‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில்வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே ‘ பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து 7 மொழிகளில் 600க்கும் மே ற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகி யாக இருக்கிறார்.
டெலிவிஷன்களில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியு ள்ளார். இவர் இன்று காலை தனது தாயா ர் பத்மாசினி யுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு 2 புகார் மனு க்கள் கொடுத்தார். ஒருமனுவில் சின்மயி கூறியிருப்பதாவது:-
வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நட த்தும் கஜேந்திரகுமார் என்பவர் எனக்கு ரூ.12 லட்சம் பணம் தரவேண்டும். பல முறை கேட்டும் அவர் பணம் தராமல் காலம் கடத்திக்கொண்டு வருகிறார். எனவே ரூ.12 லட்சம் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியு ள்ளார்.
மற்றொரு புகார் மனுவில் சின்ம யி கூறியிருப்பதாவது:-
டுவிட்டர் இணையதளத்தில் என் னை ஆபாசமாக சித்தரித்து புகை ப் படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ள ன. 6 பேர் சேர்ந்து இந்த அருவரு க்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ள னர். உதவி பேராசிரியர் ஒருவரு க்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள்மீது போலீசார் தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதி ல் கூறியிருக்கிறார்.
பின்னர் சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபகாலமாக டுவிட்டர் இணையதளத்தி ல் அரசியல் பிரபலங்களையும், என்னைப் போல் சினிமா உலகில் இருப்பவர்களையு ம் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவ ரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.
இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட் டவர்கள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளா கிறார்கள் என்று கேட்டுக்கொண்ட பிறகு ம் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக் கவகையில் கருத்துக்களையும் படங்க ளையும் வெளியிடுவதை நிறுத்திக்கொள் ள வில்லை.
குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடு பட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலு ம் என்னை? பற்றி நான் ஒவ்வொரு முறையும் புகழின் உச்சியில் இருக்கு ம் போதெல்லாம் மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டு ள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்க ளையும், 6 பேர் பெயர்களையும் குறிப் பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்து ள்ளேன்.
எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளி யிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடு படுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வே ண்டும். இவ்வா று அவர் கூறினார்.
தாய் பத்மாசினி கூறும்போது, சின்மயி பொது மக்க ள் மற்றும் ரசிகர்கள் ஆதரவால் வளர்ச்சி அடைந்து உள்ளார். அவரது பெயரை கெடுக்கும் நோக்கத்துட ன் செயல்படுபவர்களை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றார்.
– malaimalar