Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (04/11): நீ வேண்டாம், உன்னுடன் தாம்பத்யம் வேண்டாம்! உன் செலவில் மட்டும் படிப்பாளாக்கும்… ???

அன்புள்ள அம்மாவிற்கு—

நான், 30 வயது ஆண். குள்ளமாக, ஒல்லியாக, ரொம்ப அழகாகவும் இல்லாமல், அசிங்கமாகவும் இல்லாமல் இருப்பேன். என்னுடைய சொந்த ஊர் மதுரை. டிப்ளமோ முடித்து, சென்னையில் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு தனி யார் கம்பெனியில், 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறேன்.

எனக்கு திருமணமாகி, இரண்டு வருடம் ஆகிறது. என் மனைவி யின் வயது 20. 18 வயதிலேயே, அவள் வீட்டில் கட்டாயப்படுத்தி திருமணம்செய்து வைத்து விட்ட னர். அவள், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லியும், என் னை திருமணம்செய்து வைத்துவிட்டனர். நான், பெண் பார்த்து விட் டு வந்து, அவளிடம் போன் செய்து என்னை பிடிக்கிறதா, இல்லையா என்று கேட்டுவிட்டுத்தான், அவளை திருமணம் செய்துகொள்ள சம் மதித்தேன். அப்போது அவள், என்னை பிடிக்கிறது என்று கூறினாள்.

திருமணம் செய்துகொள்ளும்போது, டீச்சர் டிரைனிங் படித்துகொண் டு இருந்தாள். திருமணம் ஆகி, ஒரு வருடம், அவள் மதுரையிலும், நான் சென்னையிலும் இருந்தோம். திருமணமாகி ஒரு மாதம், என் னிடம் எதுவுமே பேசவில்லை. எனக்கே வெறுப்பாகி, ஏன் பேசுவதே இல்லை என வற்புறுத்திக் கேட்டபோதுதான், “என்னை கட்டாயப்ப டுத்திதான், உங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். எனக்கு உங் களை சுத்தமாக பிடிக்கவில்லை’ என்றுகூறினாள். நானும், கொஞ்ச நாள் போனால் மாறி விடுவாள் என விட்டு விட்டேன்.

படிப்பு முடிந்து, சென்னை வந்தபின், டிகிரி படிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். ஒருகல்லுரியில் டிகிரிசேர்த்துவிட்டேன். சென்னை வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. இதுவரை, நாங்கள் இருவரும் சந் தோஷமாக எங்கேயும் வெளியே கூட சென்றதில்லை. கூப்பிட்டாலு ம், வர மறுத்துவிடுகிறாள். என்ன பிரச்னை என்றால், நான், அவளை விட குட்டை, ஒல்லியான தேகம். என்னை பார்க்க கூட அவளுக்கு பிடிக்கவில்லை. அவளுடைய நண்பர்கள், எங்கள் இருவரையும் பார்த்து, இது உன்னுடைய அண்ணனா இல்லை தம்பியா என கேட்டு இருக்கின்றனர். கல்யாணத்திற்கு முன், என்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என தற்கொலை முயற்சிகூட செய்திருக்கிறாள். ஏன் இப்படி இருக்கிறாய், சந்தோஷமாக இரு என்று கூறினால், “என் னை டைவர்ஸ் செய்து விடுங்கள்…’ என கூறுகிறாள்.

கடந்த இரண்டு வருடமாக, அவளுடைய கையைக் கூட தொட்டதில் லை. அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற் காக, வீட்டில் நாங்கள் இருவரும், நீ யாரோ, நான் யாரோ என்று தான் அமர்ந்திருப்போம். கடந்த இரண்டு வருடத்தில், நாங்கள் இரு வரும் பேசி கொண்ட நேரத்தை கணக்கு எடுத்தால், 100 மணி நேரம் கூட இருக்காது. எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எவ்வ ளவோ கற்பனைகளோடு கல்யாணம் செய்து கொண்டேன். இப்படி ஆகிவிட்டதே என, தினமும் வருத்தப்படுகிறேன். என்னுடைய நண்ப ர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது, பொறாமையாக உள்ளது. வண்டியில் வெளியே செல்லும் போது, கணவன் – மனைவி ஏதாவது பேசிக் கொண்டோ அல்லது கட்டிப் பிடித்து செல்வதை பார் க்கும் போதோ, எரிச்சலாக வரும். மூன்று மாதமாக சிகரெட் மற்றும் மது அருந்த ஆரம்பித்துவிட்டேன். இந்த பிரச்னையை எப்படி தீர்ப்ப து? எனக்கு ஏதாவது ஒரு வழி கூறுங்கள் அம்மா!

 இப்படிக்கு,
உங்கள் மகன்.

அன்புள்ள மகனுக்கு—

உன்னுடைய மனைவி போன்ற பல பெண்கள், கற்பனை உலகில் சஞ்சரித்து, தன்னை சுற்றியுள்ளோரை சிரமத்துக்குள்ளாக்குகின்ற னர். கணவன் கறுப்பாய் இருக்கிறானா, சிவப்பாய் இருக்கிறானா, உயரமாய் இருக்கிறானா, குள்ளமாய் இருக்கிறானா என புறத்தோற் றத்தை ஆராயக் கூடாது. அவன் நம்மை நேசிக்கிறானா… நமக்கு உண்மையாய் இருக்கிறானா… குடும்பத்துக்கு போதுமான அளவு சம் பாதிக்கிறானா… மன, உடல் நலத்துடன் திகழ்கிறானா என்று மட்டு மே பார்க்க வேண்டும்.

உன்னை பிடிக்கிறதா, இல்லையா என, திருமணத்திற்கு முன், உன் னவளிடம் சம்மதத்தை கேட்டு பெற்றிருக்கிறாய். அப்போது பிடிக்கி றது என, திருமணத்திற்கு சம்மதித்தவள், திருமணத்திற்கு பின், ஏன் மாற்றி பேசுகிறாள்? திருமணத்திற்கு முன்பே, உன்னவள் தெளிவான முடிவெடுத்திருந்தால், இந்த திருமணமே நடந்திருக்காதே! இரண்டு வருட சங்கடமும் இருந்திருக்காது. திருமணத்திற்கு முன், உன்னவ ள் யாரையும் காதலித்தாளோ; அந்த காதல் உங்களிருவரின் திரும ணத்திற்கு பின்னும் தொடர்கிறதோ என்னவோ!

நீ வேண்டாம்… உன்னுடன் தாம்பத்யம் வேண்டாம். உன் செலவில் மட்டும் படிப்பாளாக்கும்… இதென்ன நியாயம்?

மகனே… நீ நல்லவன். மனைவியின் உள்ளக்கிடக்கை அறிந்து வில கி நிற்கிறாய். பெரும்பாலான ஆண்கள், விருப்பமில்லாத மனைவி யை பலவந்தப்படுத்தி வைத்துக் கொள்வர். பலவந்த தாம்பத்யத்தில் குழந்தை பெறும் பெண்கள், பிடிக்காத கணவனுக்கு வேறு வழியின் றி ஒத்துழைக்க ஆரம்பித்து விடுகின்றனர். அப்படி எந்த விஷப்பரிட் சையிலும் ஈடுபடாது, கண்ணியம் காக்கிறாய். அதற்காக, உன்னை ப் பாராட்டுகிறேன். 

மீதி பதில் நேரடியாக உன் மனைவிக்கு—

மகளே… தங்களுக்கு கணவனாய் வருபவன், இப்படி இருக்க வேண் டும், அப்படி இருக்க வேண்டும் என, கனவு காண்பதில் தவறு ஏதுமி ல்லை. ஆண்களும், தங்களுக்கு மனைவியாய் வரப் போகிறவள் பற் றி, கனவு காணவே செய்கின்றனர். ஆனால், இருபாலரின் கனவுகளு ம், 99 சதவீதம் பலிப்பதில்லை. கட்டின கணவன், மனைவிதான் பேர ழகன் – பேரழகி என பாவித்து, திருமண வாழ்க்கையை வெற்றிகர மாக நடத்துகின்றனர் பெரும்பாலானோர். கிடைத்ததில் திருப்தி அடைவதே தாம்பத்ய வெற்றி ரகசியம்.

உன் கணவனை விவாகரத்து செய்துவிடுகிறாய் என வைத்துக் கொள்வோம். ஒரு கனவு ஆண், உனக்கு இரண்டாம் கணவனாக வந்து வாய்த்து விடுவானா? அதற்கென்ன உத்தரவாதம்?

அரசனை நம்பி புருஷனை கைவிட்டாளாம்; அரசனும், புருஷனும் ஆத்தோட போனாங்களாம் என்கிற கிராமத்து சொலவடை ஒன்று உள்ளது. இருக்கிறதை விட்டுட்டு, பறக்கிறதை பிடிக்க ஆசைப் படக் கூடாது. நாளைக்கு கிடைக்கிற பலாக்காயை விட, இன்னைக்கு கிடைக்கிற களாக்காயே மேல் என்பதை உணர் மகளே.

வீண் வறட்டு பிடிவாதம்செய்து, இரண்டு வருட தாம்பத்யத்தை பாழா க்கினாய். கணவன் குள்ளமாய் இருக்கிறான், ஒடிசலாய் இருக்கிறா ன் என, கணவன்மீது குற்றப்பத்திரிகை வாசிக்காதே. நீயும், உன் கண வனும் வெளியே போனால், உன்னுடைய நண்பர்கள், உன் கணவ னை, உன்னுடைய அண்ணனா அல்லது தம்பியா என கேட்கின்றனர் என வருத்தப்படாதே. நாம் எப்படி இருந்தாலும், என்ன செய்தாலும், நாலுபேர் நாலு விதமாய் விமர்சிக்கத்தான் செய்வர். பிறருக்காக, நாம் வாழ முடியது.

பர்சனாலிட்டி குறைவான ஆண்களை, கணவர்மாராய் அடைந்த அழகு பெண்கள், பொதுவாகவே சிறப்பான வாழ்க்கை வாழ்கின்றன ர். கண்ட்ரோல் ஸ்விட்ச் மனைவியின் கைகளுக்கு வந்துவிடுகிறது.

உன்னுடைய உதாசீனத்தால், உன் கணவன் பெரும் குடிகாரனாகி விடப்போகிறான் ஜாக்கிரதை.

நாலு இஞ்ச் உயரக்குறைவா, நாற்பதாண்டுகால திருமண வாழ்க் கையை சீர்குலைக்க வேண்டும்? சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர், லால்பகதூர் சாஸ்திரி, நெப்போலியன் போனபார்ட் போன்ற உயரக் குறைவான பலர், பொதுவாழ்வில் பிரகாசமாக ஜொலிக்கவில்லை யா?

உன் கணவன், மாதம் இருபதாயிரம் சம்பாதிக்கிறான். நீ விரும்பிய படிப்பை படிக்க வைக்கிறான். உன் சம்மதத்துக்காக, இரண்டு வரு டங்களாய் உன் சுண்டுவிரலைக் கூட தொடாது காத்திருக்கிறான். உன் மீது, டன் கணக்கில் காதலை வைத்திருக்கிறான். ஒரு நல்ல உள்ளத்தை அங்கீகரிக்க உன் பிடிவாதத்தை தளர்த்து: “வெந்த நெல், வயலுக்கு போகாது’ என்பர். தமிழ் பெண்களுக்கு திருமணம் ஒரு முறை தான்.

நல்லதோ கெட்டதோ, இனிப்போ கசப்போ, வாழ்வோ சாவோ, தாலி கட்டிய இவனுடனேயே தாம்பத்யம்செய்து, ஆயுளை முடித்துக்கொ ள் வதுதான் புத்திசாலித்தனம். 

மகனே… இந்த பதிலை, உன் மனைவியிடம் படிக்க கொடு. அதற்கு பின்னும் முரண்டு பிடித்தால், வீட்டு பெரியவர்களிடம் முறையிட்டு, பேசி புரிய வைக்கலாம். அதற்கு பின்னும், விவாகரத்து தான் வேண் டும் என்றால், நல்ல வக்கீலாக பார், மகனே! உன் நல்ல மனதுக்கு, நல்ல வாழ்வு அமையும். வாழ்த்துகள்!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply