Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (28/10) “எனக்கு நீ தான் மனைவி. உன் குழந்தைகள் என் குழந்தைகள். நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்.

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு திருமணமாகி, 10 வரு டங்கள் முடிந்து விட்டன. டிகிரி முடி த்த நான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொழிற்கல்வி பயின் றேன். கணவரிடம் சண்டையிட்டு பயின்றேன். நான் குடும்பத்தை மிக வும் பொறுப்போடுதான் கவனித்துக் கொள்கிறேன்.

சிறு குழந்தையிலிருந்து மிகவும் அமைதியான, அறிவு நிறைந்த, பொ றுப்பான பெண்ணாகத்தான் வளர்க்க ப்பட்டேன் என் அம்மாவால். அப்பா வேறு திருமணம் செய்துகொ ண்டு போய்விட்டார். தாலி யைக்கழற்றி கையில்கொடுத்து, சென்று விடு என்று, என் அப்பாவை அனுப்பிய வீரப்பெண்மணி என் அம்மா.

அவரால் வளர்க்கப்பட்ட நான், என் அம்மாவின் கஷ்டங்களையும், வேதனைகளையும் புரிந்து வளர்ந்தேன். அம்மாவிற்கு அவப்பெயர் வரக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்து, பொறுப்பாக படித்து, அம்மாவின் ஆசைப்படி, அவர் அண்ணன் பையனை மணந்தேன்.

அவரும் படித்தவர்தான், என்னை விட அதிகமாகவே. இருந்தும், அவ ர், என்னை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. என் கணவருக்கு, அவர் அம்மா, அப்பா தான் முக்கியம். அவர்கள் வாக்கு, வேதம். அம் மா, நான் தவறு சொல்லவில்லை; நானும் மதிக்கிறேன். நான் மன தார யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை.

கடவுளிடம் நான் வைக்கும் முதல் பிரார்த்தனையே, “எல்லாருக்கும் நல்லது நினைக்கக்கூடிய நல்ல மனதைக் கொடு’ என்பது தான்.

எதிர்காலத்தில், எனக்கு கடவுள் சந்தர்ப்பம் கொடுத்தால், அனாதை க் குழுந்தைகளையும், முதியோர்களையும் தத்து எடுத்து காப்பாற்ற வேண்டும் என்பது என் லட்சியம்.

என் கணவர் நல்லவர் தான். ஆனால், எப்படி இருக்க வேண்டும், அன் பு காட்ட வேண்டும் என தெரியாதவர். அம்மா, அப்பா தான் எல்லாம். நான் சம்பளம் இல்லா வேலைக்காரி அவருக்கு. ஆண் என்ற அகம் பாவம் அதிகம். மாமனாரும், என் கணவரும், பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்பாதவர்கள்.

நான் கல்வி பயிலச் சென்றது பிடிக்கவில்லை. என் கணவர், பாரா முகமாய், நான் உடம்பு சரியில்லாமல் இருந்தால் கூட, “என் பெற் றோருக்கு சமைத்து வைத்துவிட்டு போ…’ என்பார்.

நான் அன்புக்காக ஏங்குகிறேன். என் பிறந்த வீட்டினரின் அன்பான வார்த்தைகளும், அவர்கள் என் மீது காட்டிய பாசமும் நினைவுக்கு வருகிறது. 

இந்நிலையில், என்னுடன் பயில வந்த ஒருவனுக்கு, ஆறுதல் சொ ல்லும் தோழியானேன். அவன், என்னை விட ஒரு வயது சிறியவன், என்னை மிகவும் பிடித்து விட்டது அவனுக்கு; எனக்கும் தான்.

அவன், என்மீது அதிக உரிமை எடுத்து, எங்கும் செல்லக்கூடாது, யாருடனும் பேசக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது. உனக்கு எல்லாமே நான் செய்கிறேன் என்றான். அதைபோல், பார்த்து பார்த் து செய்தான். அவனுடைய அன்பிற்கு அடிமையாகி, என் நல்ல நண் பர்களை இழந்தேன். 24 மணி நேரமும் என்னுடன் பேச ஆசைப்பட்டு பேசுவான்; நான் எங்கள் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு செல்லு ம் போது கூட, பேசச் சொல்லி, “டார்ச்சர்’ கொடுப்பான்.

என் குடும்பத்திற்கு, அம்மா முதல் கணவர் வரை, நல்ல நண்பனாகத் தெரிந்தான். அவனுக்காக என் கணவரிடம், ஒரு தொழிலையும் உரு வாக்கித் தரச் செய்தேன்.

என் கணவர், தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்லும் போது, நாங்கள் நிறைய முறை தவறு செய்து இருக்கிறோம்.

“எனக்கு நீ தான் மனைவி. உன் குழந்தைகள் என் குழந்தைகள். நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வேன். அப்போது தான், என்னை வீட்டில் கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்த மாட்டார் கள்…’ என்றான்.

நான், என் குடும்பத்தை விட்டு வரமாட்டேன். கல்யாணம்செய்து கொ ள்ள வற்புறுத்தி, பெண்பார்க்க அனுப்பினேன் அவனை.

“உன் வற்புறுத்தலாலே நான் கல்யாணம் செய்து கொள்கிறேன்…’ என்றான். இப்போது அப்பெண்ணோடு, 22 மணி நேரமும், என்னோ டு இரண்டு மணி நேரமும் பேசுகிறான். அந்த நேரத்திலும், “சும்மா போன், எஸ்.எம்.எஸ்., செய்து, “டார்ச்சர்’ செய்யாதே. உன்னால ஒரு பெண்ணோட வாழ்க்கையே பாழாய்ப்போச்சு. நான், உன்னை விட்டு ட்டு போகலை. சூழ்நிலை அப்படி…’ என்கிறான்.

அம்மா, சத்தியமாகச் சொல்கிறேன்… இப்போது வரை, என் குடும்பத் தை சிறு குறையும் இல்லாமல் நன்றாகவே கவனித்து வருகிறேன்.

அம்மா, என்னால், அவனது உதாசீனத்தை தாங்க முடியவில்லை. நிறைய இளைத்து விட்டேன். சாப்பிட முடியவில்லை, தூங்க முடிய வில்லை.

எனக்கு, அவனின் அன்பு வார்த்தைகள் போதும்; இவ்வுலகில் நிறை ய சாதிப்பேன். நான் தொல்லை கொடுக்கவோ, கெடுதலோ நினைக் கவில்லை. நன்றாக இருக்கட்டும்.

என் பணமும், என் உடல் சுகமும், என் திறமையும் மட்டும் அவ்வப் போது தேவைப்படுகிறது அவனுக்கு.

மலையின் உச்சியில் சாவதற்கு நின்று கொண்டிருக்கும் நான், கடை சி பிரார்த்தனையாக, ஆசையாக உங்கள் பதிலை எதிர்பார்க்கிறே ன்.

உங்கள் பதில் விரைவில் இருந்தால், நான் வாழக்கூட வழிவகுக்கு ம் என நம்புகிறேன். எனக்கு விரைவில் உங்கள் வழிகாட்டுதலைக் கூறுங்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் வாழ நினைத்து, வாழ்க்கையை தொலைத்து விட்ட பேதை.

— இப்படிக்கு 
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

அம்மாவின் ஆதர்ஷ மகள் நீ. அம்மாவை மகிழ்ச்சிப்படுத்த, அவரின் அண்ணன் மகனையே மணந்திருக்கிறாய். கடிதத்தில், பல பத்திகள், உன்னைப் பற்றி பெருமையாகவும், உன் கணவரைப் பற்றி குறைவா கவும் எழுதியிருக்கிறாய்.

பாரதிகண்ட புதுமைப்பெண்ணாய் வாழநினைத்து, அற்ப சுகத்துக்கா க வாழ்க்கையை தொலைத்துவிட்ட பேதை தான் நீ.

அனாதைக் குழந்தைகளையும், முதியோர் களையும் தத்து எடுத்து பாதுகாக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியம் கொண்ட நீ, ஒரு சுய நல ஆணின் பாராமுகத்துக்கா, தற்கொலை செய்துகொள்வேன் என் கிறாய். எல்லாருக்கும் நல்லது நினைக்கக்கூடிய, நல்ல மனதைக் கொடு என, கடவுளை பிரார்த்திக்கும் நீ, உனக்கு மட்டும் அழிவைக் கேட்கிறாய்.

திருப்தியான பத்து வருட மணவாழ்க்கை. அழகான, அறிவான இரு குழந்தைகள். நெருங்கின சொந்தத்தில் அமைந்த கணவர். பட்டப் படிப்பும், தொழிற்கல்வியும் முடித்துவிட்டு, ஆசிரியைப் பணிக்காக காத்திருக்கிறாய். இத்தனையும் இருந்தும், “அன்புக்காக ஏங்குகிறே ன்’ என்ற போர்வையில், உடன் படித்த ஒருவனோடு, கள்ளத்தொடர்பு வைத்துள்ளாய்.

அவன் ஒரு சுயநல பேய். உன் பணமும், உன் உடல் சுகமும், உன் திற மையும் மட்டும்தான், அவனுக்கு தேவைப்பட்டிருக்கிறது என, நீயே கூறுகிறாய். பின், எதற்கு அவனை கடவுளாய் பாவித்து, அழுகிறாய், புலம்புகிறாய்? உன்னை நம்பி, மூன்று ஜீவன்கள் இருக்க, ஏன் மரண விருப்பம்?

“அவன் பேசினால் போதும்; உன் குடும்பம் வாழும்’ என்றிருக்கிறாய். இந்த வாக்கு மூலம், ஒரு மாயை. அவனுடனான கள்ள உறவுக்காக, உன் உடலும், மனமும் ஏங்கி, இப்படியெல்லாம் பேச வைக்கிறது. அவன் உன்னுடனான உறவை முறித்து, தான் மணந்து கொண்டவ ளுடன் வாழப்போய் விட்டான். நீயும், அவனின் மீதான இச்சையை தொலைத்துவிட்டு, அவனை சந்திப்பதற்கு முன், உன் கணவனுடன் என்ன வாழ்க்கையை வாழ்ந்தாயோ, அந்த வாழ்க்கைக்கு திரும்பு வது புத்திசாலித்தனம்.

அவனுக்காக நீ இறந்தால், உன் குழந்தைகள், “இவர்களின் தாய் கள்ளக்காதலன் பிரிவால், தற்கொலை செய்து கொண்டாள்…’ என்ற ஊரார் அவப்பேச்சுக்களை, ஆயுளுக்கும் சந்திப்பர்; இது தேவையா?

“சனியன் தொலைந்தது…’ என, பாயசம் சாப்பிட்டு, அவனது பிரிவை கொண்டாடு. அவன் என்ன உன்னை உதாசீனப்படுத்துவது; நீ, அவ னை முற்றிலும் புறக்கணி.

உன் கைபேசியிலிருக்கும், அவனது எண்ணை அழித்துவிடு. அவன் ஏதேனும் பரிசுப்பொருட்கள் கொடுத்திருந்தால், அவற்றை எரித்து, சாம்பலாக்கு. கூடா நட்பு, கைநழுவிய வேதனையில், மனம் புதிதாய் இன்னொருவனிடம் ஆறுதல் தேட முயற்சிக்கும். அப்படிப்பட்ட சந்தர் ப்பங்கள் ஏற்படாமல், மகா கவனமாக இரு. குழந்தைகளுடன் கூடு தல் நேரத்தை செலவிடு.

அவனுடன் பழகிய பொழுதுகள் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தி னால், அவனது சுயநல குணங்களை பட்டியலிட்டு பார்த்து, வெறுத் து ஒதுக்கு. கணவனுடன் பேசிப் பேசி, உன் அலை வரிசையையும், அவனது அலைவரிசையையும் நேராக்கு.

உன்னை பிடித்த பீடை ஒழிந்தது என்று, உன்னை நீயே தேற்றி, வாழ் க்கையில் நிதானி. ஒவ்வொரு நாளும், உன் ஆறுதலான நடத்தை, உன் குடும்ப அங்கத்தினர்களுக்கு, பெரு மகிழ்ச்சியை தரட்டும்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: