Sunday, December 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்யத்தின் தொடர் வெற்றிக்கு . . .

இல்லற வாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானது. கணவன் மனைவியிடையே உற வில் எந்தவித பாதிப்பும் ஏற்படா மல் இருக்கவும் தாம்பத்யத்தின் தொடர் வெற்றிக்கும் இருவரின் உடல் நலமும் மனநலமும் முக் கியம். ஏதாவது ஒன்றில் சிக்கல் எழும் போது உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே இனிமை யான சங்கீதமாய் இல்லறம் இனி க்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

உணவுக்கும் உறவுக்கும் இடைவெளி

உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உண்டு. சத்தான உணவுகள்தான் சந்ததியை நிர்ணயிக்கின்றன என்றும் கூட முன்னோர்கள் கூறுவார்கள். எனவே அன் றாட உணவில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புரதம், கொழுப்பு, வைட்டமின் கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உண வுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரை கள் போன்றவற்றையும் உண்ண வேண்டு ம். முக்கியமாக உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குள் உறவில் ஈடுபடக்கூடாது என்கின்றனர். இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும்.

மென்மையான ரசனை

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்ப தும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத் தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். உறவுக்குமுன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன் விளையாடலுறவு முழுமைபெற உதவும்.

எந்திரத்தனம் வேண்டாம்

தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரைய ரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். அடிக்கடிவரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கிய த்தைச் சீர்குலைக்கும். மேலும் தாம்பத்ய உறவில் எந்திரத்தனங்க ளும், எல்லைமீறல்களும் இனி மை தராது.

மன ஒற்றுமை வேண்டும்

கணவன் மனைவியரிடையே ஏற் படும் கருத்துவேறுபாடுகள், மன இறுக்கங்கள் போன்றவைகளை நீடிக்க விடக்கூடாது. ஒருவருக் கொருவர் பரஸ்பரம் புரிதலோடு அவற்றை பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உட ல்களால் மட்டும் இயங்கி தேகவேட் கையைத் தணிக்க முயற்சிப் பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த மனப் பாதிப்புகள் தாம்பத்திய உற வுக்கு பெரும் எதிரி.

அச்சம் தேவையில்லை

எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோ பதி மருந்துகளை உண்ணக்கூடா து. வயது அதிகமாகும் போது. தாம் பத்திய உறவு இயலாமல் போய்வி டுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.

இது விதை2விருட்சம் பதிவு அல்ல‍

இந்த இடுகை பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

One Comment

Leave a Reply