Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி; “மக்களால் கிடைத்த வெற்றி!” – ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ஒபாமா மீண்டும் வெற்றி பெற் றுள்ளார். ஓட்டு எண்ணிக்கை ஆர ம்பத்தில் ஒபாமாவும் ரோம்னியும் மாறிமாறி முன்னிலை பெற்று வந் தனர். ஒஹி‌யோ மாகாணத்தில் பதிவான ஓட்டுகள் ஒபாமா வெற்றி யை உறுதிப்படுத்தின. நேற்று நடை பெற்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்துமுடிந்து, ஓட்டு கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளி ல், ஒபாமாவுக்கு ஆதரவாக 283 பிரதிநிகள் ஓட்டும், ரோம்னிக்கு 203 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. வெற்றிக்கு 270 பிரதிநிதிகள் ஓட்டு தேவை. 

மக்களுக்கு டுவிட்டரில்  ஒபாமா நன்றி தெரிவித்தார் :

தனக்கு ஆதரவாக ஓட்டுப்போட்ட மக்களுக்கு, டுவிட்டர் மூலம் ஒபா மா நன்றி தெரிவித்துள்ளார். மக்க ளால் கிடைத்த வெற்றி. இந்த வெற் றி தற்செயலாக கிடைத்ததல்ல; இதை நீ்ங்கள்தான (மக்கள்) உருவா க்கி கொடுத்துள்ளீர்கள். சாதாரண மக்களாலும் எத்தகைய கடுமையா ன சவாலையும் சமாளிக்க முடியும் என்பதை இந்த முடிவு  தெளிவுபடு த்தி உள்ளது என்று ஓபாமா இந்த செய்தியில் குறிப்பிட் டுள்ளார்.

அமெரிக்காவின், 50 மாகாணங்களில், அதிபருக்கான தேர்தல் நடந் தது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் போ ட்டியிட்டனர்.இந்த தேர்தலில், பிரதிநிதிகள் சபைக்கு, 435 பேரும், செனட் சபைக்கு, 100 பேரும், வாஷிங்டன் சார்பில், மூன்று பேரும் என, 538 பிரதி நிதிகள் தேர்வு செய்யப்படுவர்.

இவர்கள் ஓட்டு போட்டு, அதிபர் மற்றும் துணை அதிபரை, அடுத் த மாதம், தேர்வு செய்வர். 270 ஓட்டுகள் பெறுபவரே, அதிபரா க நியமிக் கப்படுவார். 

அதிபர் ஒபாமா, பிரசாரத்தை முடித்து, சிகாகோவில் தங்கியிருக்கி றார். தேர்தல் முடிவு வரும்வரை, விருந்தினர் மாளிகையில் தங்கியி ருப்பார். நேற்று இவர், தனது அதிகாரிகள் மற்றும் நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடி பொ ழுதை போக்கினார்.

அமெரிக்காவில் முன் கூட்டியே ஓட்டுபோடும், நடைமுறை உள் ளது . இதன்படி, 34 மாகாணங்க ளில், 2.7 கோடிபேர், ஏற்கனவே, ஓட்டு போட்டு விட்டனர். நியூ ஹாம்ஷயர், பகுதியில் நேற்று, முதல் ஓட்டு பதிவு துவங்கியது. நியூயார்க்கில், புயல் பாதிப்பால் , இன்னும் நிலைமை சீராகவில்லை. எனவே, “மக்கள் தங்களுக்கு வசதிப்படும் இடத்தில் ஓட்டளிக்கலாம்’ என, நியூயார்க் மாகாண அர சு, நேற்று உத்தரவிட்டது.

-dinamalar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: