Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களே . . . !

அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத்தேர் ந்தெடுப்பதுமுக்கியம். பெண்கள் இவ் விஷயத்தில்பெரிதும் தயக்கம் காட்டு வார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனை க்குரிய குற்றமில்லை. இவ்விஷயத் தில் இளம்பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்…

1.புதிய மனிதர்களைச்சந்தியுங்கள்

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம் பெண்களில் 52 சதவீதம் பேர் தமக்கு ஏற்ற துணையை அறிவதற்கா கவே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்குச் செல்கிறார் கள். ஆனால் அங்கே சரியான நப ரைக்கண்ட பிறகு நேரேபோய் பேசி விடுகிறார்களா என்ன? ஜாடைமா டையாகப் பார்க்கிறார்கள், புன்ன கைக்கிறார்கள், கிசுகிசுக்கிறார்கள். ஆனால் ஓரக்கண்ணால் பார் ப்பதை விட நேரே போய் பார்த்துப் பேசிவிட லாமே? நீங்கள் மிகவும் கூச்ச சுபாவம்கொண்டவர் என்றால் உங்க ள் தோழியையோ, உறவினரையோ தூது செல்லப் பயன்படுத்திக் கொள் ளுங்கள்.

2. சுற்றி வளைக்காதீர்கள்

இந்தியப்பெண்களில் 23 சதவீதம்பேர் `தங்கள் ஆளுக்கு’ பொறாமை ஏற்பட வேண்டும் என்பதற்காக வேறு சிலருடன் நட்பு வைத்துக் கொ ள்கிறார்களாம், அல்லது அப் படிக்காட்டிக் கொள்கிறார்க ளாம். ஆனால் மலரும் ஓர் உறவுக்கு அதுவே எதிரியாகி விடலாம். நீங்கள் ஏவும் ஏவுக ணையைத்தானே நீங்கள் விரும்புபவருமë ஏவுவார்?

3. நேர்மையாக இருங்கள்

இந்திய இளம்பெண்களில் 15 பேர் தாங்கள் ஏற்கனவே ஒரு நட்பில், காதலிலிருந்து பிரிந்து மனம் நொந்திருப்பது போல காட்டிக் கொள் கிறார்கள் என்கிறது ஆய்வு. எல்லாம் தாங்கள் விரும்புவரின் அனு தாபத்தைச் சம்பாதிக்கத்தான். ஆனால் ஒரு புதிய உறவுக் கு முன்னுரை எழுதும்போ தே அது முடிவுரை எழுத வைத்துவிடலாம். காரண ம் ஆண்கள் சிக்கலான உறவுகளைத் தவிர்க்க விரும்புவதுதான்.

4. எதிர்காலத்தைப் பாருங் கள்

இந்தியப் பாரம்பரியப்படி பெரும்பாலான பெண்கள் (89 சதவீதம் பேர் ) முதலில் தோன்றும் ஒரே காதல்தான் உண்மையானது என்று கரு துகிறார் களாம். அதில் தவறில்லை. ஆனால் முதல் காதல் சொதப்ப லாகிவிடும்போது அதிலேயே தேங்கி நிற் கவேண்டும் என்பதில்லை. கடின மானது என்ற போதும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந் தாக வேண் டும்.

5. `முதல் பார்வையிலேயே’ சரியாகாது

`பார்த்த முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துப் போனது’ என்பதெல்லாம் சினிமா வுக்குத்தான் பொருந்தும். ஆனால் சினிமா வின் தாக்கத்தாலோ என்னவோ, அதிகமான பெண்கள் (63 சதவீத மானவர்கள்) முதல் பார்வையில் ஏற்படும் காதலுக்கு முக்கியத்து வம் அளிக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழக் கூ டாது.

6. அவரது நண்பர்களை அவர் தேர்ந்தெடுக்கட்டும்

தமது `நபர்’, தம் தோழியருடனு ம், குடும்பத்தினருடனும் நன்றா கப் பழக வேண்டும் என்று எதிர் பார்ப்பது பெண்களின் இயல்பு. சில ஆண்கள் அதை அதிகமாக விரும்பாதவர்களாக இருக்கலாம். ஆனால் பொதுவான நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்களில் இயல்பாக ப் பேசக் கூடும். எனவே `உங்களவரின்’ நடத்தை, குணத்தை மட்டும் பாருங்கள். உங்களுக்கு நெரு ங்கியவர்களுடன் எப்படிப் பழ குகிறார் என்ற அளவு கோலை மட்டும் வைத்துக்கொண்டு உங்கள் அன்புக்குரி யவரை எடை போடாதீர்கள்.

7. நடைமுறை சார்ந்தவராக இருங்கள்

உங்கள் நபர் சூப்பர்மேனாக இ ருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எல்லாவகையிலும் திருப்தியான நபரை ஐந்தாண்டுகளாகத் தேடுவ தாக 12 சதவீத இந்தியப் பெண்கள் கூறியிருக்கிறார்கள். உங்களவ ரின் தலையில் எதிர்பார்ப்புச் சுமைகளை ஏற்றாதீர்கள். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு உறவின் இயல்பை, உண்மைத்தன்மை யைப் பாதிக்கும்.

(சாட்டையை சுழட்டியபோது, அதில் ஓட்டியது விழுந்தது)

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: