Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயிரைப் பறிக்கும் (கர்ப கால) உயர் இரத்த அழுத்தம்

இன்றைய அளவில்கூட கர்பிணியின் மரணத்திற்கும், கருக்குழந் தையின் மரணத்திற்கும்முக்கியக்காரணமாக விளங்கும் நோய் களுள் மிகை இரத்த அழுத்தம் முதன்மை வகிக்கிறது எனலாம். 

சாதாரணமாக இரத்த அழுத்தத்தில் சுருங்கு இரத்த அழுத்தம் 120 மி. மீ. ஆகவும், விரிவு இரத்த அழுத்தம் 80 மி.மீ. ஆகவும்தான் இருக்கும். முதல் ஆறு மாத கர்பக்காலத்தி ல் இரத்த அழுத்தம் சற்று குறைந்து காணப் படும். சுருங்கு இரத்த அழுத்தம் 100 ஆகவு ம், விரிவு இரத்த அழுத்தம் 70ஆகவும் இருக் கக்கூடும். கடைசி மூன்று மாதகாலத்தி ல் தான் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். 24 வாரத்திற்குப் பிறகுதான் இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கிறது. 

விரிவு இரத்த அழுத்தம் 130 மி.மீட்டரைத் தா ண்டினால் அதை இதயத்தால் தாங்க இயலா து. மூளையில் இரத்தக்கசிவு போன்றவை ஏற்ப டும். 

கர்பக் காலத்தில் விரிவு அழுத்தம் 110 அல்ல து 120ஆகஇருக்கும்போதே இதயப்பிரச்ச னை மற்றும் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு விடுகிறது. கர்பச்சன்னி என்ற பிரச்சனை வி ரிவு அழுத்தம் 90 அல்லது 100 மி.மீ. இருக் கும்போது வந்துவிடுகிற து.

இந்த இரத்த அழுத்தம் ஏன் வருகிறது என் றால், பாரம்பரியம், வறுமையான சூழ் நிலை, சிறுநீரகப் பிரச்சனைகள், பனிநீர் மிகைப்பு, இரட்டைக் கோளாறுகள், எப் போதும் டென்ஷன், கவலை போன்ற காரணங்களால் வருகிறது. 

கருத்தரிக்கும் முன்போ அல்லது கர்பக் காலத்திலோ இரத்த அழுத்தம் இருந்திரு ந்தால் அது தாயையும், கருக்குழந்தை யையும் கண்டிப்பாக பாதிக்கும். கர்பச்ச ன்னி, கர்ப்பிணி மரணமடைதல் போன்ற பிரச்சனைகள் சம்பவிக்கும். திடீரென தலைச்சுற்றல், பார்வை மங்க லாகி பின் இருண்டது போன்றிருத்தல் ஆகியவை நேரிடும். 

இதைத் தலிர்க்க, கர்பிணிக்கு பூரண ஓய்வு, தூக்க மருந்துக ள், இரத்தஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் ஆகி யவற்றை மருத்துவர்கள் பரிந் து ரை செய்து தாய்-சேய் இரு வரையும் காப்பாற்றுவார். 

கர்பக்காலத்தில் கைகால்கள் வீக்கம், டென்ஷன் போன்றவை இருந்தால் கர்ப்பிணி எதன்மீதோ ஆசைப்பட்டு வீங்கிவிட்டதாக நினைத்துக் கொள்வது தவறு. 

இரத்த அழுத்தப்பரிசோதனையை துவ க்கக் காலத்திலிருந்தே தவறாமல் மே ற்கொள்ள வேண்டும். பிரசவ காலத்தி ற்குப் பின்னரும் இரத்த அழுத்தப் பரி சோதனையை மேற்கொண்டால்தான் நோய் தொடருகிறதா என்பதை கண்ட றிய இயலும். இதை மேற்கொள்ள மறந்தாலும் அல்லது அஜாக்கிர தையாக இருந்தாலும் அது உயிரைப் பறிக்கும் அளவிற்குப்போகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍
இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: