மீன் ஊறவைக்க தேவைப்படும் நேரம்: குறைந்தது 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
மீன் – 1/2 கிலோ
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – சிறிதளவு
அரைத்து சேர்க்க வேண்டிய பொருட்கள் :
வெங்காயம் – 1 (நறுக்கியது 1/2 கப்)
பூண்டு – 5 பெரிய பல்
தேங்காய் – 2 பெரிய துண்டு (அ) துறுவியது 3 மேஜை கரண்டி
மிளகு – 1 தே.கரண்டி
சீரகம் – 1 தே.கரண்டி
சோம்பு – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகை கள் :
மஞ்சள் தூள் – 3/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
புளியினை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ள வும் . மிக்ஸியில் மிளகு + சீரகம் + சோம்பு சேர்த்து முதலில் நன்றாக பொடித்து கொள்ளவும். அத்து டன் வெங்காயம் + பூண்டு+ தே ங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவை + தூள் வகை கள் + புளி தண்ணீர் சேர்த்து நன் றாக கலந்து ஒவ்வொரு மீன் துண்டுகளிலும் தடவி குறைந்த து 30 நிமி டங்கள் ஊறவிடவும். கடாயினை காயவைத்து 1 மே ஜை கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மீன்களை சேர்த்து வறு க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய மீன் வறுவல் ரெடி.
கவனிக்க :
சின்ன வெங்காயம் சேர்த்தால் நல்லா இருக்கும். வெங்காயம் + பூண் டினை அளவினை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டாம்.
அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல தூளினை சேர்த்து கொள் ளவும். அதே மாதிரி வெங்காயம் + பூண்டினை தவிர்த்து தேங்கா யினை சிறிது அதிகம் சேர்த்து செய்தாலும் சூப்பராக் இருக்கும்.
கண்டிப்பாக புளி கரைசலினை சேர்த்துகொள்ள வேண்டும். புளி கரைசலிற்கு பதிலாக எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்ளலாம்…ஆனால் சுவையில் வித்தியாசம் இருக்கும். அதனால் புளி சேர்த்து கொண்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
மீனை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊற விடலாம். அதற்கு பிறகும் ஊறவைத்து என்றால், Fridgeயில் வைத் து விடுவது நல்லது.
நன்றி =>கீதா