இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
.
மதிப்பெண் பட்டியல்!

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலு த்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: காவல்துறையில் புகார் அளித் து ‘கண்டுபிடிக்க முடிய வில்லை’ என சான்றி தழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறு வனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்திசெய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங் க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதி காரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளி யிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குந ருக்கு அனுப்புவார். தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இய க்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும்.
ரேஷன் கார்டு! 
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலு வலர்; நகர்ப்பகுதிகளில் உணவு ப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ண ப் பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். அவர்களின் விசாரணைக்கு ப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
டிரைவிங் லைசென்ஸ்!

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
காலவரையறை: விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
பான் கார்டு!

பான் கார்டு பெற்றுத் தரும் அங் கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல் லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்று ம் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட் கள் .
நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப் பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பங்குச் சந்தை ஆவணம்!

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோ லியோ எண்.
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத்தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டண ம் செலுத்த வேண்டும்.
காலவரையறை விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களு க்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறு வனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்ப டையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத் தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித் தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறு த்தும்.
கிரயப் பத்திரம்!
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரி கையில் வெளியிடப்பட்ட விள ம்பரம், யாரிடமும் இருந்து ஆட் சேபனை வரவில்லை என்பதற் கான நோட்டரி பப்ளிக் ஒரு வரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்ப ரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல் ல வேண்டும்.
டெபிட் கார்டு!
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவர ங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிக பட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக் கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடி யான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப் படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
மனைப் பட்டா!
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ண ப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்து ரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசி ல்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவி டும்.
பாஸ்போர்ட்!
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங் கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத் திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக் கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான் றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலு வலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர் கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது..?
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்க ள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறு படும்).
கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை: கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக் கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைக ளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார் டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்க ளுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பி த்து வாங்க வேண் டும்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் , பகிர்விற்கு நன்றி…
very very nice nanri
I really proud of this news Thanks
Sir yannudaya vandi rc book tholaithupoi vittathu yappadi peruvathu? Replay pannunga sir pls….
காவல்நிலையத்திற்கு சென்று உங்களது ஆர்.சி. புத்தகம் காணவில்லை என்று புகார் கொடுங்கள். முதலில் சி.எஸ்.ஆர். கொடுப்பார்கள் அதைப்பெற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகு சில தினங்களுக்குபிறகு காவல்நிலையம் சென்று எஃப்.ஐ.ஆர். காப்பி யை கேட்டுப் பெறுங்கள். அதன் அந்த எஃப் .ஐ.ஆர் காப்பியின் நகலையும் ஒரு விண்ணப்ப கடிதத்தை எடுத்துக்கொண்டு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு செல்லுங்கள். அங்கே உங்கள வாகனத்தின் ஆர்.ஸி. புத்தகத்தின் ஸ்கிரீன் காப்பி நகல் ஒன்றை உங்களுக்கு கொடுபார்கள். இதுவே உங்கள் ஆர்சி.புத்தகத்தின் நகல். ஆகும்.
பாஸ்போர்ட் மழையில் நனைந்து கிழிந்து விட்டது.புதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி?