காலம்காலமாக முட்டையிட்டு குஞ்சி பொறித்து, தனது இனத்தை பெருகும் கோழிகளைந்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் கேர ளாவில் முட்டைபோடும் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது .
கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்த வர் பத்ரன் என்பவரின் மனைவி வளர்த்த ஒரு பெட்டைக்கோழிதான் முட்டைக்கு பதிலாக குட்டி போட்டுள்ள து. இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தாலும் அடைகாப்பதே கிடையாதாம் நேற்று மாலை வீட்டு தோட்டத்தில் மேய்ந்து கொண்டி ருந்த அந்த கோழி. தொப்புள் கொடியோடு ஒரு ‘கோழிக்குட்டியை’ பிரசவித்தது.
தொப்புள் கொடியோடு பிறந்த கோழிக்குட்டியை தாய்க்கோழி கவ னிக்காது சென்று விட்டது. வீட்டில் இருந்தவர்கள் அந்த கோழிக் குட்டியை சுத்தம் செய்து வெதுவெதுப்புக்காக துணியில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். அது தற்போது நல்ல நிலையில் உள்ளது. கோழி ‘குட்டி’ போட்ட அதிசயம் அந்த வீட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.