தத்துவஞானி சாக்ரட்டீசின் கேள்விகள் சிந்தனையைத் தூண்டும் சிறந்த அறிவின் ஏவுகணைகள் இதோ:
வாள் முனையின் சக்தியால் ஜன நாயகத்தைப் பலர் விரும்புவது எந்த வகையில் நியாயம்?
கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை நம்புவது ஏன், எதற்கென்று கேட் காமல் அதற்குக் கீழ்ப்படிவதில் பொ ருள் உண்டா?
அழகான சுவர்களில் வண்ண வண் ணச்சித்திரங்கள், போருக்கு எப்போ தும் தயாராக இருக்கும் அத்தீனிய நாட்டுக்கப்பல்கள், பளபளவென பிரகாசிக்கும் அழகுச் சிலைகள் – இவற்றால் என்ன பயன்? அதனை உருவாக்கியவர்கள்-செய்தவர்கள் மகிழ்ச்சியான வாழ்வுவாழாமல் இருந்தால்?
இப்படிக் கேட்ட சாக்ரட்டீஸ் மேலும் கூறுகிறார்:
அறிவைத் தேடுவது அனைத்திலும் முக் கியமானது – நாம் சுவாசிக்கும் உயிர் க்காற்றைப்போல; எனவே, அறிவுக்கே முன்னிடம் தாருங் கள்.
மனித வாழ்க்கையின் முக்கிய அடிப் படையான அம்சங்கள் எவை நம் மை மகிழ்வுடன் இருக்க உதவுகின் றன? எது நமக்கு நன்மை தருகிறது? அன்பு என்றால் என்ன? பயம் – அச்சம் என்றால் என்ன? இவற்றுக்கிடையே நமது வாழ்க்கையை நாம் மிகச் சரியாக அமைத்துக் கொள்வது எப்படி?
இன்றைய உலகியல் வாழ்விலும் சாக்ரட்டீசின் இக்கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தானே உள்ளன?
உலகம் நவீனமயமாகி இருந் தாலும் மனிதனின் வாழ்க்கைப் பரிமாணம் மாறவில்லை. கவலை, மகிழ்ச்சி, துன்பம், அச்சம் இவ ற்றால் அவனது வாழ்வு அல்லாடுகிறதா – இல்லையா ?
உலகத்தில் உள்ள பலவற்றையும் பற்றிப் பட்டியல் போட்டுப்பார்ப்பதால் என்ன லாபம்?
அவற்றை நேசிக்கவேண்டாமா? அவை மீது அன்பை, பாசத்தை, பரிவை க் கொட்டவேண்டாமா?
அன்பு என்ற ஒன்றுதான் எனக்குப் புரி கிறது. (சாக்ரட்டீசின் மனிதநேயம் அவ ரை வானத்திற்கும் மேலே உயர்த்திக் காட்டவில்லையா?)
அர்த்தமற்ற அலங்காரப் பேச்சுகள் – வாதங்கள் மிகவும் வெறுக்கத் தகுந்தவை. உண்மையைப் புறந் தள்ளி விட்ட ஆடம்பர வார்த்தை ஜாலங்கள், நல்ல சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச் சுறுத்தல்கள் ஆகும்.
இன்றைய தொலைக்காட்சிக்கான நிக ழ்ச்சிகளை சாக்ரட்டீஸ் இன்று இருந்து சாடுவதுபோல் இல்லையா?
-எதையும், எதற்கு என்று ஆராயாத வாழ்க்கை, வாழத் தகுதியற்ற வாழ்க் கை யேயாகும்.
சாக்ரட்டீசின் வாழ்வு முடிந்த பிறகே அவரது அறிவுரைகளின் பயண ம் அன்றுமுதல் இன்றுவரை நாடு தழுவிய ஒளியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது!
மேற்கு மட்டுமல்ல, கிழக்கும்கூட அவ ரது அறிவாயுதத்தால் ஈர்க்கப்பட்டு நிற் கிறது.
அதனால்தானே யுனெஸ்கோ என்ற அய் .நா.வின் கலாச்சார அமைப்பு தந்தை பெரியாருக்கு விருது வழங்கி சிறப்பித்த போது, தந்தை பெரியார் அவர்களை மிக ப் பொருத்தமாக வர் ணித்தது!
புதுஉலகின் தொலைநோக்காளர், தென் கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ் என்றுதான் பொருத்தமாக வர்ணித் தது!
எழுதப் படிக்கத் தெரியாத அந்த மேதை சாக்ரட்டீஸ்- பகுத்தறிவு, பட்டறிவால் உலகின் அறிவின் ஏழு தூண்களில் ஒன்று என்று அல்லவா அழைக்கப் படுகிறார்!
சாக்ரட்டீஸ் – பெரியார் – தம் மண்டைச் சுரப்பை, சிந்தனை ஊற்றுகளை – உலகம் தொழுகிறது!