Friday, February 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அந்நியர் வந்து புகல் என்ன‍ நீதி?

அக்டோபர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் 

வெள்ளையனிடம் வாங்கிய சுதந்திரத்தை ஆட்சிக்கொள்ளையரிடம் கொடுத்துவிட்டோம் என்ற கவி தை வரிகளை உண்மையாக்கிக் கொ ண்டிருக்கிறார்கள் இந்த தேசத்து அரசியல்வாதிகள், வாழ்க அவர்கள் தொண்டு!

வியாபாரம்செய்ய‍ வந்தவர்களை விரட்டியடித்து, வீர சுதந்திரம் கண்ட இதே தேசத்தில் இன்று புதிய பொ ருளாதாரக் கொள்கை என்கிற பெய ரில் அதே வியாபாரி களுக்கு இரத் தினக் கம்பள வரவேற்புக் கொடுக்கிறோமே . . . என்ன‍ கொடுமை இது?

வியாபாரத்தில், விளைச்சலில், தொலைத்தொடர்பில், போக்குவரத் தில், அறிவியலில், என்று தொடங்கி, இன்று ஓய்வூதியத் திட்ட‍த்திலு ம் அத்துமீறி நுழைந்து வி ட்ட‍து. இப்ப‍டியேபோனால் ராணுவத்தி லும் ஆட்சி மன்றத்திலும்கூட அந்நியரின் பங்கு இருக்கும்நா ள் வரலாம். அப்போது அப்ப‍டியே இந்த தேசத்தை அவர்களிடம் அடமானம் வைத்து விடலாம்.

நம் வீட்டுப் பொருளாதாரத்தை சீர்செய்ய பக்க‍த்து வீட்டில் கடன் வாங்கலாம். தவறில்லை. மா றாக பக்க‍த்து வீட்டுக்காரனையே நம் வீட்டு நிர்வாகத்தில் பங்கு கொள்ள‍ வைத்தால் எப்ப‍டி அந்த குடும்ப ம் உருப்படும்?

அந்நிய முதலீட்டால் நம் பொருளாதாரம் தலைநிமிரும் என்கிறார்க ள். ஆனால் நம் சொந்த உழைப் பும், அதனால் கிடைக்கும் உயர் வும் தொலைந்து போகிறதே என்று எவரும் சிந்திக்க‍வில்  லையே? நம் முகத்திற்கு எதற்கு மாற்றானின் முகமூடி என்று கே ட்கமுடியவில்லையே  . . . ஏன்? அந்நிய முதலீடு என்பது வெளி நாட்டு வியாபாரிகளின் சூதாட்ட சூழ்ச்சி. இதில் நம் தேசம் சிக்கி க் கொண்டிருப்ப‍தற்கு யார் கார ணம்?

நம் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கியவர்களும், நம் வளங் களை சுரண்டி சூறையாடும் அதிகார வர்க்க‍மும்தானே! என்ன‍ வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநா ட்டில் என்ற வைர வரிகளை மறந்த, ஆயிரம் உண்டிங்கு ஜாதி இதில் அந் நியர் வந்து புகலென்ன‍ நீதி என்ற முண்டாசுக்கவிஞனின் கோபத்தை உணராத ஒவ்வொருவரும் தானே!

இனியாவது இந்தியனை அந்நியரி ன் பிடியிலிருந்து காப்பாற்ற‍ வேண் டும் என்றால் . . .

நாமிருக்கும் நாடு நமதென்பதை அறியோம் என்று உறக்க‍த்திலிருப் ப‍வர்களை உதைத்து உட்கார வைத்து நாமிருக்கும் நாடு நம தென்பதறிவோம் என்று உணர வைக்க‍ வேண்டும்.

இது சம்பந்தமாக தங்களது கருத்துக்களையோ பாராட்டுக் களையோ இந்த இடுகையின் கீழுள்ள‍ Leave a Comment-ல் தெரிவிக்க‍லாம் அல்ல‍து கீழ்க் காணும் இந்த வைர வரிகளின் உரிமையாளரை தொடர்புகொண்டு தெரிவிக்க‍லாம்.

இந்த வைர வரிகளின் உரிமையாளர்
உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை) => கைபேசி 94440 11105

Leave a Reply

%d bloggers like this: