சமீபகாலமாக என்னைக் கவர்ந்த இன்னொரு விளம்பரம் இது! ஆம், இந்நிறுவனத்தின் முந்தைய விளம் பரங் கள் அனைத்தும் அனைவரையும் கவரு ம் விதத்திலேயே படமாகப்பட்டுள்ளது. தற்போது அதே நிறுவனம் வேறு கோண த்தில் தங்களது நிறுவனத் தயாரிப்பி னை பிரதானப் படுத்தியுள்ளது. இந்த விமர்சனத்தை விதை2விருட்சம் வாயி லாக தங்க ளோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மை கொள்கிறேன்.
காட்சிகள்
சர்ஃப் எக்ஸல் என்ற பெயர்கொண்ட சலவை சோடா மாவு நிறுவனம் தான் அது
ஒரு விளையாட்டு திடலில் சிறுவர் கள் ஒன்றாக கூடி மட்டை பந்தாட் டம் விளையாடிக் கொண்டிருப்பார் கள். அதே இடத்திற்கு வந்த இவர்க ளை வித பெரி ய சிறுவர்கள் வந்து, இவர்களில் ஒரு சிறுவனிடம் நாங்க ள் ஆட வேண்டும், நீங்கள் எல் லாம் இங்கிருந்து போய்விடு! என்று மிரட் டியவாறு அடாவடித் தனமாக சொல் வான்.
அதற்கு ஒரு சிறுவன் பாஸ் இன்னும் இரண்டு ஓவர்தான் இருக்கிறது என்பான். அதற்கு அச்சிறுவன் மிகவும் கீழ்த்தரமான முறையில் அச் சிறுவனை, சேற்றில் தள்ளிவிட் டு அவனை ஏளனம் செய்வார்க ள். பொதுவாக இது போன்ற நேர த்தில் நாமிருந் தால், கோபத்தின் உச்சிக்கே சென்று, அவர்களுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டு, அடி கொடுத்திருப்போம் அல்லது அடி வாங்கியிருப்போம் அல்ல வா?
ஆனால் அந்த சிறுவன் மிகுந்த சிந்தனையோடும் தெளிந்த எண்ணத் தோடும் ஏ! பாஸ் ஏன் இந்த சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோவம் படுறீங்க! வாங்க, வந்து என்னை கட்டிப்புடிங்க பாஸ், என்று கூறிய வாறு அவர்களை நெருங்கி வர, இச்சிறுவனை ஏளனம் செய்து சே ற்றில் தள்ளிவிட்டவன் உட்பட அவ னை சேர்ந்த அவனது நண்பர்கள் அனைவரும் ஓடிப்போகிறார்கள்.
அப்போது இச்சிறுவன் தனது நண்பனிடம், யாருமே என்னோட அன் பை புரிஞ்சிக்க மாட்டேங்கறா ங்கடா என்று கூறியபோது அதற்கு அந்த சிறுவனின் நண்பனோ? என்டா கவ லைப்படறே இதோ நானிருக்க நான் புரிந் துகொள்கிறேன் நான் உன்னை கட்டிப் பிடி க்கிறேன் என்று கூறி, கட்டிப்பிடித்து மகி ழ்வார்கள் உடன் இவனது பிற நண்பர்களு ம் சேற்றில் விழுந்து புரண்டு, இச்சிறுவ னையே கட்டித்தழுவு வார்கள்.
எனது விமர்சனம்
தற்போது நமது மாணவர்கள் மத்தியில் பொறுமை, சகிப்புத் தன்மை, சாதூர்யம், புத்திக்கூர்மை போன்றவை படிப்படியாக குறைந்து வரு கிறது. இன்றைய மாணவர்களுக்கு ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அதை அமைதியான முறையிலும் புத்திசாலித் தனமாக கையாளாமல் வன்முறையில் ஈடுபட்டு, உயிர்ச்சேதம், பொருட் சேதம் பெறுமளவில் ஏற்டுத்தி, வீட்டிற்கும், நா ட்டிற்கும் நீங்காத அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான இன்றைய திரைப்படங்களில் காட் சிப்படுத்தப்படும் வன்முறைகளே மாணவர்கள் மனதில் ஒரு வித கொடூரமாக சிந்திக்கத் தூண்டுகிறது. கடந்த பல மாதங்களுக்கு பாரி மு
னையில் உள்ள ஒரு பள்ளியி ன் மாணவன் ஒருவன் தனது வகுப்பா சிரியரையே குத்திக் கொன்றது இதன் உச்சக் கட்டம் எனலா ம்.
மாணவர்கள், எந்த விதமான பிரச்ச னை என்றாலும், இந்த விளம்பரத் தில் இடம்பெறும் சிறுவனைப்போல ஒரு நிமிடம் யோசித்து, வன்முறை யை கையில் எடுக்காமல், புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு, தனக் கும் சரி, தன்னிடம் பிரச்சனை செய்வோருக்கு எந்தவிதமான பாதிப் பும் இல்லாமல் பிரச்சனைக்குரி யவர்கள் அவர்களாகவே விட்டு ஒதுங்கி ஓட வைக்கவேண்டும் .
மாணவர்களிடம் வன்முறை உணர்வை முற்றிலுமாக ஒழித் து அவர்களிடம் சகிப்புத்தன்மை யுடன், புத்திக்கூர்மையுடனும் செய ல் படத் தூண்டும் இது போ ன்ற விளம்பரங்கள் மென்மேலு ம் பெருகி மாணவர்கள் வன்மு றையை கைவிடும் அடித்தள முயற்சியாக இது அமையும் என்பது திண்ணம்!
– விதை2விருட்சம்– விதை2விருட்சம் – விதை2விருட்சம்