வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத் த மண்டலமாக புயல் சின்னம் மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களி ல் பலத்த மழை பெய்து வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்த கம், செய்யூர், செங்கல் பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று அதி காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரத்தில் காலையி ல் மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. திருவள் ளுர் மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் பரவலாக மழை பெய்கி றது.
பொன்னேரி, சோழவரம், ஊத்துக்கோட்டை, பெரிய பாளையத்தில் நல்ல மழை கொட்டுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. அடைமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளி யே வர முடியாமல் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம் மாவ ட்ட பள்ளிகளுக்கு காலையிலேயே மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், பட்டாபிராம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் மாணவ- மாணவிகள் கொட் டும் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றனர். ஆனால் 10 மணி அள வில் மாவட்ட நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்தது. இது பற்றி அறிந்ததும் மீண்டும் பெற்றோர் குடை மற் றும் மழை கோட்டு அணிந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைக்க பள்ளிக்கு சென்றனர்.
இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடு முறை அறிவிப்பை காலையிலேயே வெளியிட்டு இருந்தால் மாண வர்கள் மழையில் நனையாமல் இருந்திருப்பார்கள். நாங்களும் வே று வேலை செய்திருப்போம் என்று மாவட்ட நிர்வாகம்மீது குற்றம் சாட்டினர். நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்திலும் மழை பெய் து வருகிறது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக் கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து புயல் பாது காப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளது. தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. பொது மக்கள் மின் கம்பங்கள், மின் மாற்றிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். கால்நடைகளை மின் கம்பங்களில் கட்டக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலர்களு க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
புயல்வெள்ளம் குறித்த தகவல் பெற கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண் 1077 ஐ தொ டர்பு கொள்ளலாம். மேலும் நாகை மாவட்டத்தில் புயல் வெள்ளத் தை கண்காணிக்கவும், தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளவும் கண்காணிப்பு அலுவலராக வீரசண்முகமணி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பலத்த மழை காரணமாக நாகை மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி பள்ளிக ளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கட லோர மாவட்டமான புதுக்கோட்டையில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பிற்பகலில் கடலில் காற்று பலமா க வீசியது. இதனால் அலைகள் மிகவும் உயரமாக எழுந்து வந்தது. குறிப்பாக கோட்டைப்பட்டிணம், ஜெகதாபட்டிணம், முத்துக்குடா பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு செல்லவி ல்லை.
இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் 10 ஆயிரத்துக்கும் மே ற்பட்ட விசைப் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங் களில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறை முகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக் கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என்றும், ஆகவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரி க்கப்பட்டுள்ளது. – malaimalar