காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர்விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாட கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. வர்த்தக
நிறு வனங்களை மூடுமாறு கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. மைசூரில் பிரபல கம்ப்யூ ட்டர் நிறுவனமான விப்ரோ அலுவலகத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடந்தது.ஊழியர்கள் வேலைக்கு வந்தனர்.
இதை அறிந்த கன்னட வெறியர்கள் விப்ரோ அலுவ லகத்துக்கு திரண்டு வந்தனர். திடீர் என்று அலுவலகத்துக்குள் புகு ந்து அங்கிரு ந்த ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொ றுக்கினார்கள்.
உடனே அங்கிருந்த ஊழியர்கள் 600 பேரும் அலறியடித்துக் கொண் டு வெளியேறினார்கள். தாக்குதலில் அலுவலகம் பலத்த சேதம் அ டைந்தது. தகவல் கிடைத்த தும் போலீஸ் படை விரைந்து சென்றது. உடனே வன்முறை யாளர்கள் தப்பி ஓடிவிட்டன ர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை பெங்களூரை அடுத்த ராம்நகர் வந்தபோது கன்னட அமைப் பினர் ரெயில் மறியலி ல் ஈடுபட்டனர். ரெயில்வே போலீசார் வந்து அவர்களை அப்புறப்படு த்தினார்கள்.

இதையடுத்து ரெயில் தாமதமாகபோ ய்ச் சேர்ந்தது. பெங்களூரில் பந்த்தின் போது திறந்து இருந்த கே.ஆர். மார்க் கெட் உள்ளிட்ட சில மார்க்கெட்டுகளி ல் போராட்டக்காரர்கள் புகுந்து கடைக ளை மூடச்சொல்லி மிரட்டினர். காய்க றிகளை அள்ளி ரோட்டில் வீசி எறிந்த னர். உடனே வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டனர்.
செய்தி மாலைமலர் /// வீடியோ ஐ.பி.என்.