Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விபத்து காப்பீட்டு பாலிசி! (Accident Insurance Policy)

பிரிக்க முடியாதது எது? என்ற கேள்விக்கு ‘சாலைகளும்  விபத்துக ளும்’ என்பதுதான் வருத்தமான பதி ல்.  வாகனத்தை நாம் சரியாகச்செ லுத்தினால்கூட எதிரே வருபவர்க ள் தூங்கிக் கொண்டோ, குடித்து வி ட்டோ, நிதானம் இல்லாமலோ, தா றுமாறாக வாகனத்தை ஓட்டி வந் தால் ஆபத்துதான். எனக்குத் தெரிந் த ஓட்டுநர் நண்பர் ஒருவர் சொன்ன து இது. ”25 வருடமாக விபத்தே இல்லாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டு இரு க்கிறேன். ஆனால், இது ஒரு வரலாறுதானே தவிர எதிர்காலத்திலும் இப்படியே இருக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது!”

இதுதான் உண்மை. விபத்துகளை நம்மால் மட்டுமே தடுத்துவிட முடியாது. ஏனென்றால், அது நம்கை யில் மட்டும் இல்லை. ஆனால் விபத் தின் மூலம் ஏற்படும் நிதி நெருக்கடி களைச் சமாளிக்கும் ஆபத்பாந்தவ னாக இருக்கின்றன பாலிசிகள். அவ ற்றைப் பற்றிப்பார்ப்போம்.

 எது விபத்து?

பொதுவாக சாலை, ரயில் மற்றும் விமான விபத்துகளைத்தான் நாம் விபத்து என்கிறோம். ஆனால், இந்த பாலிசிகளில் விபத்து என்பதற்கு நி றைய அர்த்தங்கள் உண்டு. நமக்குத் தெரியாமல் நமக்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் அனைத்துமே விபத்துகள்தான். உதாரணத்துக்கு குளியல் அறையில் வழுக்கி விழுவது, மிருகங்க ளால் தாக்கப்படுவ து மற்றும் தீ விபத்து உள்ளிட்ட அனைத்துமே விபத்துகள்தான். ஆனால், செயற்கை யாகவோ, தன்னிலை மறந்த நிலையிலோ இந்தச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கக் கூடாது.

 யாருக்கு கிடைக்கும்?

18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். (70 வயதுக்கும் மேலே இருப்பவர்களுக்கு அதிக பிரீமியத்துடன் இந்த பாலிசி யை எடுக்க முடியும். அதேபோல 18 வயதுக்கு உட்பட்ட நபர்கள் தங் களது பெற்றோர் மூலமே பாலிசி எடுக்க முடியும்). விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்ப டலாம் என்பதால், நாம் செலுத்தும் பிரீமியத்தில் எந்தவித வயது வே றுபாடும் இல்லை. அனைவருக்கு ம் ஒரேபிரீமியம்தான். அதேபோல், எந்தவிதமான மருத்துவப் பரிசோதனைகளும் இல்லை. நீங்கள் இல் லத்தரசியாக இருக்கலாம், பணி செய்யலாம், படிக்கலாம். இப்படி எந்நிலையில் இருந்தாலும் உங்களுக்கு பாலிசி கிடைக்கும். எந்த விதமான ஆவணங்களும் இல்லாம லே சில நிறுவனங்களில், ரூ.10 லட்ச ம் வரையிலும் இந்த பாலிசி எடுக்க முடியும். அதற்கு மேலும் வேண்டும் எ ன்றால் உங்களது வருமானச் சான்றி தழ் தேவைப்படும். சாதாரண மருத்து வ பாலிசிகளைப்போல் உங்கள் குடு ம்பம் மொத்தத்துக்கும் சேர்த்து எடுத் துக்கொள்ளலாம்.

 என்ன கிடைக்கும்?

காப்பீடு செய்துகொண்டவருக்கு உல கில் எங்கு விபத்து நடந்தாலும், க்ளைம் கிடைக்கும். விபத்தினால் உயிர் இழக்கும்பட்சத்தில் பா லிசி தொகை முழுவதும் வாரிசுதாரரு க்கு (ஒரு வேளை வாரிசுதாரர் நியமிக்கப்படவில்லை என்றால், சட் டப்படி அவரது வாரிசுக்கு) கிடைக்கும். விபத்தினால் ஒருவர் செயல் படமுடியாத நிலைக்கு ஆளாகி வே லைக்கு செல்லமுடியாத நிலை ஏற் பட்டால், எடுத்திருக்கும் பாலிசி தொ கை முழுவதும் அவருக்குக் கிடைக் கும். ஓர் உறுப்பு மட்டும் முற்றிலும் செயல்படாத பட்சத்தில் பாலிசி தொ கையில் குறிப்பிட்ட சதவிகித தொ கை கிடைக்கும். உதாரணத்துக்கு ஒரு கண்பார்வை பறி போய் விட்டா ல், 50 சதவிகிதத் தொகை கிடைக்கு ம். அதாவது ரூ.10 லட்சத்துக்கு பாலி சி எடுத்திருந்தால், ரூ.5 லட்சம் கி டைக்கும். இந்தப் பட்டியல் மிகப் பெரியது. அதனால், பாலிசி எடுக் கும்போது கவனம் அவசியம்.

ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது முழுமையாகச் செயல்படாத நிலைக்குப் போய்விட்டாலோ, பாலிசி தொகைக்கு ஏற்ப ஒரு வருட த்துக்கு மட்டும் குழந்தைகளின் கல்விக்கட்டணம் மற்றும் ஏற்கெ னவே வாங்கி இருக்கும் கடன்களு க்கான மாதாந்திரத் தொகையும் கிடைக்கும். விபத்தின் மூலம் ஏற்ப டும் மருத்துவச் செலவுகளுக்கும் கணிசமான தொகை கிடைக்கும். தவிர பாலிசி எடுத்தவரின் இறுதிச் செலவுக்கும் கூட க்ளைம் வாங்கி க்கொள்ள முடியும்.  ஒரு வருடத்தி ல் க்ளைம் ஏதும் இல்லை என்றா ல், பாலிசி தொகை ஐந்து சதவிகிதம் வரை உயர்த்தப்படும்.

வரிவிலக்கு?

இந்த வகை பாலிசிகளில் செலுத்தும் பிரீமியத்துக்கு வரிவிலக்கு கி டையாது. வாங்கும் க்ளைம் தொ கைக்கும் வரிகட்டத்தேவையில் லை. பொதுவாக மருத்துவர்கள், ‘உங்களுக்கு சர்க்கரை வியாதி இ ருக்கிறதா, ரத்த அழுத்தத்தில் பிர ச்னை இருக்கிறதா, ஒவ்வாமை இருக்கிறதா? என்றெல்லாம் அடிப் படையான சில கேள்விகளைக் கே ட்பார்கள். அதேபோல், ஒரு நிதி ஆலோசகரிடம் நீங்கள் செல்லும் பட்சத்தில், ‘உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா, ஹெ ல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா, ஆக்சிடென்ட் பாலிசி இருக்கிறதா? என்றெல்லாம் வரிசையாக க்கேள் விகேட்பார். இதில் இருந்தே இந்த பாலிசியின் முக்கியத்துவம் தெரி ந்திருக்கும். அனைவரும் கட்டாயம் எடுக்க வேண்டிய பாலிசி இது!

தேவையா?

சிலர் டேர்ம் பாலிசி எடுத்திருப்பார் கள். (பாலிசிதாரர் மறைந்தவுடன் பாலிசி தொகை வாரிசுதாரருக்கு க் கிடைக்கும்) அதனால், விபத்து காப்பீடு தேவை இல்லை என்று நினை க்கலாம். ஆனால் இந்த பாலிசி நிச்சயம் தேவை. மரணம் ஏற் பட்டால் மட்டுமே டேர்ம் பாலிசியில் க்ளைம் கிடைக்கும். ஆனால், விபத்து நடக்கும் அத்தனை நேரங்களிலும் மரணம் நடக்கவேண்டு ம் என்றில்லை. நாம் செயல்படாத நேர ங்களில் இந்த பாலிசி நமக்குக் கை கொடுக்கும்.

பிரீமியம் எவ்வளவு?

தனிநபர்களுக்கு 10 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்போது, ரூ. 1,500 வரைக்கும் பிரீமியம் செ லுத்த வேண்டி இருக்கும். கண வன் – மனைவிக்கு தலா 10 லட் சம் என்றால், ரூ.2,800 என்ற அளவில் பிரீமியம் இருக்கும். மேலே சொன்ன இதர சலுகை கள் இல்லாதபட்சத்தில் வருடத் துக்குரூ.1,000/-க்கு மட்டும் பிரீ மியம் செலுத்தும் பாலிசிகளும் சந்தைகளில் இருக்கின்றன. வருடத்துக்கு ரூ.1,500 என்றால், மாதத்துக்கு சுமார் ரூ. 125 மட்டு மே!

{ { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: