Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (21/10) அவள் நம்பி வந்துட்டா. வேற வழியில்லை' அவளோடு அனுசரித்து போ…

அன்புள்ள சகோதரிக்கு—

நான் 31 வயது பெண். தனியார் பள்ளியில், நல்ல வருமானத்தில் வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, ஒன்பது வயதில் பெண் குழந்தை உள்ளது. என்னுடைய து பெற்றோரின் அனுமதி இல் லாமல் நடந்த, காதல் திருமண ம். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். திருமணத்தின்போ து, என் வீட்டில் இருந்து, 15 பவுன் நகையை எடுத்து சென்றுவிட் டேன்.

என் அப்பா, ரொம்ப கண்டிப்பான வர். அதாவது, எந்த பெற்றோரும் , தன் பிள்ளைகள் வசதியாக, சந் தோஷமாக வாழவேண்டும் என் று தான் நினைப்பர். ஆனால், அப் பா அப்படியே எதிர்ப்பதம். அம்மா , அப்பா சொல் தட்டமாட்டாங்க. எனக்கு, ஒரு அக்கா, தம்பி. (தம்பி இரு ஆண்டுகளுக்குமுன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான்.) அக்காவு ம், காதல் திருமணம் தான்.

எங்கள் அப்பா, எட்டு ஆண்டுகளாக எங்களிடம் பேசவே இல்லை. ஒரே தெருவில் தான் வீடு. என் அப்பாவை விட்டு, எப்படா வெளியே போவோம் என்று இருந்த எங்களுக்கு, நல்ல துணையென நம்பி, அப்பாவை எதிர்த்து திருமணம் செய்தேன்.

மாமியார் வீட்டில், சம்மதித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு சந்தோஷ மாகத்தான் இருந்தோம். என் கணவர் குடும்பம் ஏழ்மையான குடும் பம் தான். ஆனால், சொந்த வீடு உள்ளது. மாமனார் டெய்லர். நாத்த னார் திருமணமானவள். கல்லூரியில் வேலை பார்க்கிறாள். 2006 வரை, என் கணவர், என் மீதும், என் குழந்தை மீதும் அளவுக்கு அதிக மாக பாசம் வைத்திருந்தார்.

ஆனால், எப்போது பிசினஸ் ஆரம்பித்தாரோ, அப்போதே எங்களை யும் மறக்க ஆரம்பித்து விட்டார். டெலிபோன் பூத், இரண்டு ஷேர் ஆட்டோ, கிராமத்தில் சினிமா தியேட்டர் என, கடன் வாங்கி ஆரம் பித்தார். என் நகைகளையும் அடகு வைத்து தான் செய்தார்.

திருமணமாகி இரண்டு மாதத்திலேயே, குடும்ப கஷ்டம் தெரிந்து, வேலைக்கு போக ஆரம்பித்தேன். தொழில் ஆரம்பித்து, ஆறு மாதத் திலேயே, என் கணவர் ஷேர் ஆட்டோ ஓட்டி, வலது கை இரண்டாக உடைந்து விட்டது. என் நகைகளை மீட்கவே முடியாத அளவுக்கு கடன் வாங்கி, கையை காப்பாற்றினேன். ஒரு ஆண்டாக சாப்பிடவும் முடியாமல், நடக்கவும் முடியாமல், ரொம்ப கஷ்டப்பட்டார். எனக்கு, வேலையை விட முடியாத சூழ்நிலை. ஏகப்பட்ட கடன். சாப்பாட்டிற் கே வழியில்லை. பிசினஸ் வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஐந் து லட்சம் கடன் தான் மிச்சம். முதலில் என் கணவர், டூ-விலர் கம்பெ னியில் தான் வேலை பார்த்தார். விபத்துக்கு பின், ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இடையில், மாமியாருக்கும், என் கணவருக்கும் சண்டை வந்து, ஏழு ஆண்டுகளுக்கு பின், தனிக் குடித்தனம் வந்தோம். நல்ல சம்பளத்தில், என் கணவருக்கு, 2008ல் வேலை கிடைத்தது. அப்போதுதான், என்வாழ்க்கை திசை மாறியது.

என் கணவர், யாரோ ஒரு பெண்ணுடன் வண்டியில் அடிக்கடி சுற்று வதாக கேள்விப்பட்டேன். நம்பவே இல்லை. என் கணவரிடம் சண் டை போட்டும் பயனில்லை. “அந்த பெண், விவாகரத்து ஆன பெண். நல்ல பெண். சொன்னால் நீ தவறாக நினைத்துக் கொள்வாய் என்று தான், உன்னிடம் சொல்லவில்லை. இனிமே பார்க்க மாட்டேன்; பேச மாட்டேன்…’ என்று சொன்னார்.

ஆனால், என்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவள்கூட, சுத்த ஆரம்பி த்து விட்டார். என் மேலும், என் பிள்ளை மேலும் இருந்த பாசம், படிப் படியாக குறைய ஆரம்பித்து, எங்களுக்குள் தினசரி சண்டை வர ஆரம்பித்தது.

என் அக்காவும், அக்கா கணவரும், அவங்க இரண்டு பேரையும் நேர டியாக பார்த்து, வீட்டில் வந்து கண்டித்து விட்டு போனார்கள்.

என் தம்பி இறந்தபின், நானும், என் அக்காவும் எட்டு ஆண்டுகள் கழி த்து, இப்போது தான் அப்பா வீட்டிற்கு போக வர இருக்கிறோம். தம்பி இறந்தது, அப்பா அம்மாவிற்கு பெரிய இழப்பு. இதில், என் பிரச்னை வேறு.

அந்த பெண்ணும், திருமணமாகி அவளுக்கும், பன்னிரெண்டு வயதி ல் பெண் குழந்தை உள்ளது. வசதியானவள். என் கணவர்தான் அவ ளுடைய கணவர் என்று சொல்லி, வீடு பிடித்து, வந்துவிட்டாள். என் தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்தது. இருப்பினும், அவள் அம்மாவிடம் பேசினோம். அவளிடமும் சண்டைபோட்டு, மகளிர் கா வல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால், அவள், “நீங்க எப்படி அவருக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தீங்களோ, அதே மாதிரி, நானும் அவருக்காக, என் கணவரையும், பிள்ளையும் விட்டுட்டு வந் திருக்கேன். அவர் எவ்வளவு தைரியம் கொடுத்திருந்தால், அவரோடு தனியா வந்திருப்பேன்?’ என்று கேட்கிறாள். என் கணவரிடம் கேட்ட துக்கு, “அவள், என்னை நம்பி வந்துட்டா. வேற வழியில்லை’ அவ ளோடு அனுசரித்து போ… என்கிறார். 

மாமியாரும், நாத்தனாரும், “நீ தான் கூட இருந்து திருத்த வேண்டும். புருஷன் கடனை பொண்டாட்டிதான் அடைக்க வேண்டும்…’ என்று கூறுகின்றனர். இவர்கள் டார்ச்சர் தாங்கமுடியாமல், என் அப்பா வீட் டுக்கு, என் பிள்ளையை கூட்டிட்டு வந்துட்டேன். இப்ப, வேறு ஒரு பள்ளியில் வேலைக்கு சேர்ந்து முன்பைவிட அதிகம் சம்பாதிக்கிறே ன். ஆனால், மென்டல் டார்ச்சர்.

விவாகரத்து பெற, கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளேன். குடும்ப வன் முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், 15 பவுன் நகையும், எனக்கு ஜீவனாம் சமும் கேட்டிருக்கேன். வழக்கு இழுத்துக் கொண்டே செல்கிறது.

இப்போது, என் கணவர், தன் கடனை அடைப்பதற்காகவும், என் சம் பாத்தியத்திற்காகவும், என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று, குடும்ப நல கோர்ட்டில் வழக்கு போட்டிருக்கிறார். ஆனால், இன்ன மும் அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார். 

என் அப்பா டார்ச்சர் தாங்காமல் தான், கல்யாணம் செய்து ஓடிப் போ னேன். ஆனால், அந்த நரகத்தில், என் பிள்ளையும் இப்போ கஷ்டப் படுகிறாளேன்னு நினைக்கும் போது, மனசு வலிக்கிறது.

என் அப்பா, என்னை, ஏண்டா வீட்டுல சேர்த்துக் கொண்டோம் என்று கவலைப்படுகிறார். “நாங்கள் இல்லை என்றால், அவன் கூடத்தா னே இருந்திருக்க வேண்டும்’ என்று திட்டுகிறார். என் சம்பளத்தை, அவர் கிட்ட கொடுக்க வேண்டும்  என்று நினைக்கிறார். என் கணவ ருக்காக வாங்கின கடனே, இன்னும் அடைக்க முடியவில்லை. இந்த விஷயம் தெரிந்தால், “அவனுக்காக எவ்வளவு கடன் வாங்கி கொடு த்திருக்க…’ என்று, என் மேல கோபப்படுவார்.

என் பிரச்னை தீர, நீங்கள் தான் வழி காட்ட @வண்டும்.

— இப்படிக்கு தங்கள்
அன்பு சகோதரி.

அன்பு சகோதரிக்கு,

கண்டிப்பான அப்பாவை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். வாழ்க் கையை, உன் தந்தையின் கோணத்தில்இருந்து பார். அப்பாவை பற் றிய, தவறான அபிப்ராயம் மாறும். உன் தந்தைக்கு, இரு மகள்கள், ஒரு மகன். இரு மகள்களுமே, அப்பாவை மாப்பிள்ளை பார்க்கவிடா து, காதல் திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள். ஒற்றை மகனோ, விபத்தில் இறந்து விட்டான். வீட்டில் எந்த மங்கல நிகழ்ச்சியும் பார் க்க, உன் தந்தைக்கு கொடுத்து வைக்கவில்லை. உன் தந்தைக்கு, வாழ்க்கை மகா வெறுமையாய் இருக்கும்.

நீ அமோகமாக வாழவேண்டும் என, மனதார விரும்பியிருப்பார் உன் தந்தை. அதை வாய் வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்க மாட்டா ர். உலகத்தில், பல தந்தைகள் பலாப்பழங்களாக வெளியில் முட்க ளுடன் காட்சியளிக்கின்றனர். எட்டு ஆண்டுகளாக, நீ, உன் தந்தையு டன் பேசாத போதும், கணவனுடன் பிரச்னை எனக்கூறி, அவர் வீட்டு வாசலை மிதித்த போது, அடைக்கலம் தந்தவர் உன் தந்தை.

பொதுவாக, காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்கள், கட்டின புடவையோடு போவார்களே தவிர, பதினைந்து பவுன் நகை யை தூக்கிக் கொண்டு செல்லமாட்டார்கள். நீ சென்றிருக்கிறாய். அதையும் தானே, உன் தந்தை ஜீரணித்திருக்கிறார்.

நீ, உன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய உன் தந்தைக்கு, எப்படி நன்றியாய் இல்லையோ, அதேபோல் தான், கணவனின் வியாபாரத் திற்கு, நகைகளை கொடுத்து, அவன் கடன்களை அடைக்கும், மனை விக்கு, உன் கணவன் நன்றியாய் இல்லை.

தனிக் குடித்தனம் போகும் வரை, உன் கணவன் சொக்கத் தங்கமாக இருந்திருக்கிறார். தனியாக வந்தவுடன், உடலுழைப்பு தேவைப்படா த, ஒயிட்காலர் வேலையில் அமர்ந்தவுடன், உன் கணவனின் மன க்குரங்கு, கிளைக்கு கிளை தாவ ஆரம்பித்திருக்கிறது.

எதற்கும் ஒரு மத்தியஸ்தர் வைத்து, உன் கணவனோடுபேசி, அவன து ஆசைநாயகியை, அவளது ஒரிஜினல் கணவனுடன் சேர்த்து வை க்க முயற்சி செய்து பாரேன். இது நடந்தால், உன் கணவன் உன்னோ டும், உன் குழந்தையோடும் மீண்டும் வந்து சேர்வான்.

நீ நகையை திரும்ப கேட்டும், ஜீவனாம்சம் கேட்டும், விவாகரத்து கோரியும் வழக்கு போட்டிருப்பது சரிதான். நீதிமன்றத்தில் தாமதமா கவாவது உனக்கு நீதி கிடைக்கும்.

உனக்கும், உன் கணவனுக்கும் விவாகரத்து ஆனால்கூட, கணவனி ன் ஆசை நாயகிக்கு விவாகரத்து கிடைத்தால்தான், உன் கணவனும் , ஆசைநாயகியும் சட்ட ரீதியாய் சேர்ந்து வாழ முடியும்.

விவாகரத்து கிடைத்துவிட்டால், நீ, கணவனின் கடனை அடைக்க வேண்டியதில்லை. விவாகரத்துக்குபின், நீயும், உன் மகளும் பொரு ளாதார ரீதியாய் சிரமப்படப்போவதில்லை. இருந்தாலும், கணவன் இல்லாமல் நீயும், தகப்பன் இல்லாமல் உன் மகளும், நெருப்பாற்றை நீந்தும் வாழ்க்கை வாழ வேண்டி வரும்.

தொடர்ந்து பெற்றோர் வீட்டிலேயே இரு. தொலைத்தூரக்கல்வி இய க்கம் மூலம், உயர்கல்வி பயில். மகளை நன்கு படிக்க வை.

ஒரு தேவ சந்தர்ப்பமாக விவாகரத்துக்கு பின், உன்னை மறுமணம் செய்து கொள்ள தகுதியான ஆண் கிடைத்தால், நன்கு அலசி ஆராய் ந்து, பெற்றோரின் வழிகாட்டலுடன் சம்மதம் தெரிவி. வாழ்த்துகள்…

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: