Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பால் காய்ச்சுவது எப்ப‍டி ?

நீங்கள் எப்படி பால் காய்ச்சனும்னு உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன் தருகிற தகவல்களைப் படித்துப் பாருங்கள். அப்போது உங் களுக்கு தெரியும் பால் காய்ச்சுவ தன் அருமை என்ன என்று.!  பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம். 

காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களு க்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக் கும் போது, அதில் உள்ள வைட்ட மின், பி காம்ப்ளக்ஸ் சத்துக் களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகி விடும். 

கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக் கடி சுடவைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்ப தும் வீண்தான். 

பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீ ரியா, வைரஸ் போன்ற நுண் கிருமி கள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியது ம் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக்கிளறிக்கொ ண்டே இருக்கவேண்டும். அப்போது தான் பால், 100டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும். 

இன்று பெரும்பாலும் பாக் கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின்தான், பாக் கெட்டுகளில் அடைக்கப்ப டுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண் டும் என்ற அவ சியமில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பா லில் ஏற்கனவே, பாக்டீரியா க்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.  

பாலைக் காய்ச்சியதும் குடித்து விடவேண்டும். பாலை ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர் க்கவேண்டும். பொதுவாக, எந்த வகைப்பாலாக இருந் தாலும், அதை இரண்டு மு றைக்கு மேல் சுடவைக்க வேண்டாம். 

ஒருமுறை பாலைக் காய்ச்சி யபின், அதை பிரிட்ஜில் வை க்கலாம். காபி, டீ எனத் தயா ர் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்த னை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத் துத் தயார் செய்யலாம். 

இனியாவது பால் காய்ச்சும் போது சத்துக்களை அழித்துவிடாமல் ஒழுங்காக பால் காய்ச்சுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍
பகிரப்பட்ட‍ இடுகையை உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்

One Comment

  • malar

    நல்ல பயனுள்ள தகவல்……உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி….
    நன்றி,
    மலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: