Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (14/10): "தாம்பத்யம் பண்ணிய சிறப்பான நாட்களை, நினைவு கூர்ந்து, அசை போடு!"

அன்பு சகோதரிக்கு—

நான் 42 வயதான பெண். ஒரு தனியார் அலுவலகத்தில், 15 வருடங்க ளாக பணிபுரிந்து வருகிறேன். என் கணவரும், வேறு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு, ஆண் -பெண் என, இரு குழந்தைகள். நான், என் குடும்பத்துடன் சராசரியா ன சந்தோஷத்துடன், வாழ்ந்து வருகி றேன். எனக்கு, கணவரைவிட, குழந் தைகள் மேல் அதிக அக்கறை யும், பாசமும் உண்டு. அவர், அதிக கோபக் காரர். எனவே, குழந்தைகளும், அவரிடம் ஒட்டுவதில்லை.

இப்படி போய் கொண்டிருந்த என் வாழ்க்கையில், கடந்த இரண்டு வருடங்களாக, பூகம்பம் வீசிக்கொ ண்டிருக்கிறது. என் அலுவலகத்திற்கு புதிதாக பணியாற்ற, 39 வயது டையவர், எனக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்தார். என்னை  பற்றி, என் பக்கத்து இருக்கை தோழியிடம் விசாரிக்க ஆரம்பித்திருக் கிறார். நான், அதே அலுவலக த்தில் தொடர்ந்து, 15 வருடங்கள் பணி புரிவதால், என்னை பற்றி, அனைத்து சக பணியாளர்களும் அறிவர். நான், எந்த தவறான பேச்சிற்கும் இடம் கொடுத்ததில்லை. தவறாக அணுகும் ஆண்களை, அடித்திடவும் தயங்க மாட்டேன் என்று, தோழி அவரிடம் கூறியிருக் கிறார். அப்படியே என் தோழியிடம் பேச ஆரம் பித்தவர், கொஞ்சம், கொஞ்சமாக என்னிடமும் சகஜமாக பேச துவங் கினார்.

அலுவலகம் தவிர, போனிலும் பேச ஆரம்பித்து, கொஞ்சம், கொஞ் சமா என்னை கரைக்கத் துவங்கினார். காதலர் தினத்தன்று போன் செய்து, “இன்று என்ன நாள் தெரியுமா?’ என்றார். நான், “பிப்.,14…’ என் று கூறி, “ஒழுங்காக மனைவியை அழைத்துக் கொண்டு, எங்காவது செல்லுங்கள்…’ என்றேன்.

பின், வெளியூர் சென்றாலும், தவறாது போன் செய்வார். பஸ்சில் வந்து இறங்கி, வீட்டுக்கு வந்து சேரும் வரை பேசுவார்.

இவ்வாறு, என்னை விரட்டி, விரட்டி எதையும் யோசிக்க விடாமல், அவரை மட்டும் யோசிக்க வைத்து, என்னை கொஞ்சம் கொஞ்சமா க, பைத்தியம் ஆக்கினார். போனில், “டார்லிங்’ல் ஆரம்பித்து, ” உம் மா’வில் முடிப்பார். போன் வரவில்லை என்றால், எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கும். அந்தளவுக்கு என்னை மாற்றினார். அலுவலகத்தில் தனியாக மாட்டும் போது, சில்மிஷம் வேறு.

நான் அவர் வசமானேன். அவரது பிறந்தநாளுக்கு மட்டும், ஒரு நாள் என்னுடன் இருக்க வேண்டும் என்றார். நான் அதற்கு மட்டும் ஒத்துக் கொள்ளவே இல்லை.

அலுவலகத்தில் தனியே இருக்கும் போது, திடீரென்று எதிர்பாராமல், இறுக்கி அணைத்து, அழுத்தமாக முத்தமிடுவார். இவ்வாறு என் உணர்வுகளை தூண்டி, அவருக்கும், எனக்கும் சாதகமான சூழ்நிலை அமைந்த போது, இருவரும் இணைந்தோம். அதன் பின், அடிக்கடி அந்த மாதிரி சூழ்நிலையை நாங்களே உருவாக்கினோம்.

இவ்வாறு எங்களது பழக்கம், ஒரு வருட காலம் இனிமையாக தொ டர்ந்தது. ஆனால், திடீரென்று ஒரு நாள், அவர் சொந்த ஊருக்கு மாற் றலில் செல்வதாகக் கூறினார்; என்னால், தாங்க முடியவில்லை. அவருடன் தாம்பத்தியம் மேற்கொண்டதிலிருந்து, என் கணவருடன் நான் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதில்லை. என்னுள் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால், இந்த முடிவு எடுத்தேன்.

சகோதரி… தற்போது, பிரமோஷனில் மீண்டும் எங்கள் அலுவலகத் திற்கு வந்து விட்டார். அவரது சில்மிஷங்கள் மீண்டும் தொடர்கிறது. எனக்கு பயமாக உள்ளது. விலகி விடலாம் என, அவரிடம் பேசினா ல், “என்னால் கண்டுபிடிக்க முடியும். நீ ஏன் என்னை விலக்குகிறாய் என்று…’ என்கிறார். என் நடத்தையை சந்தேகிக்கிறார்.

அவரை, மறக்க மட்டும் சொல்லாதீர்கள். விலகுவதற்கு மட்டும் நல்ல தீர்வாகக் கூறுங்கள். இந்த கேவலமான ஜென்மத்திற்கு, என் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, சகோதரியாக ஏற்று நல்ல தீர்வு கூறுங்கள்.

 இப்படிக்கு
உங்கள் சகோதரி.

அன்புள்ள சகோதரிக்கு —

“நான் எந்த கொம்பாதி கொம்பன் சாவியாலும் திறக்க முடியாத பத்து லீவர் பூட்டு’ என சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் பெண்கள் தான், குண்டூசி வைத்து முயற்சித்தால் கூட, மிக எளிதில் மடங்கி விடுகின்றனர்.

வாய் சொல் வீரம் பேசும், நீயும் இது போலதான். உன் தவறை சமாளி க்கவே, உன்குழந்தைகளின்மீது, என் கணவரைவிட அதிக அக்கறை உண்டு, கணவர் கோபக்காரர்; குழந்தைகள் அவரிடம் ஒட்டுவதில் லை. என்னை சம்பாதிக்கும் இயந்திரமாக என் கணவர் கருதுகிறார் என, உன் கணவர் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கிறாய்.

உனக்கு திருமணமாகி, 17 வருடங்கள் ஆகின்றன. 16 வயதில் ப்ளஸ் 1 படிக்கும் மகளும், 14 வயதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் இருப்பர். 42 வயதான நீ, காலேஜ் பெண் ரொமான்ஸ் பண்ணுவது போல, காதலர் தின வாழ்த்துகள் பெற்று, திருமண பந்தம் மீறிய உற வை தொடர்ந்து இருக்கிறாய்.

இரண்டு வருடங்களாக, அலுவலக நண்பருடன் தகாத உறவு வைத் திருக்கும் நீ, கணவருடன் தாம்பத்யம் வைத்துக்கொள்ளாததை, ஒரு தவமாக விவரித்திருக்கிறாய். பிறர் மனை விழையும் உன் அலுவல க நண்பர், “விலகிப் கொள்ளலாம்’ என, யோசனை கூறிய உன் நடத் தையை சந்தேகப்படுகிறார் என்பது, எத்தனை அபத்தமான விஷ யம்! மொத்தத்தில், நீயும், உன் அலுவலக நண்பரும், பக்கா சுயநலவாதி கள்.

இருவருமே தங்களது தகாத உறவு, இருதரப்பு குடும்பத்தையுமே அதளபாதாளத்துக்கு உருட்டித் தள்ளிவிடும் என்பதை சிறிதும் உணர வில்லையோ அல்லது உணராதது போல இருவருமே நடிக்கிறீர்கள். “அவரை மறக்க மட்டும் சொல்லாதீர்கள். விலகுவதற்கு மட்டும் நல் ல தீர்வாகக் கூறுங்கள்…’ என்றிருக்கிறாய். திருமணபந்தம் மீறிய உறவு என்பது, குடிப்பழக்கம்போல. அதை மறக்கமுயற்சித்தால் தான், அதனிடமிருந்து பூரணமாய் விலக முடியும்.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம் மகளே…

தகாத நட்பு வந்துசேர்வதற்கு முந்தைய, 15 வருடங்களில் கணவரு டன் தாம்பத்யம் பண்ணிய சிறப்பான நாட்களை, நினைவு கூர்ந்து, அசை போடு. அலுவலக நண்பரின் நட்பை, தயவு தாட்சண்யமின்றி கத்தரி. பணியிட மாறுதல் கேட்டுப்பெறு அல்லது நீண்ட மருத்துவ விடுப்பில்போ. கள்ளக்காதலனை முழுவதும் தலைமுழுகிவிட்டா ல், குற்றம் உணர்ச்சி கொள்வதை நிறுத்தி விடலாம். கணவரின், அலுவலக நண்பரின் தாம்பத்யங்களை ஒப்பிட்டுப் பார்க்காதே.

மகன், மகளுடன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் ஒட்டி உறவாடு. இரவில் தூக்க மாத்திரை தவிர். உன் ஹேண்ட் பேகில், உன் கணவ ன், குழந்தைகளுடன் நிற்கும் குரூப்போட்டோவை மறக்காமல் வை.

அலுவலக ஆண் நண்பர்களுடன், நெருங்கியும் பழகாதே, விலகியும் போகாதே. அவர்களையும், அலுவலக பெண் நண்பர்கள் போல பாவி. புத்துயிர்ப்புடன், மீண்டும் உன் வாழ்வை ஆரம்பி. வாழ்வில் மெய் யான சந்தோஷங்கள், இனி உனக்கு கிட்டும் கண்ணம்மா!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: