Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (07/10): தொலைபேசி நண்பனை, பேசிபேசி காதலனாக்கி இருக்கிறாய்!

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் பொறியியல் மூன்றாமாண்டு சேர இருக்கிறேன். வாழ்வா, சாவா என்ற நிலையில், இந்த கடிதத்தை எழுதுகிறேன். தயவுசெய் து, என்னை சீக்கிரமாகத்தெளிவு அடையச் செய்யுங்கள்.

நான் கல்லூரியில் இருக்கும், பெண்கள் விடுதியில் தங்கிப் படி த்து வருகிறேன். விடுதியில் என் அறை தோழி, அவரின் நண்ப ரை, எனக்கு போன்மூலம் அறி முகப்படுத்தினாள். கல்லூரி வே லை நேரம் போக, மீதியுள்ள நே ரத்தில், அவரை புகழ் பாடிக்கொ ண்டே இருந்தாள் அவள். நான் ஒருமுறை தான், அவரிடம் போ னில் பேசியிருந்ததால், அவரைப் பற்றிய மதிப்பு, என் மனதில் கூடிக்கொண்டே இருந்தது.

அவள் எப்போதெல்லாம் அவருக்கு, போன் செய்ய போவாளோ, அப் போதெல்லாம் நானும், இரண்டு வார்த்தை பேச ஆரம்பித்தேன். அந்த நாள், எனக்கு ராசியாக இருந்த மாதிரி ஒரு உணர்வு. அதனால், “என க்கு தேர்வுநேரத்தில், நீங்கள் வாழ்த்தவேண்டும்…’ என்றும், “அப்போ தான் தேர்வில் நிறைய மதிப்பெண் வாங்குவேன்’ என்றும், அவரிடம் தனியாக, போன்செய்து கூறினேன். இது, என் தோழிக்கு தெரியாது.

அவர், விடுதிக்கு போன்செய்து, எனக்கு வாழ்த்தும்போதெல்லாம், பொறாமைப்பட்டாள் என் தோழி. இதனால், எங்களுக்குள் அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டது. நான், அதை பொருட்படுத்தவில்லை. நான் நடந்து முடிந்த தேர்வில், வகுப்பிலேயே முதலாவதாக தேர்வானே ன். அதற்கு காரணம், அவர் தான் என்று நினைத்தேன்.

அதனால், விடுமுறைக்கு வீட்டிற்கு செல்லும் போதெல்லாம், நாங்க ள் போனில் பேச ஆரம்பித்தோம்; முகம் பார்க்காமலேயே. இந்நிலை யில், என்னால், அவர்களுக்குள் சண்டை வர ஆரம்பித்தது. அவர், அவளிடம் பேச மறுப்பதாகவும், என்னிடம் பேச வேண்டுமெனவும் அவளிடம் கூறியுள்ளார். இதை, அவள் தவறாக புரிந்து கொண்டாள். நாங்கள் காதலிக்கிறோம் என்று நினைத்து விட்டாள்.

நான் அவரிடம் வழக்கம்போல பேசினேன். எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. இப்போது, என் தோழி அவரிடம் பேசாமல், அவரை பற்றி தவறாக கூற ஆரம்பித்தாள். நான் நம்பவில்லை. அவள், அவர் மேல் அபரிமிதமான பாசம்வைத்திருந்தாள். ஆனால் என்னிடம் அதுகாதல் இல்லை என்றாள்.

அவர் என்னிடமே பேசி வந்தார். இதனால், என்னைப் பற்றி தவறாக பேச ஆரம்பித்தாள். நான், மறைமுகமாக சொல்லியும், அவள் புரிந்து கொள்ளவில்லை. நேரடியாகவும் திட்டிவிட்டேன். விடுதி வார்டனிட ம் புகார் செய்தால், அவளுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்று நினைத்து, நான் இரண்டாம் வருடம், வேறு அறைக்கு சென்று விட்டேன்.

இந்நிலையில், அவருக்கும், எனக்கும் இடையே ஒரு ஈர்ப்பு வந்தது. பரஸ்பரமாக நேசித்து வந்தோம். நேசிக்க ஆரம்பித்தகாலத்தில், நான் அவரை புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்தேன். அதற்கு பின், அவர் சென்னையில் இருந்து, அடிக்கடி என்னை பார்க்க வரு வார். நாங்கள் இருவரும் சந்திக்கும் வேளைகளில், அவர் என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்.

நான் காதலித்தவர், ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர்; கிறிஸ்தவ ரும் கூட. அவரின் வீட்டில், எங்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டனர்.

ஆனால், என் உறவினர் ஒருவர் என்னை காதலித்தார். அவர் அரசா ங்க வேலையில் இருக்கிறார். நான் அவருக்கு அனுப்பிய பார்வேர்டு மெசேஜ்களை வைத்து, நான் அவரைக்காதலிக்கிறேன் என்று நினைத்து விட்டார். நான் மறுத்து விட்டதால், விடாப் பிடியாக, என் னிடம் காரணம் கேட்டார். நான் என் காதலைப் பற்றி கூறி விட்டேன்.
அவரும், “நானே உங்களை சேர்த்துவைக்கிறேன்.’ என, ஆசை வார்த் தை கூறினார். நானும், அதை நம்பினேன்.

என் பெற்றோர், எனக்கு நிறைய அறிவுரை கூறினர். அவர்கள் சொல் லும் போது, நான் அவசரப்பட்டு விட்டேனோ என்று தோன்றுகிறது. ஆனால், அவரின் அழுகையை போனில் கேட்டபோது, குற்ற உணர்ச் சியாய் இருக்கிறது. மதில் மேல் பூனையாக இருக்கிறேன். என், பெற் றோரின் சம்மதம் முக்கியம் என, அவரிடம் தெளிவாகச் சொல்லிவி ட்டேன். ஒரு வேளை கடைசி வரை, எங்கள் வீட்டில் ஒத்துக்கொள்ள வில்லை என்றால், என் வாழ்க்கை மட்டுமல்ல, அவரின் வாழ்க்கை யும் பாழாகும். எனக்கு, இப்போது என் படிப்பு தான் முக்கியம்.

அதனால், அவரை மறப்பது சரியா? அப்படி மறந்தால், அது நான் அவ ருக்கு செய்யும் துரோகம் ஆகாதா? நான் தொடர்ந்து, அவரைக் காத லிக்கிறேன் என்றால், அது, என் பெற்றோருக்கு ஏமாற்றமாகாதா? யார் பக்கம் போவது?

அவரும், என் பெற்றோரும், என் மேல், 100 சதவீதம் அன்பு வைத்தி ருக்கின்றனர் என்பது உண்மை. நான் என்ன செய்வது? என் வாழ்க் கையே, நீங்கள் கூறும் பதிலில் தான் இருக்கிறது. விரைவில் பதி லை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

— இப்படிக்கு, அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன் உணர்வுப்பூர்வமான கடிதத்தை முழுமையாக வாசித்தேன். விடு தி தோழி, தன்னுடைய காதலனைப் பற்றி உன்னிடம் உயர்வாக பேசி வந்திருக்கிறாள். அதை கேட்டு, தோழியின் காதலன் மீது உனக்கு இனம்புரியா அபிமானம் பூத்திருக்கிறது. தோழி, தன் காதலனுடன் பேசும்போது, பக்க வாத்தியமாக, இரண்டொரு வார்த்தை, நீயும் அவ னிடம் பேச ஆரம்பித்திருக்கிறாய். அதன் பின், முகம் பார்க்காமலே யே, அந்த குரலுடன் தனித்து உறவாடி, காதலாகி கசிந்திருக்கிறாய். அந்த குரலை சந்திப்பதற்கு முன், அரசு பணியில் இருக்கும் உறவின ர் மீது, “சாப்ட் கார்னர்’ கொண்டு காதல் அர்த்தம் தொனிக்கும் பார்வ ர்டு எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி இருக்கிறாய். உன் காதலன் தாழ்த் தப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்பதால், உன் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட மறுக்கின்றனர் உன் பெற்றோர்.

பிடிவாதமாக இருந்து காதலனையே மணப்பதா அல்லது பெற்றோர் சொல் கேட்டு, காதலை உதறி தள்ளுவதா என, இருதலைக்கொள்ளி எறும்பாய் தத்தளிக்கிறாய் இல்லையா செல்லம்?

இனி, நடக்க வேண்டியதை பேசுவோம் மகளே!

நீ ஒரு குழப்பமான மனநிலை உள்ள பெண். எந்த பிரச்னைக்கும் தெளிவான முடிவை யோசிக்கத் தெரியாது உனக்கு. உன் காதலனி ன் மைனஸ் பாயின்ட்களை, உன் பெற்றோர் அடுக்கும்போது, உன் காதல் தவறோ என, வெள்ளந்தியாய் யோசிக்கிறாய்.

உன் தோழியின் காதலனை, “அவனது குரல், அதிர்ஷ்டம் அறிவிக்கு ம் குரல்’ என்கிற பாவனையில் கவரப்பட்டிருக்கிறாய். வெறும் தொ லைபேசி நண்பனாக இருந்தவனை, பேசி பேசி தீவிர காதலனாக்கி இருக்கிறாய். உங்கள் காதலை, காதலன்வீட்டுக்கு தெரிவித்து, அவர் களின் அனுமதி பெற்றிருக்கிறாய். காதலனின் அம்மாவை விட்டு, உன் பெற்றோரிடம் பேச வைத்திருக்கிறாய். மொத்தத்தில், நீ தான் உலகம் என்ற நிலைக்கு உன் காதலனை கொண்டு போய் நிறுத்தி விட்டாய். காதலில் ஆக்டிவ் பார்ட்னராக செயல்பட்டுவிட்டு, இப்போ து, நீ மதில் மேல் பூனையாக நிற்றல் சரியா?

கலப்புத் திருமணம் ஏற்படுத்தும் பின்னடைவுகளை, இடியாப்ப சிக்க ல்களை சமாளிக்கும், விடுவிக்கும் சாதுர்யத்தை கை கொள்ளதான் வேண்டும்.

உன் படிப்பை முடித்து, வேலைக்கு போகும் வரை, உன் காதலனை காத்திருக்கச் சொல். இந்த இடைப்பட்ட காலத்தில், உன் பெற்றோரு டன் பேசி, உங்கள் காதலுக்கு ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற் படுத்து. திருமணம் நடப்பதற்கு முன், எக்காரணத்தை முன்னிட்டும், நீயும், உன் காதலனும் உடலுறவு வைத்துக் கொள்ளாதீர்கள். மூன்று ஆண்டுகள் காத்திருக்க முடியாமல், உன் காதலன் வேறு துணை தே டிக் கொண்டால், கலங்கி கண்ணீர் விடாதே. மூன்று ஆண்டு இடை வெளியில், உனக்கு புதிதாக ஒரு ஆணிடம் காதல்கூட ஏற்படலாம். எவ்விளைவுக்கும் நீயும், உன் காதலனும் ஆயத்தமாய் இருக்கவே ண் டும்.

மூன்று ஆண்டு காலத்தில், எவ்வித அசம்பா விதமும் நடக்காமல், உங்கள் காதல் முன்னெப்போதையும் விட, வலுவடைந்து நின்றது என்றால், அது உங்களிருவரின் வெற்றி. அப்போதும், உங்கள் காதலு க்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்க வில்லையெனில், சங்கடப் படாதே மகளே. பதிவு திருமணத்திற்கு தயாராகு. 

மூன்றாண்டு இடைவெளியில், உன் காதலனை, சிஏ, படிக்கச்சொல். அதனால், திருமணத்தின் போது, இருவருமே நல்ல சம்பளம் தரும் பணியில் இருப்பீர்கள். முதல் குழந்தை பிறந்த பின், உன் பெற்றோர், பதிவுதிருமணம் செய்து கொண்ட உங்களிடம் ராசி ஆகிவிடுவர். மே ல்ஜாதி, கீழ்ஜாதி பாகுபாடுகள் மறைய, உங்கள் காதல் திருமண ம் ஒரு காரணமாய் திகழட்டுமே கண்ணம்மா!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: