Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டும் 4 யோகாசனங்கள்

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோ டு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற் சியின் மூலம் மன அழுத்தம் குறை வதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய் வதும் தெரியவந்துள்ளது.

பத்மாசனம், தனுராசனம், புஜங்காச னம், சர்வாங்கசனம் ஆகிய ஆசன ங்களை தவறாது செய்வதன்மூல ம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற் சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத் துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

புஜங்காசனம்

புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. இப்பயிற்சி யை செய்துவந்தால் வெள் ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிபோதல் போன்ற நோ ய்கள் மறையும். அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனு ராசனம் ஆகிய ஆசனங்களை சேர் த்து செய்து வர வேண்டும்.

இதனால் முதுகுத்தண்டு தொடர் நழுவுத ல், முதுகு தசை வலி மற்றும் அடி முதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத் தண்டை ஆரோ க்கியமாக வைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராம ல் பாதுகாக்கும். வயிற்று பொறுமல், மல ச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற் றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.

தனுராசனம்

வில்போல வளைந்துசெய்வதால் தனுராசனம் எனப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இது பெண் களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோ ளாறுகள் நீங்கும். பெண்களு டைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங் களைச் சுறுசுறுப்படையச் செ ய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும். வயிற்று ப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதையை குறையும்.

பத்மாசனம்

பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசை வு அற்று ஒரேநிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்க ளின் சிந்தனைகளின் ஓட்டமும் சம ன்படுகிறது. இதனால் மனம் சலனம ற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமா கும்.

உற்சாகம் கூடும்

யோகா பயிற்சியின் உடலானது கட் டுக்கோப்பாக மாறுகிறது எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உடலில் இருக்கு ம் தேவையற்ற கொழுப்பு கரைந் து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவி ல் இருக்காது என்பது உறுதி. இதனால் தன்ன ம்பிக்கை அதிகரிப்பதோடு இல்லற வாழ்க் கையிலும் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍
பகிரப்பட்ட‍ இடுகையை உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: