Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குளிர் காலத்தில் நோயின் தாக்க‍ம் அதிகரிக்க‍ காரணம் என்ன‍?

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவ மனை ஆவணங்கள்மூலம் அறியலா ம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டு க்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடு த்து விடும். நம் நாட்டில், பெரும்பா லான மாதங்கள் வெயில்தான். ஆனா ல், அந்தந்த நாட்டு மக்களின் உடல் நிலை, அதற்கேற்ப மாறிக்கொள்வதா ல், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல் லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது.

மாற்றங்களுக்கான காரணங்கள்:

குளிர், ரத்தக்குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அள வுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.

குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதே சங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால், ரத்தத்தில் உள் ள சிவப்பணுக்கள், தட்டை அணுக்க ள், பைபர்நோஜன் அதிகரிக்கிறது . கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக் கிறது. இதனால், அளவுக்கு அதிகமா க ரத்தம்உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுரு ங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது. இத னால், நடுவயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ள து.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நா டுகளில் வாழும் மக்களுக்கு, குளிர் காலங்களில், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, 50சதவீதம் அதிகரிக்கிறது. இதேநிலைதான், நம் நாட்டில் மலை பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கும் ஏற்படும்.

மார்பில் அழுத்தம் ஏற்படுவதுதான், இதன் முதல் அறிகுறி. குளிர் காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதயத்துடிப்பு அதி கரித்து, ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது. ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களி ன் நிலை, இது போன்ற காலங்களில், மிகவும் பரிதாபம். தாறுமாறான இதயத் துடிப்புள்ள நோயாளிகள், ‘டீபிப்ரிலேட் டர்’ என்ற கருவியை பொருத்திக் கொ ள்வது வழக்கம்.

இது, ‘பேஸ் மேக்கரை’ப் போலத்தான் என்றாலும், ‘பேஸ் மேக்கர்’ குறைந்து போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். ‘டீபிப்ரிலேட்டர்’ கருவி, அதிகரித்துப் போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். இதுபோன்ற கருவி வைத்திருப்பவர்க ளும், மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, கவனமாக இரு க்க வேண்டும்.

ஓய்வுக்காக மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பாரன் ஹீட்டுக்குக்கீழே இறங்கிவிடும். அப்படி இறங்கிவிட்டால், உடல் நடுக்கம் ஏற்பட்டு, நிலை தடு மாறும். இதயம் செயலிழப்பு, மார டைப்பு, மயக்கநிலை மரணம் ஆகியவை ஏற்பட்டுவிடும். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர் க்க வேண்டும்.

தலைக்கு குல்லா, கை, கால்க ளுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டி ப்பாக பின்பற்ற வேண்டும். மது அருந்துபவர்களும், மலைப் பிரதேச த்திற்குச்செல்லும்போது, கவனமாக இருக்கவேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவ ப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரி வடைந்து, உடல் உஷ்ணமாகும்.

பின், திடீரென உடல் வெப்பம் குறைந் து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்திவிட்டு, வெளியேபோவதை அறவே தவிர்க்க வேண்டும். சமவெளி களில்கூட, மார்கழி, தை மாதங்களில், இதயநோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத் தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபடப் பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அச தி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும்.

ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப் போதும் கைப்பையில், ‘சார்பிட்ரே ட்’ மாத்திரை வைத்திருக்க வேண் டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குணமடையாவி ட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்லவேண்டும். அதுபோல், ‘ஏசி’ அறைகளில், 20 டிகிரி செல்சி யசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு.

அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போ ல், ஏசியை அணைத்து வைக் க வேண்டும். இங்கிலாந்தில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மாரடைப்பு வருகிறது. அவர்களில் 86 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அமெரிக்காவில், குளிர்காலத்தில் இதுபோன்ற நி லை ஏற்படுகிறது. இது போன்ற காலங்களில், 75 முதல் 84 வயது டையவர்கள், கை, கால்களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவ தை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

இது விதை2விருட்சம் பதிவு அல்ல‍

படித்த‍ இந்த இடுகை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: