Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேங்காய்: மருத்துவத்தின் அடையாளச் சின்னம்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மரு த்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாது பொரு ட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்து கள் என உடல் இயக்கத்துக்கு தேவைப் படும் அனைத்துச் சத்துக்களும் தேங்கா யில் உள்ளன.  

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத் தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.

கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்க ளுக்காக தயாரிக்கப்படும் மரு ந்துக ளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் தயாரிக்கு ம்போது கிடைக்கும் புண்ணாக் குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த் து தோல் நோய்களுக்கான மரு ந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப் புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியா திகளை குணப்படுத்துகிறது.

தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படு த்தப்படுகிறது-. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற் றுக்கு தேங்காய் பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண் ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைல ங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து .

குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்து க்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்கா ய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பி ட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இள நீர் கொடுத்தல் சரியாகும்.  தே ங்காய் பாலை விளக் கெண் ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். 

தேங்காய்பாலில் காரத்தன்மை உள்ளதால்  அதிக அமிலம் கார ணமாக ஏற்படும் வயிற்று புண் களுக்கு தேங்காய் பால் மிகவு ம் சிறந்தது. உடலுக்கு தேவை யான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உத வுகிறது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

 

One Comment

  • தமிழ்

    நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை.

    -தமிழ்

Leave a Reply