Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவரின் மனம் கவர, மனைவிக்கு குடும்ப நல ஆலோசகர்கள் கூறும் பயனுள்ள‍ ஆலோசனைகள்

தம்பதியரிடையே சின்னசின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை.அத னையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன் பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெரு கவும், கணவரின் மனம் கவர வும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள்.

அன்பால் அரவணைப்பு

குடும்பத்தில் முதல் பிரச்சினையே பெற்றோர்களை கவனிப்பதில் தான் ஏற்படுகிறது. நம்முடைய பெற்றோர்களை எப்படி கவனிக்கி றோமோ அதேபோல கணவரின் பெற்றோர்களையும், கண்ணும் கருத்து மாக கவனிக்க வேண்டும். அன்பால் அரவணைத்து அவர்களுக் கு மரியாதை அளித்தால் கணவரின் குட் புக்கில் டாப் தான் நீங்கள்.

கணவருக்காக சமையுங்கள்

கணவரின் மனம் கவர முதலில் அவரது வயிற்றுக்கு சரியான விருந்தளிக்க வே ண்டும் என்று முன்னோர்கள் தெரிவிப்ப ர். எனவே சுவையாக சமைத்து சூடாக பரிமாருங்கள். வார இறுதி நாட்களில் ஸ்பெசல் சமையலாக இருக்கட்டும். அப் புறம் நீங்களும் அவருக்கு ஸ்பெசல்தான் .

மனதிற்குள் மத்தாப்பு

கணவரின் துணிகளை துவைத்துப் போடுவது ஒரு கலை. திருமண த்திற்குமுன் யார் வேண்டுமானாலும் துணிகளைது வைத்திருக்க லாம். ஆனால் திருமணத்திற்குப் பின் னர் தன்னுடைய துணிகளை மனைவி துவைத்துப் போடுவது கணவரின் மனதிற்குள் மத்தாப்பு பூக்கும்.

இனிமையான இரவு விருந்து

இரவு நேரத்தில் கணவரின் வருகைக்காக காத்திரு ந்து உண்பது உங்கள்மீதான அபிப்ராயத்தை அதிகரி க்கும். தனக்காக தன் மனைவி பசியுடன் காத்திருப் பாள் என்ற எண்ணமே கணவரின் மனதில் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். அப் புறம் சண்டையாவது ஒன்றாவது.

அழகாய் அசத்தலாம்

கணவருக்கு பிடித்தமான உடை அணிவது அவரது கண்ணை மட்டு மல்ல காதலையும் அதிகரிக்கச் செய்யும். அதுதான் திருமண மாகி விட்டதே, இனி என்ன என்று உடலை கண்டுகொள்ளாமல் விடுவது குடும்ப வாழ் க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எனவே உடலை கச்சிதமாய் வைத்திருங்கள். அதற் கேற்ப உடையணிந்தால் கணவர் உங்கள் கைகளில் என்பதை நீங்களே உணர்வீர்கள்.

கொஞ்சமாய் பேசுங்கள் நிறைய கேளுங்கள்

எப்பவுமே லொட லொட என நீங்கள் பேசிக்கொண்டிருப்பதை விட கணவரை பேசவிட்டு நீங்கள் கேளுங்கள். இது உங்கள் மீதான பாச த்தை அதிகரிக்கும். நம் பேச்சை கேட்க ஆள் வந்துவிட்டார் என்று அவரை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தும்.

கை கோர்க்கும் காதல்

இறுதியான, முக்கியமானது படுக்கைய றையில் வெற்றிகளை விட தோல்விக ள் தான் அதிகம் விரும்பத்தக்கதாக உள் ளது. எனவே விட்டுக்கொடுங்கள். அவர்தடுமாறினாலும் நம்பிக்கை யூட்டுங்கள். நீங்கள் தோற்பது அவரது மனதில் இடம் பெறுவதற் கான வெற்றிக்கு வழி வகுக்கும்.

விதை2விருட்சம் பதிவு அல்ல‍
மேற்காணும் இடுகையை உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: