வேற்றுமையில் ஒற்றுமை கண்டது நம் பாரத தேசம். அஹிம்சையா ல் எதையும் சாதிக்கமுடியும் என்று சாதித்துக் காட்டிய காந்தி மகான் வாழ்ந்த நம் நாட்டில் இன்று மனிதனி ன் ஒற்றுமை எனும் ஆணி வேரை வன்முறைக் கரையான்கள் அரிக்கத் தொட ங்கிவிட்டன.
தேசப்பற்றோ தெரிவிக்கப்பட வேண் டிய ஒன்றாகி விட்டது. நாட்டின் முது கெலும்பு எனும் மனித ஒற்றுமையி ல் இன்று கூன்விழுந்துவிட்டது. மனி தனை ஒன்றாக்க தோன்றிய மதங்க ள் அவனை துண்டு துண்டாக்கி விட் டன.
சமத்துவம், சகோதரத்துவம் என்று போதித்த நம்நாட்டில் இன்று ஒரு வரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருக்கிறோம். நான், என் மதம், என் மொழி, என் ஜாதி என் று குருகிய மனப் பான்மை யோடு வாழ்ந்து நம் வன் முறைக்கு நம் மகாத்மா காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என்ற மூன்ற காந்திகளை பலி கொடுத்துள் ளோம்.
“எந்த ஒரு மதம் பசித்த ஒருவனு க்கு உணவளிக்கும் தன்மையை வளர்க்கிறதோ அதுதான் தலை சிறந்த மதம்” என்றார் சுவாமி விவே கானந்தர். ஆனால் இன்றைய இந்தியாவில் மதத்தின் பெயரால் கொலை, கொள்ளை என்று அதர் மங்கள் நடந்து கொண்டிருக் கின்றன.
”என் அமெரிக்க சகோதர சகோதரிகளே!” என்று கூறி சகோதர உணர்வுகளை ஏற்படு த்தினார் சுவாமி விவேகானந்தர். “இமயத் தில் ஒருவன் இரு மினான் என்றால், குமரி யில் உள்ளவன் மருந்து கொண் டோடுவான் என்றார் தேசியக்கவி பாரதியார். ஆனால் இன்று நாம் என்ன செய்கிறோம்?? நீருக் காக கர்நாடகாவிடம் கேட்டுக்கெஞ்சினோ மே! சற்று யோசித் துப்பாருங்கள்! மனித ஒற்றுமை, சகோதர உணர் வு எல்லாம் எங்கே போய்விட்டது???
ஒருநட்டின் தலையெழுத்து வகு ப்பில்தான் நிர்ண யிக்கப்படுகிற து. ஆனால் இன்றைய கல்வியோ தேசபக்தி, தொண்டு போன்றவற் றை போதிக்காமல் மதிப்பெண் பெறும் இயந்திர ங்களாக மட்டு மே மாணவர்களை உருவாக்கு கிறது. நம் கலாச்சாரம், மத ஒற் றுமை, தேசப் பற்று பாதுகாக்கப் பட வேண்டுமானால் பெற்றோர் உழவேண்டும்,
ஆசிரியர் விதைக்க வேண்டும், மாணவன் உழைக்க வேண்டும். இது நடந்தால் ஒற்றுமை எனும் நல்ல விளைச்சலைப் பெறலாம்.
மேலும் நாம் சுயவலிமை பெற்று மனித ர்களாக எழுந்து நிற்க நம் மிடையே ஒற்றுமை வேண்டும். மனித குலத்தின் சாபக்கேடான பயங்கரவாதம் களங்கம ற்ற உயிர்களையும் சிதைத்துவிடும். இத் தகைய பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடுவோம். நமது
நாட்டுமக்கள் உள்ளத்தில் ஒற்றுமையா க வாழ்வதற்கான எண்ணங்களையும் செயல்களையும் உருவாக்குவோம், மத மனித ஒற்றுமையை வேரூன்றச் செய் வோம்.
“ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு ; ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு” என்ற வரிகளை என்றும் நினைவில் கொள்வோம்.
– குணவதி சந்திரசேகர் (சிவகாசியிலிருந்து . . .)
(குணவதி அவர்கள், விதை2விருட்சம் இணையத்தில் பிரசுரிக்கவேண்டி, மின்னஞ்சல் மூலமாக அனுப்பியது)