Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (30/09): உன் மனைவி பெற்றிருக்கும் பெண் குழந்தைகூட, உனக் கு பிறந்ததா என்பது சந்தேகமே!?

 

அன்புள்ள அம்மாவிற்கு—

என் வயது 33. திருமணமாகி, மூன்று வருடங்கள் ஆகின்றன. எம்.ஏ., எம்.பில்., முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். திருமணமாகி, இந்த மூன்று வருடத் தில், வேதனையை மட்டுமே அனுப வித்திருக்கிறேன். ஏனென்றால், என க்கு அமைந்ததே மோசடி திருமணம் தான். அவள் ஏற்கனவே திருமணமா னவள் என்பது, திருமணத்திற்குபிறகு தான் எனக்கு தெரிய வந்தது.

பெண் பார்க்க சென்ற போது, அக்கம் பக்கம் விசாரிக்கச்சென்றோம். பெண்ணின் தாயாரும், மற்றவர்களு ம் சேர்ந்து, கையை பிடித்து இழுத்து வந்து விட்டனர். பெண் மிகவும் நல்லவள் என்று சர் டிபிகேட் கொடுத்தனர். பெண்ணின் பெயரையே, திருமணத்திற்குமு ன் ஒரு பெயரும், திருமணத்திற்கு பின், ஒரு பெயரும் என, மாற்றி மா ற்றி கூறினர். பிளஸ் 2 படித்திருக்கிறாள் என்று கூறினர். பிறகு, 8ம் வகு ப்பு தான் படித்திருக்கிறாள் என்பது தெரிய வந்தது.

அம்மா, எனக்கு அப்பா- அம்மா இல்லை. உடன் பிறந்தவர்கள் யாரும் , என்னை சரியாக கவனிப்பது இல்லை. இந்த சூழ்நிலையை பயன் படுத்தி, என் பெரியப்பா மகன், பெண்ணின் வீட்டில் பணத்தை வாங் கிக் கொண்டு, என்னை ஒரு சாக்கடை குடும்பத்தில் தள்ளி இருக்கி றார். பெரியப்பா மகன் ஒரு கல்யாண புரோக்கர். அவர் என்னை உரி மையோடு திட்டுவதுபோல் நடித்து, மிரட்டி, உருட்டி இந்த திருமணத் தை நடத்தி வைத்தார்.

சரி அம்மா, நடந்தது நடந்து விட்டது. வந்தவள் திருமணத்திற்கு பிற காவது, ஒழுங்காக குடும்பம் நடத்த வேண்டும் இல்லையா? அவளா ல் தான், என் வாழ்க்கையே நாசமாகி விட்டது.

அவளுக்கும், அவள்மாமாவிற்கும், ஏற்கனவே, கள்ளத்தொடர்பு இரு ந்துள்ளது. அவளால், மாமனைவிட முடியாமல், முதல் புருஷனை விட்டு, ஓடி வந்திருக்கிறாள். சில வருடங்களுக்கு பின், அவளை மூளைச்சலவை செய்து, என் தலையில் கட்டி வைத்திருக்கின்றனர்.

என்னையும், அதே டார்ச்சர் செய்ய ஆரம்பித்தாள். அவள் அக்கா புரு ஷன், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவன். அவளை, ஆறு வருட ங்கள் மிலிட்டரிலேயே கூட வைத்திருந்திருக்கிறான். திருமணத்தி ற்கு பிறகும், அவளை ஒரு நிமிடம் கூட விட மாட்டேன் என்கிறான்.

தினமும், என்மொபைல் போனுக்கு, ரீ-சார்ஜ் செய்துவிட்டு, போனை அவளிடம் கொடு என்பான். கொடுத்தால், என் எதிரிலேயே அவள் மணிக்கணக்காக, அவனிடம் இந்தியில் பேசி சிரிப்பாள். எனக்கு, இந்தி தெரியாது. திருமணமான புதிதில், ஊட்டிக்கு எங்களை கூட்டி ச் சென்றான். அங்கு என் எதிரிலேயே நெருக்கமாக, இருவரும் நூற் றுக்கணக்கான போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்.

இதையெல்லாம் நான் கேட்டு, பிரச்னை செய்த போது, உன்னை மக ளிர் போலீசில் சொல்லி மாட்டிவிடுவேன் என மிரட்டுகிறாள். அவ னுடன் சேர்ந்து, இவளும் என்னை நான்கு மடங்காக சித்ரவதை செய் கிறாள்.

அவளுக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் அறிவுரை கூறினே ன். குடும்பமாகி விட்டதே என்ற காரணத்திற்காக, அவள் எவ்வளவு டார்ச்சர் செய்தாலும், மன்னித்து குடும்பம் நடத்தினேன். அவள் திருந் தவே இல்லை.

அவளுடைய மாமனுடன், அவளை சேர்த்து வைப்பதே, அவளுடைய அம்மா தான். இது, அந்த ஊரில் உள்ளவர்களே சொன்னது. ஏனெனி ல், அவளது அம்மா வீட்டுக்கு பண உதவிசெய்வது அவள் மாமாதான். அவள் வீட்டில் யாருமே வேலைக்கு செல்வதில்லை.

இந்நிலையில், அவள் கர்ப்பமானாள். கர்ப்பமான செய்தி கேட்டவுட ன், அவள் அம்மா ஊரிலிருந்து, பப்பாளி காயை கொடுத்தனுப்பி இரு ந்தாள். இதற்கிடையில், நல்லமுறையில் சீமந்தம் செய்து அனுப்பி வைத்தேன். 2012ம் ஆண்டு, பெண் குழந்தை பிறந்தது. அதைக் கூட இரண்டுநாள் கழித்துதான் எனக்கு தெரிவித்தனர். குழந்தையை ஒரே தடவைதான் சென்று பார்த்தேன்.

இன்று, நானே சமைத்து சாப்பிட்டு வாழ்கிறேன். குழந்தையை தூக் கிக் கொண்டு வரும்படி, என் பெரியப்பா மகனிடம் பல தடவை சொ ல்லி விட்டேன். அதற்கு ஒரு பதிலும் இல்லை. அம்மா, நான் கண்ணீ ரில் மிதக்கிறேன். வேறு திருமணம் செய்யலாமா என்று எண்ணினா ல், போலீசில் மாட்டிவிடுவேன் என மிரட்டுகிறாள். நீங்கள்தான் ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும்.

இப்படிக்கு தங்கள் மகன்.

அன்புள்ள மகனுக்கு—

உன் கண்ணீர் கடிதம் கிடைத்தது.

பொதுவாக, ஒரு கைக்குட்டை வாங்க, ஆயிரம் ஆராய்ச்சி செய்யும் நாம், திருமணம் செய்யும் போது மட்டும், மகா அலட்சியமாக செயல் படுகிறோம். வேலியில் போகும் ஓணானை எடுத்து, வேட்டியில் இட் டுக்கொண்டு, குத்துதே குடையுதே என ஆலாபிப்பது போல, பொருத் தமில்லாத வாழ்க்கைத்துணையை தேடிக்கொண்டு, புலம்போ புலம் பு என்று புலம்புகிறோம். தகுதியான வாழ்க்கை துணையை தேர்ந் தெடுக்க, ஆறு மாதங்கள் செலவழிக்க சோம்பல்படும் நாம், திரும ணத்திற்கு பிந்திய மீதி வாழ்நாளை, நரகத்தில் கழிக்கிறோம். வெட் டு,குத்து, வன்முறை, கோர்ட், கேஸ், விவாகரத்து, ஜீவனாம்சம் என , நாயாய், பேயாய் அலைகிறோம்.

உன்மனைவி, முதல் கணவனிடமிருந்து ஓடிவந்திருக்கிறாள் என்றா ல், அவனிடமிருந்து அவள் முறைப்படி விவாகரத்து பெறவில்லை என அர்த்தமாகிறது. அப்படியெனில், உனக்கும், அவளுக்கும் இடை யே நடந்த திருமணம், சட்ட அங்கீகாரம் இல்லாததாகி விடுகிறது.

உன் மனைவிக்கு, அவளது முதல் கணவன்மூலம், குழந்தைகள் ஏதாவது பிறந்துள்ளனவா? முதல் கணவனோடு மூன்று, நான்கு ஆண்டுகளும், அக்காள் கணவனுடன், ஆறு ஆண்டுகளும் குடித்தன ம் செய்திருக்கிறாள் உன் மனைவி. பத்து ஆண்டுகள், இரு ஆண்க ளுடன் குடும்பம் நடத்திய ஒரு பெண்ணின் உருவ அமைப்பு, மாறிப் போயிருக்குமே! அதை உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையா?

நீ ஏதோ ஒரு விதத்தில் பலவீனமானவன். உன்னைத் துணிந்து பலி ஆடாக்கலாம் என நினைத்துதான், உன்னை, அவளது தாயும், உன் பெரியப்பா மகனும், அவளுக்கு இரண்டாவது கணவனாக பார்த்து முடித்திருக்கின்றனர். இல்லையென்றால், அவளின் அக்கா கணவ ன், உன் மொபைல் போனுக்கு ரீ-சார்ஜ் செய்துவிட்டு, போனை அவ ளிடம் கொடுக்கச் சொல்லி, உன் முன்பே அவளை மணிக்கணக்காக கொஞ்சுவானா?

உன் மனைவியுடன், அக்கா கணவன் தொடர்பு வைத்திருப்பது, உன் மனைவியின் அக்காவுக்கு தெரியாதா? உன் மனைவியின் அக்கா உயிருடன் இல்லையா? அல்லது அவள் தன் கணவனிடமிருத்து, விவாகரத்து பெற்று போய் விட்டாளா அல்லது யாருடனாவது ஓடிப் போய் விட்டாளா?

இப்போது உன் மனைவி பெற்றிருக்கும் பெண் குழந்தைகூட, உனக் கு பிறந்ததா என்பது சந்தேகமே. இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே?

முதல் திருமணத்தை மறைத்து விட்டு, உன் மனைவி, உன்னை ஏமா ற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், அக் கா கணவனோடு முறைகேடான உறவில் ஈடுபட்டு வருவதாகவும், போலீசில் புகார் கொடு. பெண் குழந்தை, உனக்கு பிறந்ததுதானா என்பதை உறுதி செய்ய, மரபியல் சோதனை செய்ய நீதிமன்றத்தை அணுகு.

முறைப்படி, அவளுடன் நடந்த திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய் யட்டும். அதன்பின், அவசரப்படாமல், ஆற அமர யோசித்து, தீர விசாரி த்து, உனக்கு பொருத்தமான துணையை தேடிக் கொள்.

உன் மனைவிக்கு எதிரான காவல்துறை மற்றும் நீதித்துறை நடவடி க்கைகளில், மிகுந்த கவனமும், நைச்சியமும்தேவை. இல்லையெ ன்றால், உன் மனைவியும், அக்கா கணவனும், உன்னை தலைகீழாய் கவிழ்த்துவிடுவர். அதனால், நடவடிக்கைகளை எடுக்கும் முன், ஒரு நேர்மையான வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெறு. வெற்றி உனதே!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: