Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ் ஒலிக்கும் இன்னொரு தமிழகம்!

”செம்மொழியான தமிழ் மொழியாம், தமிழ் மொழியாம், இன்பத் தமி ழ் மொழியாம்!”-தமிழின் புதிய கீதம் ஒலிக்கும் இடம் தமிழகம் அல் ல; மோரே!

மணிப்பூர் மாநிலம் சாண்ட ல் மாவட்டத்தில் அமைந்து ள்ள இந்தியா வின் கிழக்கு எல்லைக் கிராமம்தான் மோரே. இது ஒரு மலைக் கிராமம். பூர்வீகக் குடிகளா ன குக்கீஸ்களுடன் தமிழர் கள், நேபாளிகள், பஞ்சாபி கள் என வசித்து வருகின்றனர்.இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் சரளமாகத் தமிழ் புழக்கத்தில் உள்ளது. மோரேவின் பூர் வீகக் குடிகளும் எல்லைப்பகுதியைச் சேர்ந்த பர்மியர்களுமே தமிழி ல் பேசிக் கொள்வது ஆச்சரியம்.

தமிழர்கள் வந்த கதை

இங்கு தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த சுவாரஸ்யம். அத ற்குள் இந்திய சுதந்திரப் போரின் சுவடுகளும் பதிந்திருக்கின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உரு வாக்கிய இந்திய தேசியப்படையி ல் மோரே தமிழர்களும் இணைந் திருந்ததை இங்குள்ள பாட்டிகள் கதைக் கதையாகக் கூறிவருகி றார்கள்.மோரேவையும், சூரஜ்சந்த்பூரையும் இந்திய தேசியப்படை வீரர்கள் பயன்படுத்தி பிரிட்டிஷ் படையை எதிர்த்து நாகலாந்து வ ரை வந்து ஐஎன்ஏ கொயை நாட்டியிருக்கிறார்கள் .

பிரிட்டிஷ் ஆட்சியின் போது பர்மாவும் இந்தியாவின் அங்கமாகத்தான் இருந்தது. பர்மாவின் தலைநகர் ரங் கூன் வரை வியாபாரத்துக் காக இந்தியர்கள் சென்று வர மோரே ஒரு முக்கியக் நுழைவாயிலாகச் செயல்பட்டது. இவ்வாறு வியாபாரத்துக்குச் சென் றுவரும் இந்தியர்களுக்காக மோரே தமிழர்கள் வாடகை வீடுகள் மற்றும் உணவகங்கள் நடத்தி தங்கள் வருவாயை ஈட்டிக் கொண்டா ர்கள். காலப் போக்கில் மோரே கிராமமாக உருவெடுத்தது. 1960 களில் இங்குள்ள குக்கி பழங்கு டியின மக்களின் கட்டுப்பாட்டு க்குள்தான் மோரே இருந்து வந் ததாக்கவும், ஷொலிம் பெயிட் என்பவர் கிரா மத் தலைவராக இருந்ததாகவு ம் கூறுகிறார்கள் இப்பகுதி மக் கள்.

1962களில் மியான்மரில் ராணு வப் புரட்சி ஏற்பட்டு இந்தியர்கள் அக திகளாக அனுப்பப்பட்டனர். இதில் பர்மாவில் வசித்த தமிழர் கள் பெரும்பாலானோர் மோரேவில் தஞ்சம் அடைந்தனர். சென்னைக்கு கப்பல்களில் அனுப்பப்பட்ட இந் தியத் தமிழர்களிலும் பெரும்பாலோர் தங்களின் பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறைக்கு அனுகூலமான மோரேவை நாடி குடு ம்பம் குடும்பமாகச் செல்லத் தொடங்கினர். இப்படி வந்தவர்களுக்கு ஷொலிம் பெயிட் உதவிகர மாக இருந்தார். காரணம் இங்குள்ள தமிழர்கள் செலுத்திய மண் வரி தான் .இந்த வரியில் குறிப்பிட்ட பங்கை அவர் எடுத்துக் கொண்டு மீதியை அரசுக்கு செலுத்தியது தனிக் கதை.

தமிழர்கள் இங்கு குடியேறிய கால கட்டத்தில்,அருகில் உள்ள, நாம்ப் லாங் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம் நடந்து வந்தது. அங்கு தொழிலாளர்களா கப் பணிபுரியத் தொடங்கிய தமிழர்களுக்கு அவர்களது புத்திசாலித் தனமும், உழைப்பும் புதிய கதவுக ளைத் திறந்தன.

கூப்பிடு தொலைவில் உள்ள மியான்மரில், ஆடைகள் முத ல் மளிகைப் பொருட்கள் வரை இந்திய உற்பத்திகளுக்கு ஏக கிராக்கி இருந்தது. எனவே தமிழர்கள் அதைப் பயன்படுத் திக்கொள்ளத் தொடங்கினார் கள். துணிவகைகள், பாத்திர ப ண்டங்கள், மளிகைப் பொருட் கள் எனத்தொடங்கி மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களு ம் வணிகம் செய்யப்படுகிறது.

மோரே ஸ்மால் டவுண் கமிட்டி

சமீபத்தில் மோரே -மியான் மர் எல்லையில் தடையற்ற வர்த்தக மையம் அமைக் கப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு இருநாட்டின ரும் வணி கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மியான்மரின் டம்மு பகுதிக்கு ள்ளும் வணிகத்துக் காக சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது. 1980ல் ‘மோரே ஸ்மால் டவுண் கமிட் டி’ அமைக்கப்பட்டது.

மோரே நகரத்தின் அளவு 7.38 சதுர கிலோமீட்டர் அளவுதான். மோ ரேவின் மக்கள்தொகை சுமார் 30ஆயிரம். இதில் 17ஆயிரம் பேர் வரை தமிழர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.நானூறு குடும்பங்க ள் அடங்கிய பகுதி ஒரு வார்டாக கூறப்படுகிறது. தற்போது மோரே ஒன்பது வார்டுகளைக் கொண்டு ள்ளது. 2, 3, 4, 5, 6, 7 வார்டுகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

பெண் வீட்டாருக்கு கண்டிப்பாக திருமண சீர்

திருமண விஷயத்தில் பெண் வீட்டார்களுக்கு வரதட்சணை உள்பட எந்தப்பிரச்னையும் கிடையா து. பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்தால் மட்டுமே திருமணம். பெற்றோ ர்கள் கட்டாயம் செய்வது கிடை யாது. அதேபோல் காதலர்கள் வீட்டைவிட்டு ஓடிவிட்டாலும் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமான திருமணம் நடைபெறும். மேலும் மாப்பிள் ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு கண்டிப்பாக திருமண சீர் கொடுக்க வேண்டும். திருமணம் முடிந்த அன்றே மணப்பெண் மாப்பிள்ளை வீட் டுக்கு சென்றுவிடுவார்.

மணிப்பூர் மாநிலத்தில் வாழும் உள்ளூர் பெண்கள் வெளிமாநி லத் திலிருந்து மணிப்பூரில் அர சாங்க வேலை, பள்ளிக் கூடங் களில் ஆசி ரியர் வேலை, மற்ற துறைகளில் வேலை செய்பவர் களை திருமணம் செய்து கொள் ள ஆசைப்படுவார்கள். அப்படி யான திருமணங்களும் நடந்து ள்ளது. இவர்கள் நமது இந்திய கலாசாரத்தைத் தழுவி நல்ல விதமாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாபிகளும், மலை யாளிகளும், தமிழர்களும் இங்குள்ள பெண்களை திருமணம் செய் து கொண்டு வாழ்ந்து வரு கின்றனர்.

மோரே மலைவாசிகள் ஆண் டுதோறும் அறுவடை நேரத்தி ல் அதாவது நவம்பர் மாதம் முதல் தேதியில் ‘கூட் திரு விழா’ கொண்டாடுவார்கள். ஆடி பாடிநடனம் ஆடுவார்கள். அவர்கள் சமூகப்பெண்களுக் கு அழகிப்போட்டிகளும் நடத்தப்பட்டு அழகி தேர்வு செய்யப்பட்டு பரி சு வழங்குவார்கள். இதேபோல் தமிழர்கள்தைத் திங்கள் நாளில் பொங்கல் விழாவினைச்சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். அப்போது பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளையும் நட த்துகிறார்கள். தமிழர்களின் விழாக்களின் போது மலைவாழ் மக்களின் கலாச்சார நடனமும் நடத்தப்படுகிறது. இவை தவிர தமிழர்களின் அத்தனைப் ப ண்டிகைகளும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன .

மோராவில் மலைவாழ் மக்கள் சிறிய அளவிலான 29 கிறிஸ்தவ கோவில்களை கட்டியுள்ளனர். 20 அல்லது 30 குடும்பத்தினருக்கு ஒரு கோவில் என்ற அளவில் இருக்கி றது. இவர்கள் ஒரு கோத்திரத்தை ச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு என்று பிரார்த்தனை தலைவர்களும் தனித்தனியாக இருக்கிறார்கள்.

இயற்கையோடு இணைந்து வா ழும் இம்மக்களின் சுவாரஸ்ய மான வாழ்க்கைக்கு இடையே பிரச்னைகளும் இல்லாமல் இ ல்லை. இப்பகுதியின் மற்றொரு பூர்வீகக்குடிகளான நாகாக்கள் மோரே தங்களுக்குத்தான் என் றுபோர்க்கொடி பிடித்ததில் இரு தரப்பினருக்கும் இடையே மோ தல் ஏற்பட்டு உயிர்ப்பலிகள் நிக ழ்ந்துள்ளது. தமிழர் களுக்கும், குக்கீஸ்களுக்கும் இடையே கூட மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது இவை மறக்கப்பட்டு எல் லோரும் ஒற்றுமையு டன் வாழ்ந்து வருகின்றன.

மோரே தமிழ்ச்சங்கம்

தமிழர்கள் பெருகத் தொடங்கியதும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி 1967ல் தமிழர் நலச்சேவா சங்கம் தொடங்கப்பட்ட நிலையில், 3 மாதம் கழித்து ஜூலை 15ம் தேதி புதிய குழு அமைக்கப்பட்டது. இந் த குழு, மோரே தமிழ்ச் சங்கமா க செயல்படத் தொடங்கியது.

இவர்களின் முயற்சியில் பள்ளி க்கூடத்துக்காக ஒரு இடம் வாங் கப் பட்டு நேதாஜி நினைவு ஆங்கில உயர் நிலைப் பள்ளி தொடங்கப் பட்டு இன்று வெற்றி கரமாக இயங்கி வருகி றது.

மோரே தமிழ்ச்சங்கத்தின் கீழ் வார்டு வாரியாக முத்தமிழ் மன்றம், சன்ரைஸ் யூத் கிளப், பேச்சுலர் வெல்ஃபர் யூத் கிளப், லிப்ரா பீபுள் கிளப் ஆகிய அமைப்பு கள் உருவா க்கப்பட்டு பொதுப்பணி களை தமிழ் இளைஞ ர்கள் செய்து வருகின்ற னர். பெண்களுக்கு இல வச தையல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிற து.

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது மோரே தமிழ்ச்சங்கம் சார்பில் ரூ.3.60 லட்சம் வழங்கப்பட்டது.2008-ல் பர்மாவில் நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவார ண உதவி அளித்துள்ளனர்.

எப்படி செல்வது மோரேவுக்கு?

மணிப்பூர் மாநிலத்தின் கடைசி எல் லைக் கிராமம் தான் மோரே. அங்கு நாம்செல்ல முதலில் மணிப்பூர் தலை நகர் இம்பால் செல்ல வேண்டு ம். விமானம் மூலமாகவும், ரயில் மூலமாகவும் இம்பால் செல்ல முடியு ம். விமானத்தில் செல்வதானால் கல் கத்தாவுக்கு முதலில் செல்ல வேண்டும். சென்னை – கொல்கத்தா 2 மணிநேரம் விமானப்பயணம். கொல்கத்தாவிலிருந்து இம்பாலுக்கு பயண நேரம் ஒன்ற ரை மணி நேரம்.

இம்பாலிலிருந்து மோரே 110 கி.மீட்டர். இதற்கு தனியார் வாகனத்தில்தான் செல்ல மு டியும். ரயிலில் செல்ல சென் னையில் இருந்து செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இர ண்டு நாட்கள் நாகாலாந்து மாநிலத்தின் டிமாப்பூர் வரை ரெயில் (திப்ருகர் எக்ஸ்பிரஸ்) இயக்க ப்படுகிறது. அங்கிருந்து இம்பாலுக்கு பஸ் உள்ளது. இம்பாலிலிரு ந்து மோரேவுக்கு தனியார் வாகனங்களி ல் செல்லலாம்.

மு.செய்யது முகம்மது ஆசாத் (விகடன்)

One Comment

Leave a Reply