Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியாவின் முதல் சூப்பர் கார் – வீடியோ

டிசி கஸ்டமைசேஷன் என்ற பெயரில் கார்களை கஸ்டமைசேஷன் செய்யும் நிறுவனத்தை பிரபல கார் வடிவமைப்பு நிபுணர் திலீ ப் சாப்ரியா நடத்தி வருகிறார். அவந்தி என்ற பெயரில் புதிய சூப்பர் காரை திலீப் சாப்ரியா வடிவமைத்துள்ளார். கடந்த ஜனவரியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இந்த காரை டெல்லியில் அறிமுக ம் செய்தார். இந்நிலையில், முழுக்க முழுக்க உள்நாட் டில் வடிவமைக்கப்பட்ட முதல் சூப்பர் கார் என்ற பெருமையை பெற்றுள் ள அவந்தி அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு டிசம்பர் முதல் டெ லிவிரி கொடுக்கப்பட இருக் கும் அவந்தி சூப்பர்கார், முத ல் 4 மாதங்களில் 300 கார்க ளை விற்பனைசெய்ய டிசி திட்டமிட்டுள்ளது.

மேலும், 2016ம் ஆண்டு முத ல் ஆண்டுக்கு 2,000 அவந்தி சூப்பர் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டு ள்ளதாக டிசி தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 3 மாதத்தில் நாடு முழுவதும் 16 புதிய டீலர்களை திறக்க இருக்கிறது டிசி நிறுவ னம். கார் கஸ்டமை சேஷன் செய்யும் பணிகளோடு, அவந்தி காரின் விற்பனையும் இந்த ஷோரூம்கள் வழியாக மேற்கொள்ளப்படும் என் று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. – dinamlar

Leave a Reply