Tuesday, October 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தியானம் செய்யும் போது மனம் குவியதில் சிரமம் ஏற்படுவது ஏன்?

இது நம்மில் பலருக்கு தினசரி ஏற்படும் கேள்வியாகும்…

மாலை பொழுது கதிரவன் மேற்கிலிருந்து மஞ்சள் ஒளியால் கடற்க ரை மணற்பரப்பை குளிப்பாட்டி கொண்டிருக்கிறான். சந்தன மரத்தி ல் கடைந்தெடுத

புத பதுமைபோல் அழகான மாதொருத்தி கடற்காற்றில் கூந்த லும் ஆடையும் வர்ணஜாலம் புரிய நடந்து வருகிறாள். கருங்கூந்தல் கற்றைகள் காற்றில் பிரிந்து அவள் மாம்பழ கன்னத்தில் வித வித மான கோட்டோவியங்களை வரைகின்றது. விழிகளை மூடாம ல் அவள் அழகை விழுங்கி விடுவதுபோல் பார்க்கிறீர்கள். அந்த ரச னையின் இன்ப வேதனை பக்கத்தில் அமர்ந்து இருக்கும் நண்பனை கூட மறக்க செய்கிறது. உங்கள் வயது, தகுதி தாரதரம் எல்லாம் மற ந்து போய் விடுகிறது. காற்று அள்ளி வரும் கடற்கரை மணல் கண்களில் வீழ்ந்தால் கூட அது உருத்துவது இல்லை.

வியாபாரத்தில் பல லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. கிடைத்த பணத் தை வங்கியில் போட ஒவ்வொரு நோட்டுகளாக எண்ணுகிறோம். அரு கில் மனைவி வருகிறாள் கவனிக்க வில்லை. அப்பா கூப்பிடுகிறார் காதி ல் விழவில்லை. குழந்தை மிட்டாய் கேட்டு அழுகிறது. அதுவும் நம து கவனத்தை கவரவில்லை.

மனம் முழுக்க முழுக்க பணத்தை எண் ணுவதை தவிர வேறு எதிலும் நாட்டம் கொள்ளவில்லை. பெண்ணின் அழகை ரசிப்பதிலும் பணத்தை ருசி பார்ப்பதிலு ம் சிந்தாமல் சிதறாமல் ஒருமைப்பாட்டு டன் இருக்கும் மனம் தியானம் என்று உடகார்ந்த உடன் ஆற்றில் நீச்சல் அடிப்பதையும், கடன்காரன் வருவதையு ம் நினைத்து நாலா புறமும் சிதறி ஓடு கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

நமக்கு எதில் ஆர்வமோ எதில் ஆசை யோ அதில் மனது குவிகிறது. மற்றவற்றில் குவிய மறுக்கிறது. சண்டித்தனம் பண்ணுகிறது.

தியானத்தை பற்றி நிறைய பேசுகி றோம். ஆனால் நமது மனம் அதை முக்கயமானதாக நம்புவது இல் லை. அதனால் அசட்டை ஏற்படு கிற து. இந்த அசட்டை தான் நமது முன்னேற்றத்திற்கு பெரிய தடை யாக இருக்கிறது.

இருபத்தி நான்கு மணி நேரத்தில் முப்பது நிமிடத்தை முழுமையாக தியானத்திற்கு ஒதுக்க நம்மால் முடியவில்லை.

எனவே தியானம் செய்வதற்கு மிக முக்கியமான தேவை மன ஒரு மைப்பாடு அல்ல ஆர்வம் மட்டுமே ஆகும்

முதலில் தியானம் செய்ய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் மனம் தானாக குவியும்.

அமானுஷ்யம்

 

Leave a Reply