Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நித்தி சீடர்களை வெளியேற்றி, என் உயிரை காப்பாற்றுங்கள் – அலறும் மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம் இன்று இரவு 8 மணிக்கு மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அம் மனுவில், ‘’நித்தியானந்தாவை நான் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்தேன். சில கார ணங்களால் நாளை நான், நித்தி யானந்தாவை மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். இதனால் மடத்திற்குள் இருக்கும் நித்தியானந்தா சீடர்களால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே,  நித் தியானந்தா சீடர்களை இன்று இரவுக்குள் வெளியேற்றி என் உயிரை காப்பாற்றுங்கள். என் மடத்திற்கு தக்க பாதுகாப்பு கொ டுத்து காப்பாற்றுங்கள்’’ என்று கூறியுள்ளார்.இந்த புகார் குறித்து விளக்குத்தூண்டு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆதீனமடத்திற்குள் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகிறார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இன்று இரவு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். ஆதீ னத்தின் வாரிசாக எம்மால் 23 .4.2012ம் நாள் நியமிக்கப்பட்டு 27.4. 2012 ஆவணத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட பெங்களூர் ஆசிரம பீடா திபதி நித்தியான ந் தாவை இன்று 19.10.2012 முதல் வாரிசாக பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக இந்த அறிவிப்பின்மூலம் தெரி வித்துக் கொள்கிறேன் என்று அவர் அறிவித்தார்.

One Comment

  • Anonymous

    REALIZING IS THE RESULTS FROM THE LEARNING PROCESS. LEARNING IS THE ENDLESS PROCESS IN STUDY. I THINK , NOW MADURAI AADEENAM IS RESTARTED TO LEARN THE LESSONS. ALL THE BEST TO THE STUDENT & TEACHER (NITHYA-ANANDAM KONDAVAR)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: