தற்போது கிளம்பிய திடீர் பரபரப்பு: ராஜிவ் கொலை நடந்த ஸ்பாட் டில் எடுக்கப்பட்ட வீடியோ யாரிடம்?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை மத்திய உளவுத்துறை முன் னாள் தலைவர் எம் .கே. நாராயணன் மறைத்து விட்டதாக, கூறப்பட்டுள்ள பரபரப்பான குற்றச்சாட்டை, சி.பி.ஐ. மறுத்துள்ளது.
கொலை நடந்த தினத்தன்று அந்த ஸ்பா ட்டில் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை ஒருகட்டத்தில் விசார ணை அதிகாரிகள் பார்த்திருக்கிறார்க ள். அதன்பின் வீடியோ மாயமாக மறை ந்துவிட்டது. ரகோத்தமன்கூறும் குற்றச் சாட்டு என்னவெ ன்றால் இந்தவீடியோ , அந்த நாட்களில் ஐ.பி. (Intelligence Bureau) தலைவராக இருந்த எம். கே.நாராயணன் வசம் இருந்தது என்பதே.
அவரிடம் இருந்த வீடியோ, எப்படி மாயமாக மறைந்திருக்க முடியும்? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார் ரகோத் தமன்.
இதை மறுத்துள்ளது சி.பி.ஐ. “ராஜிவ் கொ லை வழக்கு புலனாய்வின் போது, சி.பி.ஐ. அற்புதமான முறையில் புலனாய்வு செய்தது. (சொல்பவர், சி.பி.ஐ. அதிகாரி) இந்த புலனாய்வை சுப்ரீம் கோர்ட்டே பாராட்டியுள்ளது. எந் த விதமான தடயமும், எங்கும் மறைக்கப்படவில்லை” என்று மொட் டையாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அதாவது, குறிப்பிட்ட வீடியோவுக் கு என்ன நடந்தது என்ற விளக்கம்,
சி.பி.ஐ.-யின் மறுப்பில் இல்லை!
இங்கு குறிப்பிடப்படும் எம்.கே.நா ராயணன், தற்போது மேற்கு வங்க கவர்னராக உள்ளார். அவரிடம் கருத்து கேட்கலாம் என கொல்கத்தா ராஜ்பவன் அதிகாரிகளை தொ டர்புகொண்டபோது, கவர்னர் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்தபின் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பதிலே வரு கி றது.
சில மீடியாக்களில் வெளியானது போல உளவுத் துறையால் எடுக்கப்பட்ட வீடி யோ அல்ல இந்த வீடி யோ. லோக்கல் காங்கிரஸ்காரர்களின் ஏற்பாட்டில், பாபு என்ற வீடியோகிராபர் எடுத்த வீடியோ அது. கொ லை நடந்த தினத்தன்னு, அந்த கூட்டத்தில் நட ந்த பல விஷயங்கள் அதில் பதிவாகியிருந்தது, மனித வெடி குண்டாக வெடித்த தனு, சிவராசன் ஆகியோர் இருந்த காட்சிகள் உட் பட!