங்களில் மறுமுதலீடு செய்ய லாம். இந்த வரி சேமிப்பு ஃபண்டில் டிவிடெண்ட் மற் றும் வருமானத்துக்கு வரி இல்லை என் பது கூடுதல் லாபம். கடந்த மூன்றாண்ட காலத்தில், முதல் 10 இடங்களில் உள்ள இஎல்எஸ்எஸ் திட்டங்கள் 15 முதல் 25 % வருமானத்தைக் கொடுத்திருக்கிறது.

வரி சேமிப்பைத் தாண்டி முதலீடு செய்பவர்கள், முற்றிலும் பங்கு சா ர்ந்த டாப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மூலம் அதிக வருமானத்தைப் பெற லாம். மார்ச் 25-ம் தேதியுடன் முடி ந்த ஓராண்டு காலத்தில் முதல் பத்து இடங்களில் உள்ள டாப் மியூ ச்சுவல் ஃபண்ட்கள் 145-165% வரு மானத்தை அள்ளித் தந்திருக்கின் றன. ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃப ண்டில் முதலீடு செய்யும்போது எஸ்.ஐ.பி. முறையில் மாதாமாதம் ஒரு சிறு தொகையை முதலீடு செய்வது நீண்டகால அடிப்படையில் நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.

3. தங்கம் – இ.டி.எஃப்.

இதை காகிதத் தங்கம் எனலாம். இத ற்கு டீமேட்கணக்குவேண்டும். ஆபர ணத்தங்கமாக வாங்கும்போது உள் ள செய்கூலி, சேதாரம் இதில் இல் லை என்பதால் கூடுதல் லாபம். அ தேபோல விற்கும்போதும் இது போ ன்ற கழிவுகள் கிடையாது என்பதா ல் லாபம் முழுவதும் உங்களுக்கே (தரகருக்கு கொடுக்கும் சிறு கமிஷ ன் போக). தங்க முதலீட்டோடு ஒப்பி டும்போது இதற்கான வருமான வரி குறைவுதான். இப்போது இந்த கோல்ட் இ.டி.எஃப். மிகவும் பாப்புல ராகி வரு கிறது.

பங்கு, மியூச்சுவல் ஃபண்ட், கோல்ட் இ.டி.எஃப். முதலீட்டில் நீங்கள் எந்த விலையில் வாங்குகிறீர்க ள் என்பது மிகமுக்கியம். எப் போதும் கரெக்ஷன் காலத்துக் காக காத்திருந்து முதலீடு செய் வது மூலம் தான் அதிக லாபம் பெறமுடியும். மேலும், மொத்த மாக முதலீட்டைச்செய்ய வே ண் டாம். எப்போதும் எஸ்..ஐ.பி. முறையை பின்பற்றி முதலீடு செய்து வாருங்கள்.

மேலே கண்ட மூன்று முதலீட்டு முறைகளிலும் நீங்கள் எதிர்பார்க் கும் லாபம் வந்ததும் விற்று பணமாக்கி விட்டு, மீண்டும் குறையும் போது முதலீடு செய்யுங்கள். இவ்விதம் செய்தால் பண வீக்க விகி தத்தைத் தாண்டி அதிக வருமானத் தை நிச்சயம் பெறலாம்.

4. ரியல் எஸ்டேட்

இதிலுள்ள பெரிய பிரச்னை முதலீடு செய்ய நிறைய பணம் வே ண்டும். தவிர, தேவைப்படும்போது விற்கவு ம் முடியாது. ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத் தைத் தாண்டி பல மடங்கு வருமானம் தரும் முதலீட்டி ல் ரியல் எஸ் டேட் முக்கிய இடத்தில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. முதலில் சொந்த வீடு கட னில் வாங்கி ஏற்கனவே சொன்னது போல் வருமான வரியை மிச்சப் படுத்துங்கள். அது முடிந்த பி றகு அல்லது அதையும் தா ண்டி பணமிருந்தால் புறந கர்களில் பட்ஜெட்டுக்கு ஏற் ற விலையில் மனைகளில் முதலீடு செய்யலாம். மாதத் தவணை திட்டங்களில் முத லீடு செய்து வரலாம். முக்கி யமாக நீங்கள் கவனிக்க வே ண்டியது உங்கள் பிளாட்டை விற்பவர் நம்பகமான புரமோட்டார் தானா என்பதே. அகலமான சா லை, கார்னர் மனை, தண்ணீர் வசதி, அருகிலுள்ள நகரங்களில் தொ ழில் வளர்ச்சிபோன்ற அம்சங்களைக் கவனித்து முதலீடு செய்தால் தான் முதலீடு மதிப்பு வேகமாகக் கூடும். ரியல் எஸ்டேட் முதலீட் டில் கணிசமான லாபம் பார்க்க குறைந்தது 5-10 ஆண்டுகள் காத்தி ருக்க வேண்டும்.

5 உத்தரவாத வருமானத் திட்ட ங்கள்

முழுப் பணத்தையும் ரிஸ்க் உள் ள திட்டங்களில் முதலீடுசெய்வ தைத் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில், பொது பிரா விடன்ட் ஃபண்ட் மற்றும் கடன் சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்ய லாம். இது அவர வர் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து இருக்கிற து.

தொகுப்பு: சி.சரவணன்
நன்றி:- நா.வி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: