Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"அன்னிய முதலீட்டை வரவேற்கிறேன்" – கமல்ஹாசன்

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் (பிக்கி) இன்று சென் னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் ஊடகம் மற்றும் கேளிக்கை வர்த்த க கூட்டுக்குழு கூட்டம் நடை பெற்றது.

இந்திய சினிமாத் துறை யின் 100 ஆண்டு நிறைவை கொண் டாடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பிக்கி டைர க்டர் ஜெனரல் டாக்டர் அரபிந்த் பிரசாத்துவக்கி வைத்தார். ஊட கங்கள் மற்றும் கேளிக்கை வர் த்தக கூட்டுக்குழுவின் தலைவ ர் கமல்ஹாசன் வரவேற்புரையாற்றினார். தொலைக்காட்சிகளின் தரவரிசை பற்றிய ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட் டார்.

அப்போது அவர் பேசுகையில், ஊடகம் மற்றும் கேளிக்கை துறையி ன் வளர்ச்சிக்கு பிக்கியின் பொழுதுபோக்கு பிரிவு, பல்வேறு கொள் கை மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக பணியாற்றியிருக்கிற து என்று குறிப்பிட்டார். மேலும் தொழில் தரத்திற்கு உயர்ந்துள்ள சினிமாத்துறையின் சாதனைகள் பற்றிகுறிப்பிட்ட அவர், தென்னிந்தி ய சினிமாத்துறை தேசிய சினிமாவின் மையமாக திகழ்வதாக பெரு மிதம் தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சி.கல்யா ண் பேசும்போது, சினிமாத்துறை சந்தித்து வரும் பிரச்சினைகளை குறிப்பாக, சேவை வரி மற்றும் காப்புரிமை பிரச்சினைகளை எடுத் துரைத்தார். இக்கூட்டத்தில் பிக்கி தலைவரின் ஆலோசகர் முராரி, இயக்குனர்கள் பி.சசிக்குமார், லிங்குசாமி, அமீர், ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் பேரி ஆஸ்போர்ன் மற்றும் திரைப்படத்துறை மற் றும் ஊடகத்துறையைச்சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண் டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘திரைப்படத்துறையில் அன்னிய முதலீடு வந்தால் அது வரவேற்கக் கூடியதுதான். ஆனால் அதற்கு முன்னதாக சில்லரை வணிகத்தில் அதனை நடைமுறைப்படுத்தக்கூடாது. பொதுமக்கள் தியேட்டர்களு க்கு சென்று எளிதாக படம் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் திருட்டு வி.சி.டி.க்களை தடுக்க முடியும். அதே சமயம் திரைப்பட தயாரிப்புக்கு ஆகும் செலவுக்கு ஏற்ப, தியேட்டர் களில் கட்டண உயர்வும் தேவை’ என்றார். => malaimalar

Leave a Reply