Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நன்றாக‌ சிகரெட் பிடியுங்கள்! தொடர்ச்சியாக சிகரெட் பிடியுங்கள்!!

உங்களது பேரக்குழந்தைகள்மீது அக்கறை இல்லாதவராக‌ இருந்தால் . . . ?!

நீங்கள் சிகரெட் பிடிப்பதால் பாதிக்க‍ப்படுவது நீங்கள் மட்டுமல்ல‍ உங்களின் பேரக்குழந்தைகளும்தான்! – ஆய்வில் அதிர்ச்சித்  தகவல்

ஆஸ்துமா என்பது உடல் நலக்குறை வை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு முக்கிய கார ணம் ‘நிக்கோடின்’ பாதிப்பு என கண் டறியப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப காலத்தின்போது அவர்களின் கருவில் வளரும் குழந்தை நுரையீரலை சிகரெட்டில் பயன்படுத் தும் ‘நிகோடின்’ பாதிப்பை ஆஸ்துமாவை உருவாக்குகிறது.

மேலும் அது சிகரெட் பிடிப்பவர்களின் 3-வது தலைமுறையையும் பாதிக்கிறது. இதன் மூலம் அவர்களின் பேரக்குழந்தைகளும் ஆஸ்து மா நோய் தாக்குதலுக்கு ஆளா கின்றனர். இந்த தகவல் கலிபோ ர்னியாவில் உள்ள ஹார்பர்-யூ சி. எல்.ஏ. மெடிக்கல் சென்டர் நிபுண ர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. அவர்கள் கர்ப்பமாக இருந் த எலிகளிடம் ஆய்வு நடத்தி  இதை கண்டறிந்துள்ளனர்.

சிகரெட் பிடிக்கும் அல்லது சிகரெ ட் புகையினால் பாதிக்கப்படும் கர் பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் நுரையீரல் பாதிக் கப்பட்டு செயல்பாடு குறைகிறது. இதன்மூலம் ஆஸ்துமா உருவாகி றது. நிகோடினின் வீரியம் முதல் தலைமுறை குழந்தைகளை தாக்கா விட்டாலும், ரத்தத்தில் தேங்கியிருந் து அது அவர்களின் குழந்தையை பாதிக்கும் என புதிய ஆய்வு தெரிவிக் கிறது. எனவே சிகரெட் பிடிப்பது அவர்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவித்தாலும், பேரக்குழந்தைகளின் நலனையும் அது பாதிக்கி றது.

– malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: