Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (11/11): அவளிடம் ஏதாவது வசிய சக்தி இருக்கிறதா?

அன்புள்ள அம்மாவுக்கு —

உங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. அம்மா, நான் படித்து, ஒரு தனியார் கம்பெனியில், நல்ல சம்பளத்தில் வேலை செ#கிறேன். என க்கு, இப்போது, 28 வயதாகிறது. அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும், மதுரையில் சொந்த வீட் டில் இருக்கிறார். எனக்கு, திரும ணத்துக்கு பெண் பார்க்கிறார்.

சமீப காலத்தில் ஏற்பட்ட எதிர்பா ராத ஒரு சூழ்நிலையால், “குறி சொல்லும்’ ஒரு பெண்ணின் காலடியில், அவளுடைய கொத் தடிமையாக விழுந்து கிடக்கிறே ன்.

ஆறு மாதங்களுக்கு முன், என் அலுவலகத்தில் ஏற்பட்ட சில நஷ்ட ங்களால், என்னையும், வேறு சிலரையும் இரண்டு மாதங்களுக்கு வேலைநீக்கம் செய்துவிட்டனர். தேவையானால், மறுபடியும் வே லையில் சேர்த்துக் கொள்வதாக கூறினர். அப்போது இருந்த சூழ்நி லையில், எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. மாதம், 

60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனக்கு, இந் நிகழ்ச்சி, பேரிடியாக அமைந்தது. வேறு இடங்களிலும் வேலை கிடைக்கவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் தான், தெரிந்த ஒரு நண்பர் மூலமாக, மேலே குறிப்பிட்ட, “குறி சொல்லும்’ பெண்ணை பற்றிக் கேள்விப்பட்டேன். “எல்லா பிரச்னைகளும், அவளை தரிசனம் செய்து, அவளுக்கு, “பாத பூஜை’ செய்தால் தீர்ந்து விடும்…’ என்று கூறினார். அவர் சொன்னபடி ஒரு நாள், அவளுடைய வீட்டுக்குப் சென்றேன். 30 வயதுக்கு மேல் மதிப்பிட முடியாது. மிகவும் தெய்வீகமான தோற்றத்துடன் இருந்தா ள். தலையிலிருந்து பாதம் வரை, நிறைய நகைகள் அணிந்திருந் தாள்.

நான் சென்றபோது, ஒரு கணவனும், மனைவியும், அவளுக்கு, “பாத பூஜை’ செய்து கொண்டிருந்தனர். நானும், அவர்கள் அருகில் சென்று உட்கார்ந்து, அவளுடைய பாதங்களுக்கு பூஜை செய்தேன். பூஜை முடிந்தவுடன், அவள் என்னைக் கூப்பிட்டு, “என்ன பிரச்னை?’ என்று கேட்டாள்.

உடனே நான், அவள் காலில் விழுந்து, அவளுடைய பாதங்களைப் பிடித்துக் கதறினேன். “அம்மா, உங்களைத்தான் நான் தெய்வமாக நினைக்கிறேன். நீங்கள் தான், நான் மறுபடியும் வேலையில் சேருவ தற்கு அருள் புரிய வேண்டும்…’ என்று கெஞ்சினேன். அவளுடைய பாத ங்களை, என்னுடைய கண்ணீரால் கழுவினேன்.

அதற்கு அவள், “கவலைப்படாதே… வரும் ஆங்கில மாதம், முதல் தேதியிலிருந்து, நீ பழையபடி, அதே அலுவலகத்தில், அதே சம்பள த்தில் வேலையில் சேருவாய்…’ என்று கூறினாள்.

பின், என்னுடைய தலையின் மீது, அவளுடைய பாதங்களை வைத் து, அருள் புரிந்தாள். அவள் சொன்னது அப்படியே நடந்தது. அவள் சொன்ன தேதியில், மீண்டும் என் அலுவலகத்தில், வேலையில் சேரும்படி கூறினர்.

அன்று இரவே, அவள் வீட்டுக்குச்சென்று, அவள் காலில் விழுந்து, என் நன்றியைத் தெரிவித்தேன். அன்றிலிருந்து, அவள்தான் என் தெய்வம் என்று, நினைக்க ஆரம்பித்து விட்டேன். வார விடுமுறை நாட்களில், அவள் வீடே கதியாகக் கிடக்கிறேன். அவளுக்கு எடுபிடி வேலைகள் செய்கிறேன். அவள் சாப்பிட்ட எச்சில் இலையைக் கூட, மிகவும் பயபக்தியுடன் எடுத்துப் போடுகிறேன்; சந்தர்ப்பம் கிடைக் கும் போதெல்லாம் அவளுக்கு, “பாதபூஜை’ செய்கிறேன். அவளுடை ய பாதங்களைக் கழுவிய நீரை, அவள் எதிரிலேயே அமிர்தமாக நினைத்துக் குடிக்கிறேன்.

இந்த அளவுக்கு, அவளுடைய கொத்தடிமையாக மாறிப்போனது, நிர ந்தரம் ஆகிவிடுமோ? அவளிடம் ஏதாவது வசிய சக்தி இருக்கிறதா? எத்தனை முயற்சி செய்தாலும், என் மனம் உறுதியாக இல்லை. மீண் டும் அவளுடைய வீட்டுக்குச் சென்று, அவள் காலடியில் கிடக்கிறே ன். ஆபீஸ் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், நான் என்ன செய்ய வேண்டும்? மனரீதியாக, நான் சிகிச்சை ஏதாவது செய்து கொள்ள வேண்டுமா?

நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்  டும்?

— இப்படிக்கு,
ங்கள் அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு —

இலக்கண சுத்தத்துடன், அழகான கையெழுத்துடன் கூடிய உன் கடி தம் கிடைத்தது.பொதுவாக குறிசொல்லும் பெண்கள், நாடோடிகளா க இருப்பர். வாய் சிவக்க தாம்பூலம் தரித்திருப்பர். கோடலிக் கொ ண்டை போட்டிருப்பர். நெற்றியில், பெரிய குங்குமப்பொட்டு வைத்தி ருப்பர். சின்னாளப்பட்டி சேலை அணிந்திருப்பர். முன்னங் கையில் பச்சை குத்தியிருப்பர். “ஜெய் ஜக்கம்மா’ எனக்கூறி தான் குறி சொல் ல ஆரம்பிப்பர். பத்து பேருக்கு குறி சொன்னால், ஏழு பேருக்கு ஒரே மாதிரிதான் கூறுவர். குறி சொல்வதற்கு தட்சணையாக, 20, 30; அதிகபட்சம், 50ரூபாய் வாங்குவர்.

ஆனால், நீ சிக்கியுள்ள குறிகாரியோ, குறிசொல்வதற்கு தட்சணை யாக ஆண்களின் சுதந்திரத்தை அல்லவா கேட்கிறாள்!

மனிதன் ஒவ்வொருவனும், தனக்கு பிடித்த வடிவத்தில் கடவுளை கும்பிடுகிறான். ஒவ்வொரு கிராமத்து மனிதனுக்கும், ஆராதிக்க குலதெய்வம் ஒன்று உண்டு. கற்பனை கதைகளில் வரும் நாயக னைக்கூட கடவுளாக கும்பிடுகின்றனர்.

இழந்த வேலையை மீட்டுத் தந்த குறிகாரியை, நீ தெய்வமாய் வண ங்குகிறாய். அவளுக்கு பாதபூஜை செய்து, பூஜை செய்த நீரை குடிக் கிறாய். வேலையில் போதிய கவனமில்லாமல், அவள் காலடியிலே யே வீழ்ந்து கிடக்கிறாய்.

நீ சொல்லும் குறிகாரிக்கு, எதிர்காலத்தை துல்லியமாய் கணிக்கும் அல்லது எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி இருப்பதாக நான் நம்பவில்லை. பொதுவாக, அருள்வாக்குகள், காக்கை உட்கார பனம் பழம் விழும் கதைதான். குறிகாரி திருமணமானவளா, இல் லையா என்பதை நீ கடிதத்தில் தெரிவிக்கவில்லை. நீ பிரம்மச்சாரி. 

அழகான கோவில் சிலை போன்ற கட்டுடல் கொண்ட குறிகாரி, உன் னை செக்சுவலாய் கவர்ந்திருக்கிறாள். உனக்கு குறிசொன்னது, ஒரு ஆணாய் இருந்திருந்தால், இத்தனை தூரம் அந்த நபருக்கு ஊழியம் செய்திருப்பாயா என்பது சந்தேகமே.

குறிகாரிக்கு நிரந்தர கொத்தடிமை ஆகி விடுவோமோ என பயப் படு கிறாய். நியாயமான பயம் தான். உனக்கும், குறிகாரிக்கும் உடல் ரீதி யான தொடர்பு உண்டா, இல்லையா என்பதை, நீ கடிதத்தில் குறிப் பிடவில்லை. இருக்காது என்றே நம்புகிறேன்.

உனக்கு திருமணமாகி விட்டால், பணியில் புதுப்புது அசைன்மென் ட்கள் வந்துவிட்டால், போதை பழக்கம் போன்ற குறிகாரி நட்பிலிரு ந்து, அறவே விலகி விடுவாய். குறிகாரியிடம் வசிய சக்தி இருக்கிற தா என கேட்டிருக்கிறாய். ஆன்மிகத்தை வைத்து, பணம் சம்பாதிக் கும் ஆணோ, பெண்ணோ, பேச்சுக்கலையில், வல்லமை பெற்றிருப் பர்; எதிராளிகளை ஹிப்னடைஸ் செய்யும் ஆற்றல் கொண்டிருப்பர். உன்னுடைய குறிகாரியும், அத்தகையவளாகத் தான் இருப்பாள்.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே…

அம்மாவிடம் சொல்லி, ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள். தினமும் கண்ணாடி முன் நின்று, “குறிகாரி ஒரு டுபாக்கூர் பார்ட்டி’ என்பதை உரக்க சொல்லி, மனதை ஒரு நிலைப்படுத்து. குறிகாரி வீட்டுக்கு போக தோன்றினால், நினைப்பை மாற்றி, ஏதாவது ஒரு கோவிலுக்கோ, திரையரங்கிற்கோ செல்.

யாருக்காவது கட்டாயம் பாதபூஜை செய்தே ஆகவேண்டுமென தோ ன்றினால், பெற்ற தாய்க்கு பாதபூஜை செய்து மகிழ். வேலை போய் விடுமோ என பயத்துடன் வேலை பார்க்காமல், முழு நம்பிக்கையு டன் வேலை பார். வேலை போனாலும், புலம்பி தவிக்காமல், புதிய வேலை தேடிக்கொள்ளும் மனதைரியத்தை உனக்குள் உருவாக்கிக் கொள்.

குறிகாரியிடம் சரணாகதி அடைந்து கிடப்பது தவறு என்பதை, நீ தெளிவாக உணர்கிறாய். இது நல்ல அறிகுறி. மனரீதியாய் நீ எந்த சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியதில்லை.

குறிகாரி, “உன்னை அடிமையாக இரு…’ என்று, பலவந்தப்படுத்தவி ல்லை. உன்னுடைய பிரச்னைக்கு, முழுகாரணமும் நீதான். முள் செடியில் ஆடை சிக்கிவிட்டால், என்ன செய்கிறோம்? ஆடை கிழி ந்து விடாமல், கைகளை முள் குத்திவிடாமல், லாவகமாக ஆடை யை விடுவிக்கிறோம் இல்லையா? அப்படித்தான், நீயும் ஒரு கூடா பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

குறிகாரியை பார்க்க போகாமலிருக்கும் முதல் சில நாட்கள், மிக சிரமமாய் இருக்கும். பின் நிதானம் வந்து விடும். குறிகாரி அறிமு கம், ஒரு கெட்ட கனவு போல் விடுபடும். குறிகாரியும், சாதாரண மனுஷ பிறவி தான் என்பதை, உளமாற நம்பு.

கடைசியாக ஒரு வார்த்தை மகனே… யாரையும் அடிமையாக்காதே; யாரிடமும் அடிமையாய் இராதே!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

One Comment

 • RAVISANKAR

  11/11/2012
  Dear Friend,

  I can understand your situation.I am giving you a very effective solution.Please follow and free yourself from the “bondage”

  Chant sloka 44 of “SOUNDARYA LAHARI” before the picture of your favourite goddes or the picture of your mother.The sloka is in Sanskrit.You can get the tamil meaning from the book on Soundarya Lahari written by “Ganesha Iyer” published in Chennai.If you want I can send you scanned copy of the relevant pages by e mail.You may e mail to me at ravisankar46@gmail.com

  I am giving you this solution from personal experience.
  with best wishes
  Ravisankar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: