Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

09-11-1987 அன்று நம்மைவிட்டு பிரிந்த தேங்காய் சீனிவாசன் – சில நினைவலைகள்!

“நகைச்சுவை”, “வில்லன்”, “குணச்சித்திரவேடம்”, “கதாநாயகன்” என்று சினிமாவில் ஆல்ரவுண்டராக விளங்கியவர் தேங்காய் சீனி வாசன்.

தேங்காய் சீனிவாசனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண் டம். தந்தை பெயர் ராஜ வேலு முதலியார். தாயார் சுப்பம்மாள். தேங்காய் சீனிவாசன் 1937-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி பிறந்தார். உடன் பிறந்தது 2 சகோதரிகள். 7 வயதில் அவரதுகுடும்பம் சென்னை க்கு வந்தது. ராஜவேலு “கலாட்டா கல்யாணம்” என்ற நாடகத்தில் நடித்தார். நாடகத்தை பார்க்க வந்த மகன் சீனிவாசனிடம் தனது நடிப் பை பற்றி கருத்து கேட்டார். ஆனால் தேங்காய் சீனிவாசன் தந் தையி ன் நடிப்பை புகழவில்லை. நடிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி னார்.
மேலும் அதே நாடகத்தை சிறப்பாக நடத்திக் காட்டுகிறேன்” என்றும் சவால் செய்தார். அதன்ப டியே பெரம்பூர் ரெயில்வே கோச் பாக்டரியில் கொண்டாடப்பட்ட ரெயில்வே வார விழாவில் இடம் பெற்ற “கலாட்டா கல்யாணம்” நாடகத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்தார். விழாவில் அரங்கேறிய சுமார் 45 நாடகங்களில் “கலாட்டா கல் யாணம் சிறந்த நாடகமாக தேர்வு பெற் று ஜனாதிபதியிடம் பரிசுபெற்றது. முத ல் நாடகத்திலேயே அவருக்கு (தேங்கா ய் சீனிவாசனுக்கு) நல்ல பெயர் கிடை த்தது.
அதே நாடகம் பல இடங்களில் மேடை ஏற்றப்பட்டு பாராட்டும் பரிசும் குவிந்த ன. இந்த சந்தர்ப்பத்தில் கதாசிரியர் ரவீ ந்தரும், நடிகர் கே. கண்ணனும் நாடக த்தை பார்த்தார்கள். ரவீந்தர் தனது நாட கக்குழு வில் சேரும்படி அழைத்தார். “ஆனந்த பைரவி”, “விசித்திர வாழ்வு”, “பெண் உரிமை” போன்ற நாட கங்களில் தேங்காய் சீனிவாசன் நடித்தார். பிறகு கே.கண்ணனின் நாடகக் குழுவில் சேர்ந்தார். தேங்காய் சீனிவாசனின் இயற்பெயர் சீனிவாசன். “தேங்காய்” என்ற சொல் பின்னர்தான் இணைந்து கொ ண்டது.
நடிகர் கே.கண்ணனின் “கல்மனம்” நாட கத்தில் சீனிவாசன் “தேங்காய்” வியாபா ரியாக நடித்தார். தேங்காய் வியாபாரி யாக அவர் சிறப்பாக நடித்ததால் நடிகர் கே.ஏ.தங்கவேலு அவருக்கு “தேங்காய்” சீனிவாசன் என்று பட்டம் கொடுத்தார். நாடக ஆசிரியரும், நடிகருமான தங்கன், “கல்மனம்” நாடகத்தை பார்த்தார். தேங் காய் சீனிவாசனின் நடிப்பு அவருக்கு பிடி த்துவிட்டது. அசோசியேட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் “ஒரு விரல்” என்ற படத்தை தயாரிக்க இருந்தது. அந்த படத்தின் தயா ரிப்பாளர் பெர்னாண்டசிடம் சீனிவாசனை அறிமுகம் செய்து சான்ஸ் வாங்கி கொடுத்தார் தங்கன்.
அந்த படத்தில் தேங்காய் சீனி வாசனுக்கு முக்கிய `காமெடி’ வேடம் வழங்கப்பட்டது. “சி.ஐ.டி “யாக வந்த அவர் அதனை சிறப்பாக செய் தார். “ஒருவிரல்” படத்தில் பிரேம் ஆனந்த்- மேஜிக் ராதிகா ஜோடியாக நடி த்திருந்தனர். இந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தையும் தேங்காய் சீனிவாசனிடமே படத் தயாரிப்பாளர் ஒப்படைத்தார். அந்த பொறுப்பையும் அவர் திறம்பட செய்தார். அதைத்தொடர்ந்து அவர் வில்லன், காமெடி, குணச்சித்திரம் என எல்லா வேடங்களி லும் நடித்தார்.
“கலியுக கண்ணன்”, “போர்ட்ட ர் பொன்னுசாமி”, “நான் குடித் துக் கொண்டே இருப்பேன்” முதலிய படங்களில் கதாநாய கனாகவும் நடித்தார். “நான் குடித்துக்கொண்டே இருப்பே ன்” படத்தில் கே.ஆர். விஜயா வுடன் தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக தோன்றினார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் முதல் அதற்கு அடுத்து வந்த தலைமுறை நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர்களுட னும் சேர்ந்து நடித்தார்.
எம்.ஜி.ஆருடன் நடித்ததில் “ரிக் ஷாக்காரன்”, “நம் நாடு”, “இதய க் கனி”, “நினைத்ததை முடிப்ப வன்” போன்ற படங்கள் குறிப்பி டத்தக்கவை. சிவாஜிகணேசனு டன் “வெள்ளை ரோஜா” உள்பட பல படங்களில் நடித்தார். சிவாஜியை வைத்து “கிருஷ்ண ன் வந்தான்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்து வெளியி ட்டார். சொந்தமாக நாடகக்குழு வைத்து நடத்தினார்.
தேங்காய் சீனிவாசன் நடிக்காத சினிமா கம்பெனியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபல நடிகராக விளங்கினார். மொத்தம் 965 படங்களில் நடி த்தார். 28 ஆண்டுகள் தமிழ்தி ரை உலகத்தில் பிரகாசித்தார். 965 படங்களில் நடித்தும் அது பற்றி கர்வம் கொள்ளாதவர், தேங்காய் சீனிவாசன். இது பற் றி அவர் கூறுகையில், “965 படங்க ளில் நடித்ததை நான் பெரிய சாதனையாக நினைக்கவில்லை.
ஒரு காமெடி நடிகர் இவ்வளவு படங்களில் நடிப்பதை விட, கதா நாயக நடிகராக நடித்து இருந் தால் அது சாதனையாகும். மலையாள நடிகர் பிரேம் நசீர் 600 படங்களுக்கு மேல் கதா நா யகனாக நடித்து, உலக கின்ன ஸ் புத்தகத்தில் இடம் பெற்றிரு க்கிறார். அது பாராட்டுக்குரிய து” என்று தேங்காய் சீனிவாசன் சொன்னார். எம்.ஜி.ஆர் மீது அன்பு வைத்திருந்த தேங்காய் சீனிவாசன் அவர் அ.தி.மு.க. கட்சியை தொடங்கியதுமே அதில் உறுப்பினராக சேர்ந்தார். கட்சி நிகழ்ச்சிகளி லும் பங்கேற்றார்.
தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி மும் பையி ல் நடைபெற்ற எம்.ஜி .ஆர். பிறந்த நாள் விழா ஆகும். அவர் அங்கு பேசும்போது, “இ ந்த உயிரும் உடலும் எம்.ஜி. ஆ ருக்காக. அவருக்காக உயிரை க்கொடுக்கவும் தயாராக இரு க்கிறேன்” என்று உணர்ச்சி பொ ங்க பேசினார். அவர் மரணம் அடைவதற்கு முன்பு ஓராண்டு காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டது.
4 மாத காலம் ஆஸ்பத்திரியில் இருந்தார். பித்தப் பையில் 12 கல் இரு ப்பதாகவும், அதற்காக லண்டன் சென்று ஆபரேஷன் செய்து கொ ள்ள வேண்டும் என்றும் டாக் டர்கள் கூறினார்கள். தேங்காய் சீனிவாச னும் லண்டன் செல்ல திட்டமிட்டார். இதற்கிடையில், டாக்டர்களின் சிகிச்சையால், 10 கல்கள் கரைந்தன. அதனால் ஆபரேஷன் தேவையில்லை என்று தீர்மானித்து, மருந்து மூ லம் சிகிச்சை பெற்று வந்தார்.
முன்பு குடிப்பழக்கம் உள்ள தேங்காய் சீனிவாசன், உடல் நலம் பாதி க்கப்பட்ட பின் குடிப்பதை நிறுத்தி விட்டார். இதுபற்றி அவர் ஒரு பேட் டியில் கூறியதாவது:-
“முன்பு அதிகமாக குடித்தேன். 3 வருடமாக குடியை நிறுத்தி விட் டேன். முதலில் ஒரு வாரம் கஷ்ட மாக இருந்தது. தூக்கம் வர வில்லை. மனம் அலைபாய்ந்தது. மனதை கட்டுப்படுத்திக் கொண் டேன். அதன்மூலம் குடியை அறவேநிறுத்திவிட்டேன். “மதுவை விட் டுவிட்டீர்கள். சிகரெட்டையும் விடக்கூடாதா?” என்று என் மனைவி கேட்டாள். அன்று முதல், சிகரெட்டையும் தூரப் போட்டுவிட்டேன்.
இப்போது நன்றாக இருக்கி றேன்” என்று தேங்காய் சீனிவா சன் கூறி இருந்தார். 1987-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெங் களூரில் வசித்து வந்த தேங்காய் சீனிவாசனின் சித்தி மரணம் அடைந்ததால் 16-ம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொ ள்வதற்காக தேங்காய் சீனிவாச ன் தன் குடும்பத்தினருடன் பெங் களூர் சென்றிருந்தார். நிகழ்ச் சியில் கலந்து கொண்டு விட்டு பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை எடுத்து குடும்பத்தினருடன் தங்கினார்.
இரவு அவருக்கு “திடீர்” என்று பக்கவாத நோய் ஏற்பட்டது. உடனே அவரை பெங்களூர் சாந்தி நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன் றுக்கு கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்து பாதிக்கப் பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர் கள் சந்தேகித்தார்கள். எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்ய தீர்மா னித்தனர். ஆனால் 9-11-1987 அன்று அதிகாலையில் அவர் நினைவு திரும்பாமலேயே மரணம் அடைந்தா ர்.
தேங்காய் சீனிவாசனின் உடல் “வேன்” மூலம் சென்னைக்கு கொ ண்டு வரப்பட்டு, சென்னை கோபாலபுரம் ராமசாமி தெருவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்ச லிக்காக வைக்கப்பட்டது. நடிகர் – நடிகை களும் திரை உலக பிரமுகர்களும் திரளாக வந்திருந்து மரியாதை செலுத்தினார்கள். மறுநாள் தேங்காய் சீனிவாசனின் உடல் தக னம் செய்யப்பட்டது. தேங்காய் சீனிவாசனி ன் மனைவி பெயர் லட்சுமி. கீதா, ராஜேஸ்வ ரி என்ற 2 மகள்கள். சிவசங்கர் என்ற ஒரே மகன்.
thanks to malaimalar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: