சென்னையில் தரைதட்டிய கப்பலில் இருந்து காணாமல் போன 5 மாலுமிகளில் மூன்று பேரது சடலம் இன்று காலையில் கரை ஒதுங்கியது.
சென்னை துறைமுகம் மற்றும் அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் இன்று பிற்பகலில் நேப்பியர் பாலம் அருகில் 3வது சடலம் மீட்கப்பட்து. காணாமல் போன மேலும் 2 பே ரை தேடும் பணி நடந்து வருகி றது.
கடந்த 31ம் தேதியன்று சென் னையில் வீசிய நீலம் புயல் கார ணமாக சென்னை துறைமுகத் திற்கு கச்சாஎண்ணெய் கொண் டு வந்த மும்பை தனியார் நிறு வனத்திற்கு சொந்தமான பிரதி பா காவிரி என்ற கப்பல் பெசண்ட் நகர் கடற்கரை ஓரம் ஒதுங்கியது.
கடந்த 8ம் தேதி சென்னைக்கு டீசல் ஆயில் ஏற்றி வந்த இந்த கப்பல், பராமரிப்பு பணிகளுக்காக துறைமுகப் பகுதியிலேயே நிறுத்தி வை க்கப்பட்டிருந்தது. புயலின் தாக்கம் காரணமாக கப்பல் கரையை நோ க்கி நகரத்தொடங்கியது. கப்பலில் இருந்த 30க்கும் அதிகமான பணி யாளர்கள், அதனைக் கடலுக்குள் செலுத்த முயற்சி செய்தனர். ஆனா ல், அதற்கு கட்டு ப்படாமல் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்ட கப்பல், பெ சன்ட் நகர் பகுதியில் தரை தட்டி யது.
கப்பலில் இருந்த பணியாளர்கள் சிலர் உயிர்காப்பு படகின் மூலம் கரைக்குச் செல்ல முயன்றனர். ஆனால், கடல் சீற்றம் காரணமாக எழுந்த அலைகளில் சிக்கினர். அப்பகுதியில் இருந்த மீனவர்கள், கடலில் குதித்து அவர்களைக் காப் பாற்றி மருத்துவமனையில் சேர்த் தனர். இருப்பினும், ஒருவர் உயிரி ழந்தார். அவரது பெயர் ஆனந்த மோகன்ராஜ் என்றும், அவர் புதுச் சேரியைச் சேர்ந்தவர் எனவும் தெரி யவந்துள்ளது.
கப்பலில் இருந்த பணியாளர்கள் 37 பேரில் 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போ னவர்களில் எஞ்சியிருக்கும் 2 பேரை தேடும் பணி தொடர்ந்து தீவிர மாக நடைபெற்று வருகிறது.
தரைதட்டிய கப்பல் – எழுந்துள்ள கேள்விகள்… தரை தட்டி நிற்கும் பிரதீபா காவிரி கப்பல் பல்வேறு ச ந்தேகங்களை எழுப்பியுள்ளது. கப் பல் தரை தட்டிய பிறகு அதிலிருப்ப து தான் பாதுகாப்பு என்ற நிலையி ல் ஏன் ஊழியர்கள் கடலில் குதித்த னர்.
மாலுமி அவர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்ற கேள்வி முதன்மையாக எழுகிறது. உதவிகேட்டு துறைமுகத்திற்கோ, கட லோர காவல் படையி னருக்கோ தகவல் அனுப்பப் பட்டதா என்பது தெரியவில்லை. அப்படி இல்லை என்றால் ஏன் என்ற கேள்வியும் எழு ந்துள்ளது.
செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியே மும்பை திரும்பிய கப்பல் ஏன் மீண்டும் சென்னை வந்தது என்பது மிக பெரிய கேள்வியாக உருவா கியுள்ளது. அதே சமயம் உணவு, எரிபொருள் வேண்டும் என்று எந்த உதவியும் கேட்கப்படவில்லை. அதனால், ஏன் கப்பல் வந்தது என்ப து பெரிய கேள்வியாக உள்ளது. மேலும், பிரதீபா காவிரி கப்பலை வேறு திசைக்கு நகர்த்த எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை.
புயலின் போது, உயிர்காக்கும் படகு மூலம் தப்ப முயன்றவர்களை மீனவர்கள் காப்பாற்றிய போது, நீலம் புயலை ஒட்டி, கடலோரப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையி னர் உடனடியா க உதவிக்கு வராதது ஏன் என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள் ளது.