Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப காலத்தில் வேண்டாம் தாம்பத்தியம் (முழுவதுமாக படிக்க‍வும்)

கர்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களும் கடைசி மூன்று மாதங்க ளும் வேண்டாம் தாம்பத்தியம்

கர்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட் ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உற வு வைத்து க் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவ து மட்டுமின்றி பிறக்கும்குழந்தையி ன் மனநிலையும் பாதிக்கப்படக் கூடும்.

* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம் பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.

* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப்பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக் குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல் நிலை யைப் பொறுத்து இக் கணக்குக் கூடலாம். எனவே அ ப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத் துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காய ங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க் க வேண்டும்.

* பிரசவத்திற்குப் பிறகு பெண் ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகிவிட்டபோதிலும், அவளுக்கு உறவில் விருப்பமில்லை என் று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.

*உறவில் ஈடுபடும்போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ , வலியோ இருந்தால், அதை உடன டியாகத் தவிர்ப்பது நல்லது.

*கருச்சிதைவுக்கு ள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர் களும் மருத்துவரின் ஆலோச னையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண் டும்.

* மாதவிலக்கு நாட்களில் உறவு கொ ண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழு மையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவுகொள்வதன் மூல ம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய் ப்புகள் அதிகம்.

* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களி ல் உறவைத் தவிர்ப் பதே நல்லது.

*கைக்குழந்தையிருக்கும்போது உறவில் ஈடுப ட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய்விடும் என் று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனா ல் இதுவெறும் மூடநம்பிக்கையே. குழந்தை பிற ந்து, குறுகிய காலத்திலேயே உறவுகொண் டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலே யே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

*பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக்கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆ னால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால்வற்றிவிட்டால், அப்பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

* மேலும் கர்பிணிகளின் உடல்நிலையை பொறு த்து மகப்பேறு மருத்துவர்களையும் கலந்தாலோ சிக்க‍வும்.

நன்றி – இளமை

Leave a Reply