நம்மில் பலபேர் குழந்தைகளுக்கு விளையாட்டு காணும் சாக்கில் எதையாவது வாயில்போடுவது போல பாவலா காட்டிவிட்டு, அதை கையில் மறைத்துவிட்டு, குழந்தைகளிடம் நான் அதை விழுங்கிவிட்டேன். என்று கூறி யும், பின் அதை வாயிலிருந்து வெளியில் எடுப்பது போல பாவ லா காட்டிவிட்டு கையிலிருந்த விசிலை குழந்தைகளிடம் எடுத்துக்காட்டி, குழந்தைகளை சிரிக்க வைத்த அனுபவம் உண்டு. பல நேரங்களில் அந்த பொருள் தவறு தலாக தொண்டைக்குள் சிக்கிவிட்டால், அந்த விசிலை எடுப்பதற்கு பெரும்பாடாகிவிடும். இப்படியான ஒரு சம்பவத்தை எஸ்.வீ. சே கர் அவர்கள் தனது நாடகமான வண்ணக்கோலங்கள் என்ற நகைச் சுவை நாடகத்தில் நடித்துக் காட்டி யிருப்பார். விசிலை விழுங்கிய அவர்கள் படும்பாட்டினை மிகவும் அற்புதமாகவும், நகைச்சுவையா கவும் நம்மையெல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார்.
நான் சிறுவனாக இருந்த காலக்கட்டத்தில் சென்னை தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிய இந்த வண்ணக்கோலங்கள் நகைச் சுவை நாடகத்தை, பரீட்சை நேரத்திலும் அம்மா அப்பாவிடம் அடி வாங்கியாவது பார்த்துவிடுவேன். நான் ரசித்து சிரித்த அந்த வீடியோவினை நீங்கள் காணுங்கள் ரசியுங்கள்