அசைவ உணவு சாப்பிடுபவர்களைவிட சைவ உணவு சாப்பிடுபவர்க ளின் ஆயுட்காலம் அதிகரிக்கிற து என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அசைவம் உண்பவர்களைவிட காய்கறி உண வை உண்பவர்கள் 6 முதல் 9 ஆண் டுகள் அதிகமாக உயிர் வாழ்கின்ற னராம்.
நோய் தாக்குதல் குறைவு
அமெரிக்காவின் உள்ள கலிபோர் னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பழங்கள், பச்சைக் காய்கறிக ள், பயறு வகைகள், ஆகியவை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர், இருதய நோய்கள், டைப் 2 நீரிழி வு நோய், ஆகியவை தடுக்கப் பெறுவதோடு, உடல் எடை குறி யீடு, மற்றும் இடுப்புப்பகுதி பரு மன் ஆகியவையும் கட்டுப்பட்டி ல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட து.
மூளை நல்ல ஆரோக்கியம்
சைவ உணவு உண்பவர்களின் மூளையின் ஆரோக்கியமும் பராமரி க்கப்படுவதாக இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இறைச்சி சாப் பிடுபவர்களைக் காட்டிலும் காய்கறி உணவு உண்பவர்க ளின் உடல் எடை சுமார் 30 பவுண்டுகள் வரை குறைவாக உள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபணம்
1970களிலும் 80களிலும் லோமா லிண்டா பல்கலைக் கழகம் ஆயிரக்கணக்கான செவெந்த்டே அட்வென்டிஸ்ட் கிறிஸ்து வர்களை வைத்து இந்த ஆய்வினை மேற்கொண்டது. அப்போதே வெஜிடேரியன் உணவு எடுத்துக் கொள்பவர்களின் ஆயுள் அதிகம் என்பது தெரிய வந்தது.
சைவ உணவே ஆரோக்கியம்
தேசிய சுகாதார கழகம் லோமா பல்கலைக் கழகத்தினருக்கு 2002 ஆம் ஆண்டு நிதி அளித்து இந்த ஆய்வை மேலும் நடத்து மாறு கூறியது. இந்த ஆய்வில் அமெரிக்க, மற்றும் கனடா நாட் டைச் சேர்ந்த மாமிச உணவு எடு த்துக் கொள்ளாத கிருஸ்துவர்கள் பங்கேற்றனர். 96,000 நபர்களை வைத்துமேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சைவ உணவு பற்றிய தங்களது முடிவுகளை மிகவும் உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளர்.
பத்தாண்டுகள் அதிகம் வாழலா ம்
சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்டு வந்த ஆண்கள் சராசரி யாக 83 வயது வரையிலும் பெண் கள் சரசாரியாக 85 வயது வரையி லும் உயிர் வாழ்வது கண்டறியப்ப ட்டது. அதாவது அசைவம் உண்பவர்களைக் காட்டிலும் இவர்களது ஆயுள் சுமார் 10 ஆண்டுகள் அதிகரிப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள து.
உடல் எடை குறியீடு குறையும்
இறைச்சி உண்பதனால் ஏற்படு ம் அளவுக்கதிகமான உடல் பரு மன் ஆப்பிரிக்க – அமெரிக்க பெ ண்களின் ஆயுளை 6.2% குறை க்கிறது என்பதும் இந்த ஆய்வி ன் தகவலாகும்.பாடிமாஸ் இன்டெக்ஸ் என்று கூறப்படும் உடல் எடை குறியீடு அளவுகோல்களின்படி சைவ உணவாளர்கள், அசைவம் உண்பவர்களை விட 5 யூனிட் எடை குறைவாக உள்ளது தெரியவந்தது.
வாரம் ஒருநாள் தப்பில்லையாம்
அசைவத்தை தினசரி சாப்பிடுபவர்கள்தா ன் இந்த ஆய்வு முடிவு பற்றி கவலைப்பட வேண்டும். வாரம் ஒருமுறை மட்டும் இறைச்சி எடுத்துக் கொள்பவர்கள் அல்ல து இறைச்சி உணவை கட்டுப்பாடோடு உண்பவர்களுக்கு நோய்கள் கட்டுப்படுகி ன்றன என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அருமையான பதிவுகள்
Gd