ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பாவனா. தற்போது மலையாள, கன்னட படங்களில் நடி த்து வருகிறார். சமீபத்தில் பச்சன் என்ற மலை யாள படப்பிடிப்பில் கலந்து கொண்டு சண்டை காட்சிகளில் நடித்தார். இதுபற்றி அவர் கூறுகை யில், கதாநாயகிகளை பொறுத்தவரை சண்டை காட்சிகளில் நடிப்பது எளிதான விடயம் கிடை யாது.
இப்படத்துக்காக டூப் போடாமல் சண்டை காட்சியில் நடித்தேன். இத ற்காக எனது வயிற்று பகுதியில் இறுக்க மாக கயிறு கட்டப்பட்டு பறந்து தாக்கும் கா ட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த காட்சி பட மாவதற்கு நீண்டநேரம் ஆனதால் வயிற்றி ல் கட்டப்பட்ட கயிறு என்னை இறுக்கிய து. இதனால் வயிற்றுப் பகுதி பாதிக்கப்பட் டது.
தமிழில் சில படங்களில் சண்டை காட்சியில் நடி த்திருக்கிறேன். இது போன்ற காட்சிகளில் நடிப்பது பெண்களுக்கு ரிஸ்க்கான விஷயம்தான். என்னை பொறுத்தவரை குறிப்பிட்ட எல்லையை தாண்டி சண்டை காட்சிகளில் நடிக்க முடியாது. ஆனால் இதையே தொழிலாக செய்பவர்களுக்கு இது பெரி ய விஷயமல்ல என்று தெரிவித்துள்ளார்.