Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எலும்பு நோய்களில் இருந்து தப்பிக்க . . .

எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவி த்துள்ளனர். பெண்களுக்கு மாத விலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ் டி யோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற் படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தி யில்லாமல் எளிதில் உடையு ம் நிலையை அடைகின்றன.

இளைய தலைமுறையினர் பாதிப் பு சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப் பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கா ர்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற் சி செய்யாதது போன்ற காரணங்களா ல் ஆஸ்டியோபோ ரோசிஸ் நோய் இளைஞர்களை தாக்கி வருகிறது.

கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும் இந்த நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் வை ட்டமின் டி குறைபாடினாலும் முதுகெ லும்பை தாக்கும் ஆஸ்டியோபோரோ சிஸ் நோய், பின்னர் கை கால் எலும்பு களையும் பாதிக்க செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்நோய் பாதிப்பிலிருந்து தப்ப லாம் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான உணவுகளை பரிந்துரைத் துள்ளனர்.
 
பால் மற்றும் பால் பொருட்கள்குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிடவேண்டும். சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க்பவுடர் போன்றவற்றில் கால் சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிட லாம். இதனால் எலும்புகள் பலமடையும்.
 
பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீ சியம், மாங்கனீஸ், பாஸ் பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள் வதன் மூலம் எலும்புகள் பாதிப்படை யாமல் தப்பிக்கலா ம்.
 
புருக்கோலி, முட்டைக்கோஸ், காலி ப்ளவர், பீட்ரூட், ஓக்ரா போன்ற காய் கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வத ன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந் த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப் பழம், ஆப்பில் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
 
ராகி சாப்பிடுங்களேன்100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவ தன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
 
பேரிச்சை நல்லதுபேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ள து. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகி ன்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
 
எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட் டமின் டி சத்து நிறைந்த உண வுகளை உட்கொள்வது அவ சியம். சூரிய ஒளியில் வைட் டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம்.
 
கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேபோல் சோயபீன், கொ ள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதே போல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவி யல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்க ளில் இருந்து தப்பிக்கலாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍
இந்தபதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: