Tuesday, November 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"சந்தன மரக் கடத்த‍ல் மன்ன‍ன்" வீரப்பனை வீழ்த்தியது எப்படி?

 

((ஒரு உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!))

தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வந்த சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமா க ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தி ருக்கிறார்.

கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவல கத்தில் இளநிலை பணியாளராக பணி புரியும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானா வாஸ் இது தொடர்பாக கூறியுள்ளதா வது:

நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங் கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந் தேன். உடுமலைப்பேட்டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட்டைக்காக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். அவருட ன் நான் தொடர்பில் இருந்தேன். கோவை சிறையில் இருத வீரப்பன் அண்ணன் மாதையனை சந்திக்க கனகராஜ் என்பவர் அடிக்கடி வந்து செல்வார். அவர் அதிரடிப்படை யால் கைது செய்யப்பட்டு விடு தலை செய்யப்பட்டவர். தீவிர வாதிகளாக உளவாளிகள்அவர் கோவை சிறைக்கு வந்த போது அவரிடம் ஒரு கடிதத்தை போலீஸ் கைப்பற்றியது. அக் கடிதத்தில் சிறையில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் மூலம் ஆயுதங்களைத் திரட்டுமாறு மாதையனுக்கு வீரப்பன் கோரியிருந்தார். இந்தக் கடிதம்தான் வீரப்ப ன் உயிருக்கே உலை வைத்தது. இந்தக் கடிதம் அதிரடிப்படை எஸ். பி.யாக இருந்த செந்தாமரைக் கண்ணனிடம் ஒப்படைக்கப்படது.
வீரப்பன் தெரிவித்திருந்த யோ சனைப்படி 4 முஸ்லிம் இளை ஞர்கள் தேர்வு செய்யப்பட்டோ ம். நான், கன்னியாகுமரியைச் சேர்ந்த அனஸ்கான், உபயத்து ல்லா, உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜியாவுல் ஹக் ஆகி யோர் இந்த உளவு வேலைக்கு தேர்வானவர்கள். எங்களுக்கு 3 மாதங்கள் ஆயுத பயிற்சி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் வீரப்பனிடம் போய் தீவிரவாதிக ளாக நடந்து கொண்டு தகவல்களை சேகரிக்க சொன்னார்கள். நான் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு காவல்துறை உயர் அதி காரியிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன் . உளவு வேலையை சரியாக செய்தா ல் ரூ50 லட்சம் தருவதாக சொன்னார் கள்.
பிணைக்கைதியாக வீரப்பன் உறவினர் மகன்
பின்னர் வீரப்பன் உறவினரான கனகரா ஜிடம் விவரத்தை சொல்லி வீரப்பனிடம் கொண்டு சேர்க்கக் கூறினார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இத னால் வீரப்ப ன் மகனை பிணையாக வைத்துக்கொ ண்டு எங்களை வீரப்பனிட சேர்க்காவிட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி ஒப்புக் கொள்ள வைத்தார்.
2003-ம் ஆண்டு கனகராஜ் மூலம் வீரப்பனிடம் சேர்ந்தோம். மொத்த ம் 20 நாட்கள் வீரப்பனிடம் தீவிரவாதிக ளாக நடித்தே உளவு பார்த்தோம். வீரப்ப னின் பலவீனங்கள், திட்டங்களை போ லீசிடம் சொன்னோம். நாங்கள் சொன்ன தகவலை வைத்துதான் சிலர் பொடா சட் டத்தில் சிக்கினர். இந்த ஆபரேஷனுக்கு ப் பெயர் ககூன் (பட்டுக்கூடு). இந்த ஆப் ரேஷனைவைத்தே வீரப்பன் கொலை செய்யப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டு எங்களது பெயரை சொல்லாமல் ஜூனியர் விகடனுக்கு எஸ்.பி.யா க இருந்த செந்தாமரைக் கண்ணன் கூறியும் இருந்தார். ஆனால் என க்குசேரவேண்டிய தொகை கி டைக்கவில்லை என்று கூறியு ள் ளார்.
இதுபற்றி காவல்துறை அதிகா ரி செந்தாமரைக்கண்ணன் கூறுகையில், ”நாங்கள் நால்வ ரையும் பயன்படுத்தியது உண் மைதான். ஆனால், 50 லட்சம் ரூபாய் தருகிறோம் என்று எப் போதும் வாக்குறுதி கொடுக்க வில்லை. வேலைவாய்ப்புக்கு உறுதிகொடுத்திருந்தோம். அதை செ ய்து கொடுத்திருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார் என்று ஜூனியர் விகடன் பதிவு செய்திருக்கிறது.
– thanks to breaking news (face book)

 

One Comment

Leave a Reply