Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோய் எதிர்ப்பு சக்தியை அளி(திகரி)க்கும் உணவுகள்!!!

இன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாமல் இருக்கிறோமா என் று கேட்டால், யாரும் அதற்கு பதி லளிக்க முடியாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை, உணவு ப் பழக்க வழக்கங்கள் போன்றவ ற்றில் நிறைய மாற்றங்கள் உள் ளன. அதாவது அனைத்தும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. மேலும் எந்த ஒரு வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னும் உடலில் ஒருவித சோர்வு, எதற்கு எடுத்தா லும் தலைவலி, அந்த வலி, இந்த வலி என்று உடலில் உள்ள நோய் களை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

முக்கியமாக இந்த நோய்கள் நமது உட லை விரைவில் தாக்குவதற்கு, உடலில் வரும் நோய்களை எதிர்த்துப்போராடும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இரு ப்பதும், உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லா ததும் முக்கிய காரணங்களாகும். இவை ஏற் படுவதற்கு நாம் உண்ணும் உணவில் சரியா ன ஊட்டச்சத்துள்ள, இரத்த வெள்ளை அணு க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை, டயட்டில் சேர்த்துக்கொள்ள வே ண்டும்.

இந்த காலத்தில் சாப்பிடுவதற்கே நேரம் இல்லாத போது எப்படி இர த்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடு த்து சாப்பிடுவது என்று கேட்கலா ம். ஆனால் அத்தகைய உணவுகள் அன்றாடம் எளிதில் கிடைக்கப்பெ றும் வகையில் தான் இருக்கிறது. ஆகவே அவற்றை என்னவென்று தெரிந்து கொண்டு, உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உட லை எந்த நோயும் தாக்காமல் பார் த்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

தயிர்

தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வைட்டமின் டி உள் ளது. அதிலும் இந்த தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீ ரியாக்கள், குடல் பாதையை எந் த ஒரு நோயும் தாக்காமல் பாது காப்பதோடு, உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடு ம் வெள்ளை இரத்த அணுக்களி ன் எண்ணிக்கையை அதிகரிக் கிறது. மேலும் தயிர் சாப்பிட்டா ல் செரிமான மண்டலமும் நன் கு செயல்பட்டு, உடலில் உள்ள கெட்ட பாக்டீயாக்களை எளிதில் வெளியேற்றிவிடும்.

இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் அடங் கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸி டன்ட்டான பீட்டா கரோட் டீன் அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிடுதால் முதுமை தோற்றம் எளிதில் ஏற்படாமல் இருப்பதோடு, சில ஆய்வுகளில், பெருங் குடல் மற்றும் மலக்குடல்களில் ஏற்படும் புற்றுநோய்களை வராமல் தடுக்கும் என் றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காளான்

காளானில் செலீனியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் பி சத்துக்களான ரிபோஃப்ளாவின் மற்றும் நியாசின் போன்றவை உள்ளது. அதிலு ம் காளானில் லென்டினான் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது. இதனால் காளானை சாப்பிடுவதால், உடலில் பல புற்றுநோ ய்கள் வராமல் இருக்கும். சொல்லப் போனால், காளான் எய்ட்ஸால் பாதிக் கப்பட்டவர்களின் உடலில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.

பாதாம்

வைட்டமின் பி சத்துக்களான ரிபோப்ளேவின் மற்றும் நியாசின் பா தாமில் அதிகம் நிறைந்துள்ளது. அதேப் போல் இதில் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ சத்தும் உள் ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், இர த்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவு வைப்பதோடு, உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத் தி இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கிரீன் டீ

தினமும் கிரீன் குடித்தால், உடல் எடை மட்டும் குறைவதில்லை. இ தில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸி டன்ட்டான எஃபிகளோகாட்டிசின், வைட் டமின் சி மற்றும் பி உள்ளது. இதனால் உடலை எந்த ஒரு சளி, இருமல் போன்ற வை எதுவும் அண்டாமல் இருக்கும். மே லும் இந்த கிரீன் டீ புற்று நோய்கள், இத யநோய், ஹைப்பர் டென்சன் போன்ற எதுவும் வராமல் தடுக் கும்.

கீரைகள் மற்றும் பிராக்கோலி

கீரைகள் மற்றும் பிராக்கோலியில் அதிகளவி ல் உணவில் சேர்த்துக் கொண்டால், அதில் உள் ள ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களா ன வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் புற்றுநோ யை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் பொ ருளும் இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர் ப்பு சக்தி அதிகரி க்கும்.

பெர்ரி

பெர்ரிப் பழங்களில் அதிகளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆக வே இதனை உணவில் சேர்த்துக்கொண் டால், இதயநோய், இரத்தக் குழாய்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சில புற்று நோ ய்கள் வராமல் தடுக்கலாம்.

பூண்டு

அதிக நறுமணம் உள்ள உணவுப் பொருளா ன பூண்டிலும் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. ஆகவே இத்த கைய பூண்டை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், உடலை எந்த ஒருநோயு ம் தாக்காமல் பாதுகாக்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍
பகிரப்பட்ட‍ இடுகையை உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்

2 Comments

Leave a Reply

%d bloggers like this: