Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகே அழகு தேவதை . . . ! – பாடலும் அதன் பொருளும் – வீடியோ

என்னை பெரிதும் கவர்ந்த இந்த பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் இணையம் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொ ள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

1981 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜபார்வை தமிழ்த்திரைப்படம். கமல் ஹாசன் தயாரிப்பில் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், மாதவி, சாருஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது உலக நாயகன் கமல் ஹாச னின் 100 ஆவது திரைக் காவிய ம் என்பது குறிப்பிடத்தக்க‍து.

கதைச்சுருக்க‍ம்

கண்பார்வையில்லாத இளைஞ னும் பணக்கார பெண்ணும் ஒரு வரை ஒருவர் மனப்பூர்வமாக காதலிக்கின்றனர். அந்த இளைஞன் இந்து மதத்தையும், அப்பெண் கிறித்துவ மதத்தையும் சார்ந்தவர்க ளாவர். இவர்களது காத லில் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக ளை, அழகிய காட்சி களாக சிங்கிதம் ஸ்ரீ நிவாச ராவ் தனது இயக்க‍த்தில் காட்டியிரு க்கிறார். படத்தின் உச்ச‍க் கட்ட‍மாக, தேவாலயத்தில், இந்த இளைஞ னின் காதலிக்கு வேறொருவருடன் திருமணத் திற்கான‌ ஒப்பந்த அறிவிப்பு நிகழ்ச்சியில், அந்த காதலியின் விசும்பல் ஒலியை தனது செவி கள் மூலமாக உண ர்ந்த அந்த இளைஞன் இத்திரும ணத்தில் அவளுக்கு விருப்பமில்லை எனத் தெளிவாக அறிந்து கொ ண்டு, தனது நண்பனின் உதவியுடன் தனது காதலியை அவளது தாத்தாவி ன் ஆசியுடன் அழைத்துச் சென்று விடுகிறான்.

படத்தின் சிறப்பம்சங்கள்

வ‌ழக்க‍மான காதல் கதை என்றாலும், பார்வையற்ற‍ இளைஞனுக்கு ம் பணக்கார அழகிய இளம்பெண்ணுக்கும் இடையேயான காதலை ஓரளவுக்குச் சிறப் பான முறையில் காட்சிகளாக வடிவமைத் திருந்தார் சிங்கிதம் ஸ்ரீனிவாசன்.

பார்வையற்ற இளைஞன் வேடத்தில் கமல் ஹாசன் திறம்பட நடித்திருந்தார். அவர் நடித் த சிறந்த திரைப்படங்களில் ராஜ பார்வை முதன்மையான‌ இடத்தை பெற்றுள்ளது. அவரது காதலியாக நடிகை மாதவி நடித்தி ருப்பார். இது இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும்.

இளையராஜாவின் இனிமையான இசை, அருமையான பாடல் வரிக ள், நல்ல‍ கதையம்சம், கமலின் அற்புத நடிப்பு எல்லாம் இருந்தும் இந் த திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறவில்லை அது ஏனோ தெரிய வில்லை. படம் எதிர்பார்த்த‍ வெற்றியை பெறவில்லை என்றாலும் கமலின் பங்களி ப்பும், அவரது நடிப்பும் அவருக்கு மிகப் பெரி ய பாராட்டையும் புகழையும் பெற்றுத் தந்த து அளவில் உண்டு.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற‍ பாடல்களி ல் எனக்கு பிடித்த‍ பாடல்தான் அழகே அழகு தேவதை … என்ற இனிமையான பாடல்!

இந்த பாடலில் கண்பார்வை அற்ற‍ ஒரு காதலன், தனது காதலியின் கூந்தல், முகம், கண்கள், காது, தோள்கள், கைகள், கைவிரல்கள், இடை, தொடை, பாதம் போன்றவற்றை தனது கைகளால் தொட்டு அவளை வர்ணிப்ப‍தாக அமைந்த காட்சி இது.

ஒரு பெண்ணை பார்க்கும் ஒரு ஆடவன் அப்பெண்ணை வர்ணித்து எழுதுவது பாடுவது ஒன்றும் ஆச்ச‍ரியமான விஷய மில்லை. ஆனால் கண் பார்வை இல்லா த ஒரு இளைஞன் தனது காதலியை தொடு உணர்ச்சி மூலம் அறிந்து பாடுவ தாக இக்காட்சி உள்ள‍தால், என்னை மிகவும் கவர்ந்தது இந்த பாடல்

[பாடல் வரிகள் அடைப்புக்குறிக்குள் ( *)]

அவளை ஒட்டு மொத்த‍மாக அழகு தேவதை என்றே வர்ணிக்கிறான் 
(அழகே அழகு.. தேவதை… )

உன்னை வர்ணித்து நான் எழுதும் காவியம் ஓராயிரம் பாவலர் எழு தும் காவியத்திற்கு சமம் (என்ற இருமாப்போடு)
(ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் )

அவளது கூந்தலை தொட்டுப்பார்த்து. . .
(கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது)
மழைபொழியும் கார்மேகம் போல் அவளது கூந்தல் குளிர்ச்சியாக இருப்ப‍தாகவும்,

கூந்தலில் இருந்து, சற்று கீழே வந்து அவளது செவியை தொட்டு. .

(கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும் கேள்வி ஆனது)
அவளது செவி மடல்கள் கேள்விக்குறியின் வடிவமைப்பை கொண் டுள்ள‍தாக,

அங்கிருந்து சற்றே தனது கையை நகர்த்தி, அவளது நெற்றியையும் கண்ணையும் தொட்டு,
(பொன்முகம் தாமரை பூக்களே கண்களோ)
பொன்னான முகத்தில் தாமரைவும் பூக்க‍ளாக அவளது கண்கள் இருப்ப‍தாகவும்,

(மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்)
இந்த வர்ணிப்ப‍தெல்லாம் புறகண்களால் கண்டு சொல்ல‍வில்லை, எனது அகக்கண்ணில் இருந்து சொல்வதாக‌

பல்ல‍வி (அழகே அழகு.. தேவதை…) –

த‌னது காதலனை விளையாட்டு காண்பித்து, பின் அவனது கைவி ரலை மெலிதாக கடிக்கிறாள் இதை உணர்ந்த காதலன்
(சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன)
சிப்பிகள் போல மிருதுவாக அவளது உதடுகள் இருப்ப‍தாகவும்,

அவளது பற்களை தடவிப்பார்த்து,
(சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன)
வரிசையாகவும், ஒரே சீராகவும் அமைந்துள்ள‍ அவளது பற்களை முல்லை பூக்களாகவும்,

அவளது தோள்களை தொட்டுப்பார்த்து
(மூங்கிலே தோள்களோ)
த‌னது காதலியின் தோள்கள் மூங்கில் போல் இருப்ப‍தாகவும்,

அவளது கைவிரல்களை தொட்டுப்பார்த்து,
(தேன்குழல் விரல்களோ ஒரு அஙகம் கைகள் அறியாதது)
அவளது விரல்களை தேன்குழலாகவும், குழந்தையின் பசியை பால் கொடுத்து போக்கும் அந்த மார்பு தனது கைகள் அறியவில்லை என்பதை எவ்வ‍ளவு கண்ணியமாகவும், நாகரீகமாகவும் வர்ணித்து,

பல்ல‍வி – (அழகே அழகு.. தேவதை…)

அவளது இடையை தொட்டுப்பார்த்து
(பூ உலாவும் கொடியை போல இடையை காண்கிறேன்)
அவளது இடை கொடியை போல மெலிதாக இருப்ப‍தாகவும்,

அங்கிருந்து அவளது தொடையை தொட்டுப்பார்த்து,
(போக போக வாழை போல அழகை காண்கிறேன்)
இடையைத்தொடர்ந்து இருக்கும் அவளது தொடையை வாழைபோ ல அழகாக இருப்ப‍தாகவும்,

அப்ப‍டியே அவளது பாதங்களை தொட்டு,
(மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ)
மாவிலைபோன்று மிருதுவாக அவளது பாதங்கள் இருப்ப‍தாகவும், இவ்வ‍ளவு அழகையும் சிறப்பையும் கொண்டுள்ள‍ மங்கை நீ ஒரு புதிய வேதம் என்று வர்ணித்தும்

சற்றே பெருமையுடன்
(இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே !!!!!)
இந்த மண்ணில் இவள் போல் பெண் இல்லை என்றே முடித்திருப் பார்.

பல்ல‍வி – (அழகே அழகு.. தேவதை…)

அந்த பாடலை நீங்களும் கேட்டு, அதன் பொருளை படித்து உணரு ங்கள்

– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: