Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆளுமை (Personality) என்பது என்ன?

ஆளுமை
ஆளுமை என்பது என்ன என்பது பற்றி அறுதியான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இல் லை. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற் றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர் வுகள், சிந்தனை களையும் குறிக்கிறது. பொது வழக்கில் ஆளுமை என்பது ஒருவரின் வெளித்தோற்றத்தைப் பெரி தும் குறி க்கிறது. ஆளுமை என்பதைச் சுருக்கமாக “ஒருவரைத் தனித்துவமா ன வராக ஆக்கும் எண்ணங்கள், உணர் வுகள், நடத்தைகள் என்பவற்றாலான ஒன்று” என வரையறுக்கலா ம். அத்துடன் ஆளுமை ஒருவரின் உள்ளிருந்து உருவாகி அவருடை ய வாழ்க்கைக் காலம் முழுதும் சீராக அமைகின்றது.
ஆளுமை என்னும் தமிழ்ச்சொல் “பர்சனாலிட்டி” (Personality) என்னும் ஆங்கிலச்சொல் குறிக்கும் கருத்துரு வைக்குறிக்க ஏற்பட்டது. இலத்தீன் மொழியில் “பர்சனா” (persona) என்பது ‘மறைப்பு’, ‘முக மூடி’ என்னும் பொருள் தருவது. எனவே ஆளுமை என்பது “ஒருவர் அணிந்திருக்கும் முக மூடி” என்னும் கருத்துருவின் அடிப்படையைக் கொண்டுள்ளது.
ஆளுமையின் கூறுகள்
ஆளுமையின் அடிப்படையாக அமையும் சில இயல்புகள் இனங் காணப்பட்டுள்ளன. அவையாவன:
சீராக இருத்தல் – தனியாட்களின் நடத்தையில் ஒழுங்கும் சீர்த்தன் மையும் காணப்படுகின்றது. குறிப் பாகப் பல்வேறு நிலைமை களில் ஒரே மாதிரியாகவே ஒருவர் செய ல்படுவதும் தெரிகிறது.
உளவியல், உடலியல் என்பவை சார்ந்து அமைதல் – ஆளுமை என்பது ஒரு உளவியல் உருவாக்கம் ஆகும். எனினும், உடலியல் செயல்முறைகள், தேவைகள் என்பவை யும் இதைப் பாதிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
நடத்தைகளையும், செயல்களையும் பாதித்தல் – ஆளுமை என்பது ஒருவர் எவ் வாறு சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்கி றார் என்பது மட்டு மன்றி, ஒரு குறிப்பிட்ட முறையில் அவர் நடந்துகொள்வதற்கும் காரணமாக அமைகின்றது.
பன்முக வெளிப்பாடு – ஆளுமை என்பது ஒருவருடைய நடத்தை மூலம் மட்டும் வெளிப்படுவதில்லை. அது, அவருடைய எண்ணங்கள், உணர்வுகள், நெருக்கமான உறவுகள், பிற சமூகத் தொடர்பாடல்கள் போன்றவற்றிலும் வெளிப்படுகின்றது.
ஆளுமைக் கோட்பாடுகள்
ஆளுமை பற்றியும் அது உருவாகும் விதம் குறித்தும் பலவகையான கோட்பாடுகள் முன் வைக்க ப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட சிந்தனைக் குழுக்கள் இவ் வாறான கோட்பாடுகளின் உருவாக்கத்துக்குக் காரண மாக அமைந்தன. ஆளுமை குறித்த முக்கிய கோட்பாட் டு வகைகளாகப்பின் வருவ னவற்றைக் குறிப்பிட லாம்.
வகைக் கோட்பாடுகள் – இவை ஆளுமை குறித்த தொடக்ககாலக் கோட்பாடுகளாகும். இக்கோட்பாடுகள் ஒரு குறிக்கப்பட்ட எண்ணிக் கையான ஆளுமை வகைகளே உள்ளதாகக் கூறின. அத்துடன், இவை உயிரியல் காரணங்களா ல் உருவாவதாகவும் கருதப்பட் டது.
இயல்புக் கோட்பாடுகள் – இக் கோட்பாடுகள் ஆளுமையை, மரபியல் அடிப்படையிலான உள்ளார்ந்த இயல்புகளின் விளைவாக நோக்கி ன.
உள இயக்கவியல் கோட்பாடுகள் -இவை ஆளுமைமீது நனவிலித் தன்மையின் செல்வாக்குக்கு அதிக அழுத்தம் கொடுத்தன. இக்கோட் பாடுகளில் பெரும்பாலும் சிக்மண்ட் பிராய்ட் செய்த ஆய்வுகளின் செல்வாக்குக் காணப்படுகின்ற து.
நடத்தைக் கோட்பாடுகள் – தனியா ளுக்கும், சூழலுக்கும் இடையிலா ன இடைவினைகளின் விளைவே ஆளு மை என இக்கோட்பாடுகள் கருதுகி ன்றன. இக்கோட்பாடுகள் அளக்கக் கூடியவையும் கவனிக்கத்தக்கவை யுமான நடத்தைகளை மட்டுமே கருத்துக்கு எடுக்கின்றன. எண்ணங் கள், உணர்வுகள் போன்ற உளம் சார்ந்த விடயங்களை இவை கவன த்திற் கொள்வதில்லை.
மனித நலக்கோட்பாடுகள் – இக்கோ ட்பாடுகள், ஆளுமையின் உருவாக்க த்தில் கட்டற்ற தன்விருப்பு, தனிமனித ப் பட்டறிவு என்பவற் றுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
ஆளுமைச் சிதைவு (Personality disorder)
ஆளுமைச் சிதைவு (Personality disorder) என்பது, சமகாலச் சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பில் இருந்து விலகிக் காணப்படும் ஆளுமை வகைகளில் ஒன்றாகும்.
ஆளுமைச் சிதைவு தொடர்பான நோயறி முறைகள் பெரிதும் தற்சார்பு கொண்ட வையாக உள்ளன. எனினு ம் வளைந்து கொடுக்காத, தவறான நடத்தைக் கோல ங்களும், பொதுவான செயற்பாட்டுக் குறைபாடுகளும், பெரும்பாலும், தனிப் பட்ட மற்றும் சமூகப் பிரச்சி னைகளுக்குக் காரண மாக அமைகின்றன.
வளந்து கொடாத: தொடர்ந்து இருக்கும் உணர்வுகள், சிந்தனைகள், நடத்தைகள் என்பன “நிலைத்த மனக்கண் வடிவம்” (fixed fantasies) அல்லது “செயற்பிறள்வு மனக் கண் நோக்கு” (dysfunctional schemata) என அழைக்கப்படும் அடிப்படையாக அமை ந்த நம்பிக்கை முறைமைகளினால் உரு வாவதாகக் கருதப்படுகின்றது.
அமெரிக்க உளநோய் மருத்துவக் கழக ம் ஆளுமைச் சிதைவு என்பதற்குப் வரை விலக்கணம் கொடுத்துள்ளது. இதன்படி ஆளுமைச் சிதைவு என்பது, “இந்நிலை யை வெளிப்படுத்தும் ஒருவர் சார்ந்த பண்பாட்டினரின் எதிர்பார்ப்புக்குக் குறிப்பிடத்தக்க அளவு வேறுபா டான, தொடர்ந்திருக்கும் அக அனுபவம் மற்றும் நடத்தைக் கோலம் ஆகும்”

 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: