Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"கண்ணா கருமை நிறக் கண்ணா" பாடலும் அதன் பொருளும் – வீடியோ

 

இந்த சமுதாயத்தில் கருப்பு நிற பெண்களை, பலரும் கருப்பு என்கிற காரணத்தைக்காட்டி அப்பெண்ணை கேலியும் கிண்டலும் செய்வர். இவர்களது கேலியும் கிண்டலு ம் எந்த அளவுக்கு அந்த கருப்பு நிற பெண்னின் மனதை பாதித்தி ருக்கும் என்பதை மிக நேர்த்தி யாக கவிஞர் தனது கற்பனை திறத்தால் வரிகளாக செதுக்கி யிருப்பார்.

இதுபோன்ற கருப்பு நிற பெண்க ளின் உள்ள‍க் குமுறல்களை யும், ஏக்க‍ங்களையும், கோபங் களை யும் இந்த பாடல் வரிகளில் வெளிப்படுத்தியிருப்பார் அந்த காவிய க்கவிஞர் செதுக்கிய வரிகள் நம் எல்லோரது மனங்களை சற்று கன க்க‍ வைத்து நம்மை சிந்திக்க‍ வைக்கிறது.

இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 6ஆம் தேதி ஜூன் மாதம் 1963ஆம் ஆண்டு வெளி வந்த நானும் ஒரு பெண் என்ற‌ தமிழ்த் திரைப்படமாகும். இதில் எஸ். எஸ். இராஜேந்திரன், விஜய குமாரி, ஏ.எம்.ராஜம், ரெங்காராவ், சுப்பையா நாகேஷ், நடிகவேள் எம் .ஆர். ராதா, சி .கே. சரஸ்வதி, ஆச்சி மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் கருப்பு நிற பெண்ணாக விஜயகுமாரி நடித்திருப் பார் அவரது கணவராக எஸ்.எஸ்.ஆரும். விஜயகுமாரியின் மாமனா ராக ரெங்காராவும், அவரது பணி யாளாராக சுப்பையாவும் அற்புதமா க நடித்திருப்ப‍ர்.

நானும் ஒரு பெண் என்ற அற்புத திரைக்காவியத்தில் இடம்பெற்ற கவிஞரது வைர வரிகளால் நிரப்ப‍ ப்பட்ட அந்த பாடலில் கண்ணனை பார்த்து பாடுவதாக அமைந்திருக்கி றது.

எல்லோரு கண்ணனை, நீல வண்ண‍க் கண்ணா என்றே அழைத்து பாடுவதுண்டு, இங்கே கவிஞர், அந்த கண்ணனை யே கருப்பு நிறக் கண்ண‍னாக உருவகப்படுத்தியி ருப்பார். ஆம் கண்ணா கருமை நிறக் கண்ணா என் று ஏக்க‍தில் பாடுவதுபோல ஆரம்பித்து, அந்த கண் ண‍னை செல்ல‍மாக, அப்பெண் கோவித்துக்கொள் வதாக முடித்திருப்பார் அந்த கவியக்கவிஞர். பாட லை சற்று உன்னிப்பாக கேளுங்கள் உங்களுக்கே புரியும்
– விதை2விருட்சம்
இதோ அந்த பாடல் தாங்கிய வீடியோ உங்களுக்காக‌

கண்ணா கருமை நிறக் கண்ணா – உனை
காணாத கண் இல்லையே!

உனை மறுப்பார் இல்லை கண்டு வெறுப்பாரில்லை
எனை கண்டாலும் பொறுப்பாரில்லை
ம‌னம் பார்க்க‍ மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க‍ மறந்தாய் கண்ணா நல்ல‍
இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா அதில்
பூப்போல நினைவு ஒன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க‍ முடியாமல் மறைத்தாய் கண்ணா எந்த‌
க‌டன் தீர்க்க‍ எனை நீ படைத்தாய் கண்ணா

– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்

 

One Comment

  • Sir, Yesterday I have mailed that you downloaded a wrong song for this matter. But, while seeing this you have corrected and added the correct song. I have expected you have appreciate me to point out the mistake. Hope, you may understand my personal feelings.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: