செபி அமைப்பின் தலைவராக யூ.கே.சின்ஹா பதவி ஏற்றபிறகு பங் குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சிறு முதலீட்டா ளர்களுக்குச் சாதகமாக பல்வேறு அதி ரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில், பான் கார்டு இல்லாமல் ஓராண்டில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் 50,000 ரூபாய் வரை மொத்தமாகவோ, எஸ்.ஐ.பி. முறையிலோ முதலீடு செய்யலாம் என சலுகை அறிவித்தது செபி. இப்போது 50,000 ரூபாய் வரையிலான பங்குச் சந் தை முதலீட்டுக்கு டீமேட் கட்டணம் வசூ லிக்கக் கூடாது என பங்குகளை நிர்வகி த்துவரும் நிறுவனங்களுக்கு செபி ஆணை பிறப்பித்திருக்கிறது.
சிறுமுதலீட்டாளர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக அடிப்படை சேவைகள் டீமேட் கணக்கை (Basic Services Demat Account -B S D A) செபி அறிமுகம்செய்ய இருக்கிறது. இதன்படி 50,000 ரூபாய் வரை யிலான முதலீட்டுக்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம் கிடையாது. முத லீட்டின் மதிப்பு 50,001 ரூபாயிலிருந் து 2 லட்ச ரூபாய் வரை இருந்தால் ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படு ம். அதற்குமேல் எனில், வழக்கமான கட்டணம் வசூலி க்கப்படும். தற்போது டீமேட் கணக்கு களை நிர்வகித்துவரும் நிறுவனங்கள் அல்லது பங்கு தரகு வர்த்தக நிறுவன ங்கள் டீமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணமாக ரூ.225 முதல் ரூ.900 வரை வசூலித்து வருகின்றன.
இந்த புதிய ஏற்பாட்டின்படி, முதலீட்டாளர் களின் பங்குகள் அல்லது மியூச்சுவல் திட்ட யூனிட்கள் மதிப்பு ஒவ் வொரு நாள் வர்த்தகம் முடிவின்போ தும் கணக்கிடப்படும். இதன் மதிப்பு 50, 000 ரூபாயைத் தாண்டினால் கட்ட ணம் வசூலிக்கப்படும். ஒருமுறை இந்த உச்ச வரம்பை தாண்டிவிட்டால் அந்த முத லீட்டாளர் கட்டண வரம்புக்குள் வந்து விடுவார்.
ஒரே ஒரு டீமேட் கணக்கு மட்டும் வைத் துள்ள அல்லது வைக்க விரும்பும் தனிப் பட்ட முதலீட்டாளர் மட்டுமே இந்த சிறப்பு கணக்கு வசதியை பயன்ப டுத்த முடியும். ஒருவருக்கு இரண்டு டீமேட் கணக்கு இருந்தால் இந்த சலுகை கிடையாது என்பது முக்கிய மான விஷ யம்.
டீமேட் கணக்குகளை நிர்வகித்து வரும் டெபாசிட்டரி பார்டிசிபேன்ட் (டி.பி.) நிறுவனங்களுக்கு இதற்கா ன ஏற்பாடுகளை செய்யும்படி செபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. குறிப் பாக என்.எஸ்.டி.எல்., சி.டி.எஸ்.எல். நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவி க்கப்பட்டிருக்கி றது.
இந்த சிறப்பு திட்டத்தின்கீழ் ஆண்டுக் கு ஒருமுறை, அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆண்டுக்கு அதிகபட்சம் இரண்டு அக்கவுன்ட் ஸ்டே ட்மென்ட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். அதற்குமேல் என்றா ல் ஒருஸ்டேட்மென்டுக்கு 25 ரூபாய்க்குள் கட்டணம் இருக்கும். அதே நேரத்தில் இ-மெயில் மூலம் அனுப்பப்ப டும் ஸ்டேட்மென்டுகளுக்குக்கட்டணம் எதுவு ம் கிடையாது.
இந்த புதிய நடைமுறையை அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆரம்பிக்க டி.பி.களுக்கு செபி அறிவுறுத்தி இருக்கிறது. இந்த புதிய நடைமு றை யினால் முதலீட்டாளர்களுக்கு லாபமா, பங்குச் சந்தைக்கு நன்மையா? என பங்குச்சந் தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.
மப்புறங்களைச் சேர்ந்தவர் கள் மற்றும் மூத்தக் குடி மக் கள் அதிகம் பயன் அடைவா ர்கள். இந்த சலுகை டீ மேட் கணக்கு, வர்த்தகர்கள் மற் றும் குறுகிய கால முதலீட் டாளர்களுக்கு அதிக பயனு ள்ளதாக இருக்கும் என சொ ல்ல முடியாது. ஆனால், நீண்ட கால பங்கு மற்றும் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இரு க்கும். 2 லட்ச ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு டீமேட் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் 100 ரூபாய் என்பது லாபகரமானதுதான்.
இதனால் பல மியூச்சுவல் ஃபண்ட் முதலீ ட்டாளர்கள் கூட, டீமேட் கணக்குக்கு தங்கள் ஃபண்ட் யூனிட்களை மாற்ற வாய்ப்பு இரு க்கிறது” என்றார்.
50,000 ரூபாய் வரையிலான டீமேட் கணக்குகளைத் தொடங்கும் சிறு முதலீட்டாளர்களை, புரோக்கரேஜ் நிறுவனங்கள் ஊக்குவிப்பா ர்களா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் பங்குச் சந்தையில் பழு த்த அனுபவம் கொண்டவர்கள். தகுதியுள்ள சிறு முதலீட்டாளர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த இலவச டீமேட் கணக்கு தொடங்க செபி நடவடிக்கை எடுக்க வேண் டும்.
தவிர, பான் கார்டு விவரங்களை கேட்காம ல் வங்கிக் கணக்கின் அடிப்படையில் கண க்கு தொடங்கலாம் என்று செபி அறிவித்தா ல் சிறு முதலீட்டாளர் அதிக எண்ணிக்கை யில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முன்வருவார்கள். பான் கார்டு எண் கொடுத் தால்தான் டீமேட் கணக்கு செல்லுபடியாகு ம் என 2007-ம் ஆண்டு செபி அறிவித்தது. அப்போது பான் கார்டு கொ டுக்க பலரும் விரும்பாததால், சுமார் 20 லட்சம் டீமேட் கணக்குகள் முடங்கியதை யாரும் மறக்க முடியாது. இலவச கணக்கை கொண் டுவந்த செபி இதையும் செய்தால்தான் முதலீட்டாளருக்கும், சந்தை க்கும் நன்மை விளையும்!
– சி.சரவணன், விகடன்