நவம்பர் 2012 (இந்த) மாத நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
தமிழக மக்கள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பிரச்சனை களை இந்த ஆட்சியில் சந்தித்து வருகிறார்கள்.
எலியும் பூனையும் குடித்தனம் நடத் தும் மருத்துவமனைகள் . . . மருந்துக் கும் கட்டப்படாத டெங்கு போன்ற புது நோய்கள் … பராமரிப்பின்றி பரிதாபமாய் காட்சித்தரும் சாலைக ள், வழக்கமான காவிரி நீர்ப்பிரச்ச னை … வழக்கத்திற்கு மாறான கூட ங்குளம் போன்ற போராட்டங்கள். . . இவையெல்லவற்றிற்கும் சிகர மாய் 20 மணிநேர மின்வெட்டு, இத்தனைப் பிரச்சனைகளுக்கும் இந் த அரசு என்ன தான் செய்கிறது?
அறிவித்த இலவசங்களை அங்கங்கு தந்திருக்கிறது. அடிக்கடி அமைச்சர்க ளை மாற்றியிருக்கிறது. அரை மணி க்கு ஒரு முறை அதிகாரிகளை பந்தா டியிருக்கிறது. எதிர்க்கட்சி ஊழல்க ளை மட்டும் தோண்டியெடுத்து, அவர் களைத் தண்டித்திருக்கிறது. இதை செய்வோம் அதை செய்வோம் என்று அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடுகிறது. இவைகள் போ தாதா? என்று ஒரு சாரார் கிண் டலாய் கேட்கிறார்கள்.
மத்திய அரசு ஒத்துழைப்பு தர வில்லையே . . . மன்மோகன் சிங் கொஞ்சமும் அசையவில் லையே. . . பிடித்து வைத்த பிள் ளைகளாய் இருக்கும் தமிழக மந்திரிகள் எதுவும் கேட்கவில் லையே… கூடங்குளம் கைகூட வில்லையே. . . பாவம் அம்மா என்னதான் செய்வார்கள் என்று மற்றொரு சாரார் சமாளிக்கிறார்க ள்.
அப்படியானால் இதற்கு யார் தீர்வு காண்பது? வேறு யார் தமிழக முத ல்வர்தான்.
நானே பார்த்துக்கொள்கிறேன் என்கிற தலை கனத்துடன் தனித்துநின்று போரா டாமல் வாருங்கள் ஒரு கை பார்ப் போம் என்று ஒரு மித்துப் போராட வேண்டும். அறைக்குள் இருந்து அறிக்கைகளும் கடிதங்களும் எழுதுவதற்கு மாறாக நேரடியாய் களத்திலிறங்க வேண்டும். அனைத்துக் கட்சித்தலைவர்களையும் ஒன்றுதிரட்டி, அத ற்கு அவரே தலைமையேற்று காவிரி பிரச்சனையோ, மின்சார பிரச்சனையோ பிரதமரைச் சந்தி த்து, தமிழக மக்களின் தேவை யை, உணர்வுகளைத் திட்டவட்ட மாய் தெரிவிக்க வேண்டும்.
குழந்தையின் பசி அறிந்து, தானே தேடிச்சென்று அமுதூட்டு பவள்தான் சிறந்த தாயாக இரு க்க முடியும். தன் குடும்பத்தைக் காப்பாற்ற தன்னையே விற்கக் கூட தயாராய் இருப்பவள்தான் தாய்.
தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் இதை உணர்ந்து மாற வேண் டும். . . தமிழகத்தை தன்னிறைவு கொண்ட மாநிலமாக மாற்ற வே ண்டும்.
இந்த வைர வரிகளின் உரிமையாளர்
உதயம் ராம் (நம் உரத்த சிந்தனை) => கைபேசி 94440 11105
Athenna…? thaayullam konda muthalvar-nnu kadaisi vari……appa enna thaan solla vareengae