Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டியவை

குழந்தைகளே பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டி யவை!

குழந்தைகளே இன்னும் இரண்டே நாள்தான் தீபாவளி வந்துவிடும். உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொ டுத்த‍ புதிய புத்தாடை அணியவும் , இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா?

மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கு ம்போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார் த்துக் கொள்ள‍ சில முன்னெச்ச‍ரிக்கை பற்றிய பதிவே இது!

பட்டாசு வெடிக்கும் முன்பு மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள்

* பொது இடத்தில் வெடி வெ டிக்கும்போது அங்கு மின் கம்பிகள், குடிசைகள், காகி தக் குப்பைகள், பட்டாசு கடைகள், மண்ணெணெய் கடை, பஞ்சு மூட்டை, ஆடையகம் போன் ற பகுதிகளில் வெடி வெடிக்க‍க் கூடாது. மீறி இதுபோன்ற பகுதிகளி ல் வெடிகளை வெடிக்கும் பட்சத்தி ல் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு அதீத உயிர்ச்சேதங்களும் ஏற்படும் அபாயம் உண்டாகும். வெடிகளை திறந்த வெளியில் வைத்துத்தான் வெடிக்க‍ வேண்டு ம்.

* குழந்தைகளே வெடி வெடிக்கும் போது, உங்களோட அம்மா அப்பா அல்ல‍து வீட்டில் உள்ள‍ பெரியவர் களை உங்களது பக்கத்திலேயே இருக்க‍ சொல்லி வெடிகளை வெடி யுங்கள்.

*பட்டாசு வெடிக்கும்முன் ஒரு வாளி நிறைய தண்ணீர் பிடித்து, அதை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் எதிர் பாராமல் தீக்காயமோ அல்ல‍து உங்கள் மீது நெருப்போ பட்டால் உட னே அனைக்க‍ முடியும்

* குழந்தைகளே உங்கள் அப்பா அம்மாவிடம் பருத்தியிலான‌ ஆடைகளை கேட்டு, பெற்று அணி ந்துகொள்ளுங்கள். ஏனென்றால், பருத் தியிலான ஆடை விரைவில் தீப்பிடிக்காது.

குழந்தைகளே செருப்பு போட்டுக்கொண்டு வெடிக்க‍ செல்லுங்கள் ஏனென்றால், ஏற்கெனவே கொ ளுத்தி போட்ட‍ அல்ல‍து மீதமுள்ள‍ வெடி அல்ல‍து சுர்சரா வத்திகளில் எஞ்சியிருக்கும் நெருப்பின் கவ னிக்காமல் நீங்கள் மிதித்தால், தீக் காயம் ஏற்படும் அதை தவிர்க்க‍ வே செருப்பு அணிய சொல்கிறே ன்.

* கம்பி மத்தாப்பு கொளுத்தியபின் அதனை அப்ப‍டி வீதியில் எறிந்து விடாமல் அதனை ஏற்கெனவே நீங் கள் எடுத்து வைத்திருந்த தண்ணீர் நிறைந்த ஒரு வாளியில் போட் டுவிடுங்கள். ஏனென்றால், கொளுத்திய மத்தாப்பு கம்பிகளை வீதி யிலேயே நீங்கள் போட்டுவிட்டீர்கள் என் றால், அதை நீங்கள் மிதிக்க‍ வேண்டியிரு க்கும் அதனால் தீக்காயம் கூட ஏற்படும் அபாயம் உண்டு

* எந்த வெடி வெடிப்ப‍தாக இருந்தாலும் அதன் அருகில் உட்கார்ந்து கொண்டு வெடி க்க‍ கூடாது. நீண்ட ஊதுபத்தி கொண்டு சற் று குனிந்து வெடிக்கு அருகில் உங்களது முகத்தை வைக்காமல் சற்று தள்ளி உங்க ளது கையை மட்டும் நீட்டி வெடியின் திரி யை பற்ற‍வேண்டும். திரியில் சிறு தீப்பொ றி தெரிந்தாலும் உடனே தூர விலகிடுங் கள்.

* புஸ்வாணம் கொளுத்தும் போது மிகவும் கவனமாக கொளுத்த‍ வேண்டும் உட்கார்ந்து கொண்டு கொளுத்த‍க் கூடாது. மேலும் தீக் குச்சி கொண்டோ, ஊதுபத்தி கொண்டோ அவற் றை கொளுத்த‍க் கூடாது. கம்பி மத்தாப்பினை மட்டுமே பயன்படு த்தி கொளுத்த‍ வேண்டும். கொளு த்திய அடுத்த‍ விநாடியே தூர வில கிட வேண்டும்.

* குழந்தைகளே! நீங்கள் பட்டாசு வெடிக்கும்போது உங்களை  யாரா வது பயமுறுத்துபவர்கள் அருகில் இருந்தால், அதாவது வெடிக்கு நெருப்பு வைக்கும் முன்பே வாயால் டாம் என்று சொல்லி உங்கள் பயமுறுத்தி அந்தபயத்தின் காரணமாக கூட தீக்காயம் உங்களுக்கு ஏற்படும். அவ்வாறு யாராவது இருந்தால், பயமுறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டும் அல்ல‍ து அவர்கள் இல்லாத நேரமாக பார்த்து, உங்களது பயமுறுத்தாத பெரியவர்களின் துணை கொண்டு வெடிகளை வெடியுங்கள் .

* குழந்தைகளே! நீங்க‌ள் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கும் போது, அவற்றை உங்களது வீட்டு மொட்டை மாடியிலோ அல்ல‍து ஏதேனும் திறந்த வெளியில் ஒரு கண்ணாடி பாட்டிலினுள் அவற்றை நிற்க வைத்து கொளுத்த‍ வேண்டும். அட்டைபெட்டியிலோ அல்ல‍து கைகளில் பிடித்துக்கொண்டோ அல்ல‍து கொட்டாங்குச்சியில் வை த்தோ வெடிக்க‍க் கூடாது.

*வெடிகளை வெடித்துக் கொண்டிருக்கும் போது,உங்களது கைகளை வாயில் கண் களிலும் வைக்க‍ வேண்டாம். ஏனென்றால், வெடிகளில் உள்ள வெடித்துகள்கள் உங்கள து கைகளில் ஒட்டியிருக்கும். வாயில் வைத் தீர்கள் என்றால், அது கொடிய விழமாக மாறி தீராத வியாதிகளை ஏற்படுத்தும். கண்களில் வெடித்துகள்கள் ஒட்டிய உங்களது கைக ளை வைத்தால், கண் பார்வை பாதிக்கும் அபாயம் உண்டு. பல நேரங்களில் உங்கள து கண்பார்வையை நீங்கள் இழக்க‍ நேரிட லாம்.

* குழந்தைகளே வெடி வெடிக்கும்போது, எந்த ஒரு உணவையும் சாப்பிட வேண்டாம். சாப்பிடவதாக இருந்தா ல் உங்களது கைகளை நன்றாக டெட்டால் அல்ல‍து கிருமி நாசினி எண்ணையை பயன் படுத்தி சுத்த‍மாக கழுவி விட்டு சாப்பிடுங்கள்.

பெற்றோர்களே! உங்களது குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்…

* உங்களது குழந்தைகளின் கண் களில் தீத்துகள்கள் பட் டாலோ அல்ல‍து வெடித்துகள் பட்டா லோ, அவர்களின் கண்களில் எரி ச்சல் போகும் வரை உடனே சுத்த‍மான மிதமான தண்ணீரில் கண்க ளை கழுவி, பின் உரிய கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகி ச்சை மேற்கொள்ள‍ வேண்டும். கண்களை கழுவ குளிர்ந்த நீர் பயன் படுத்த‍க் கூடாது ஏனெனில் குளிர்ந்த நீர் உங்கள் குழந் தையின் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்துவிட்டு, அவர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

*வெடி வெடிக்கும்போது விபத்து ஏதேனும் ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட் டால், அக்காயம் சிறிய அளவு எனில் உடனே வீட்டில் உள்ள‍ தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை தட வி வந்தால் ரணம் ஆறிவிடும் ஆனால் பெரிய காயம் எனில் உடனே அருகில் உள்ள‍ மருத்துவமனைக்கு அழைத்து ச்சென்று தக்க‍ சிகிச் சை மேற்கொள்ளலாம்.

சகோதர உணர்வுடன்
– விதை2விருட்சம்

One Comment

Leave a Reply